காதல் அலை!!!
நானெழுதிய கவிதையை
யாரிடத்தும் கூறவில்லை
யாரிடத்தும் கூறவில்லை
தானறிந்து பாடுகிறாய்!
தேனொழுகும் வரிகளை
தேனொழுகும் வரிகளை
தேடித்தேடி யெழுதினேனே!
ஏனெப்போ நீயறிந்தாய்?
ஏனெப்போ நீயறிந்தாய்?
சிந்தையது ஒன்றிணைந்து
கொண்டணையத் தேடுகின்ற
கொண்டணையத் தேடுகின்ற
விந்தையிது என்பேனோ!
இதயங்கள் பரிமாறும்
அதிர்வலை அதுசெய்யும்
அதிசயம் என்பேனோ!
இதயங்கள் பரிமாறும்
அதிர்வலை அதுசெய்யும்
அதிசயம் என்பேனோ!
அல்லியை பாடுகிறேன்
நிலவைநீ தேடுகிறாய்!
சொல்லவும் இல்லையே!
சொல்லவும் இல்லையே!
கமலமலர் போற்றுகிறேன்.
கதிரவனை வாழ்த்துகிறாய்!
சமிக்கையும் இல்லையே!
தூதுயார் சொன்னதோ!
வேறுமாயம் என்னவோ!
சமிக்கையும் இல்லையே!
தூதுயார் சொன்னதோ!
வேறுமாயம் என்னவோ!
காதலலை யென்பதோ!
இயற்கையாய் ஆன்மாக்கள்
இயற்றிய தூண்டலோ!
செயலதோ காதலலை!
இயற்றிய தூண்டலோ!
செயலதோ காதலலை!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment