Tuesday, 24 December 2013

எம்ஜிஆர் புகழ் மந்திரம்

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தார் எனுமொரு நிரந்தரம்.
கோடியில் ஒருவன் மனிதன்-ஏழை
சிரிப்பில் நிறைந்த அதிசயம்.

வண்ணமும் எண்ணமும் தங்கம்—புவியில்
வாழ்ந்தது வரையும் சிங்கம்.
இன்னமும் எவர்தான் வெல்லும்—பிறந்தும்
உம்போல் புகழென்ன சொல்லும்.!
.
கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
உழைத்தது எல்லாம் கொடுக்கத்தான்.-என்றும்
கொடையாய் இன்றும் பொழிகின்றாய்.

மரணம் என்பதும் உனக்கில்லை—இந்த
மண்ணில் உன்போல் மனிதரில்லை.
புதைத்ததும் உன்னை விதைக்கத்தான்-விளைந்து
புண்ணியம் நின்று தழைக்கத்தான்.

இருந்த காலங்கள் இழித்தோரும்-பிறவி
துறந்த நாளினை துதிப்பாரும்.
பணிந்தும் உன் படம் காட்டாமல்—இங்கு
துணிவரும் எவரோ !ஓட்டுந்தான்.

ஏழையின் வாழ்வின் ஒளியாக—தமிழ்
இதயம் மேவும்  இமயமே!
நிலைத்தும் உன்புகழ் போற்றுமே!---புகழ்
திரைகளால் பாடி வங்கமே!

கொ.பெ.பி.அய்யா.  

 .



No comments:

Post a Comment