Wednesday, 25 December 2013

சின்னச் சிட்டு களே.

சின்னச் சிட்டுகளே!
.
சின்னச் சிட்டுக் குருவிளே!--அய்யோ
என்னை விட்டுப் பறந்தீர்களோ!.
என்ன கெட்டு ஆனதென்றோ!-நினைவில்
கண்ணீ ரிட்டுப் போனதெங்கோ!

வீடுகளில் கூடு கட்டி--கூடி
விளையாடும் பறவைகளே!
காடுகளில் தேடுகிறேன்--மனைக்
கொடிகள் தானே பறக்கின்றன!

பாரதியை தேடித்தானோ--பாடிப்
பறந்தங்கும் சென்றீர்களோ!
கூறுங்கள் அவனிடத்தில்!-மீண்டும்
பிறந்து வர பெண்ணிடத்தில். !

சின்னஞ் சிறு இதயங்களோ!--கொடும்
மின்னலைகள் தாங்கலையோ!
சிங்களராய் உம்மினத்தை-அந்தோ
பங்கம் செய்தார் பாவிகளோ!

காலை மாலை கிச்சொலியோ!--இன்னும்
காதை விட்டும் நீங்கலையே!
தங்களுக்குத் தானியமோ--இன்றும்
திண்ணையில் காய்கிறதே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment