படிக்கப் படிக்க.....
படிக்க படிக்க படிப்பு அறிவில்
புரிந்து துலங்குது-பாடம்
பழக பழக பதிந்து மனம்
தெளிந்து விரியுது.
விரிய விரிய வாதம் வழக்கில்
படிக்க படிக்க படிப்பு அறிவில்
புரிந்து துலங்குது-பாடம்
பழக பழக பதிந்து மனம்
தெளிந்து விரியுது.
விரிய விரிய வாதம் வழக்கில்
திறந்து புரியுது--தேடல்
விளக்க விளக்க வெளிரும் உண்மை
விளங்கித் துலங்குது.
விளக்க விளக்க வெளிரும் உண்மை
விளங்கித் துலங்குது.
தேடத் தேட தெய்வ மூலம்
தூரம் தொலையுது-நம்பி
நெருங்க நெருங்க நெரிந்த ஞானம்
விரிந்து மலருது.
துருவத் துருவ தொலைந்த மெய்
தெரிய ஒளிருது-மாயை
அருகி அருகி அழிந்து பேதம்
அறிவும் தெளியுது,
அறிய அறிய அலையும் நெஞ்சம்
அமைந்து அடங்குது--அறிந்து
அணுக அணுக அமிழ்ந்த முகம்
அடையாளம் அடையுது.
அமைந்து அடங்குது--அறிந்து
அணுக அணுக அமிழ்ந்த முகம்
அடையாளம் அடையுது.
மணக்க மணக்க மணக்கும் நிசம்
கணக்குமது தீருது-உறவும்
கனக்க கனக்க கடமை சுகம்
நினைக்க இனிக்குது.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment