Monday, 23 December 2013

வேடந்தாங்கல்.

இது மட்டுமா வேடந்தாங்கல்.!

இது மட்டுமா வேடந்தாங்கல்!
இருக்கும் இன்னும் எத்தனையோ!
எதுதான் தாங்கல் சொந்தமோ!
அதுதான் தேடும் அன்றுமோ!

பறவை தேடும் பொருத்தங்கள்
பறந்து எங்கு அமையுமோ!
இருக்கத் தாங்கல் போதாதோ!
பறக்கும் தூரம் தோததோ!

எந்த மண்ணும் சொந்தங்கள்
எங்கும் உண்டும் பந்தங்கள்.
எதற்குத் தாங்கல் வறுமைக்கு
எதற்கு ஏங்கல் பெருமைக்கு?

உலக மெல்லாந் தங்கல்கள்
பழக உள்ளம் எண்ணங்கள்.
உலவத்தானே சிறகுகள்!
நிலத்தில் என்ன உரிமைகள்?

இருக்க மட்டும் இருப்பிடங்கள்.
செருக்கு என்ன பிறப்பிடங்கள்?
இறக்கும் போது மறப்பதற்கு
இருக்கும் போது பொறுப்பெதற்கு?

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment