Wednesday, 25 December 2013

அழுகையும் சிரிப்பும்.

சிரிப்பும்  அழுகையும்.

அழுகையும் சிரிப்பும்
உளம்தான் பொறுப்பு-வாழ்வின்
இன்பமும் துன்பமும்
தன்வசம் இருப்பு.

மனிதம் கடவுளின்
மகத்துவப் படைப்பு-மனிதர்
அழுகையும் சிரிப்பும்
அவனது கொடையாம்.

அழுமுன் இறுக்கம்
சிரிப்பில் விடுக்கும்-மனம்
அழுவதில் அடங்கிப்பின்
சிரிப்பதில் தொடங்கும்.

அழுவதும் விழுவதும்
எழுவதும் சிரிப்பதும்-உள்
உணர்வுகள் வெளிவிடும்
மனதின் மொழியாம்.

அழவிட்டு வாழ்வான்
அவன்மட்டுஞ் சிரிப்பான்-பிறர்
அழுதிட அழுவான்
தொழுதிடச் சிறப்பான்.

ஏழையின் சிரிப்பில்
இறைவன் இருப்பான்-மனிதன்
வாழ்ந்திடும் நாளில்
அழுதிடப் பாவம்.

தனக்கென வாழ்வாரை
தர்மம் நகைக்கும்-இரங்கி
பிறர்க்கென சாவார்க்கு
அழுது துடிக்கும்.

வாழ்ந்தவன் வாழ்க்கை
வசதியில் சிரிக்கும்-அழுகை
நேர்ந்தவன் தாழ்வில்
நிலைபெறத் தவிக்கும்.


ஒரு நாள் மனிதன்
நிலம்விட்டுப் பறப்பான்-உலகம்
சிரிப்பதும் அழுவதும்
இரண்டும் கலக்கும்..

உனக்காய் மனிதம்
ஒருத் துளிக்கண்ணீர்-பின்னால்
அழுது சிந்தினால் 
அதுதான் வாழ்க்கை.

கதவுகள் இல்லாக்
குடிசைகள் சிரிக்கும்-வீணே
பூட்டுக்குள் முடங்கும்
பொக்கிசம் அழுகும்.

காப்பவன் அழுவான்
பார்பபவன் சிரிப்பான்-அமைதி
தோற்பவன் விழுவான்.
ஏற்பவன் எழுவான்.

சிரித்தால் லாபம்
அழுதால் பாவம்-அவரவர்
பாவம் புண்ணியம்
ஆவதும் எண்ணியும்.

கொ.பெ.பி.அய்யா.













No comments:

Post a Comment