Monday, 23 December 2013

சன்னல் பின்னால்

சாளரம்!

கேளடி தோழியே!
சாளரம் மூடாதே!
ஆளரவம் தெரியவே!

சன்னல் வழிதானோ
இன்னலும் நுழையுமோ!
நின்னாலும் பிழையாமோ!

வெளி வளி வரவுக்கு
வழிவைத்த செலவோ!
விழிமேயும் தரிசோ!

யார் யார் எப்படியோ!
சாத்தாதே சன்னலை!
பார்த்துத் திற வாசலை!

கம்பிக்குள்ளும் பாயுமோ!
கண்கொத்திப் பறவைகள்!
நம்பலாமோ வலைகளை!

சன்னல் பின்னால் தேடும்
உன்னால் பொன்னை விடும்
எண்ணமுண்டோ விழியே!

மனதினை காட்டுமோ!
தினந்துணை சன்னலே!
மனையொளி கன்னிக்கே!

சாளரம் இருக்கட்டும்!
ஆளரவம் தெரியட்டும்!!
கேளரவம் அறியட்டும்!

கொ.பெ.பி.அய்யா.









No comments:

Post a Comment