அக்காலம் மன்னராட்சி,
இக்காலம் மக்களாட்சி.
வருங்காலம் என்னாட்சி?
வாரிசுகள் வந்தாச்சி.
மனம் வீழும் களமானால்
பணம் ஆளும் நிலமாகும்.
உரிமையை விற்ற பின்னே
அடிமையே அவர் பின்னே!
விலைக்கு வாங்கும் அதிகாரம்:
வறுமைக்கு நீட்டுமா உதவிக்கரம்?
அரசியலும் வணிகம் ஆச்சோ!
பொது வாழ்வும் பொய்யாச்சோ!
உரிமை பெற்றும் அடிமையோ!
பெருமை என்ன உரிமைக்கோ!
விதைத்த உயிர் வீணாச்சோ!
சிவத்த நிலம் தரிசாச்சோ!
கட்சிகளை கலைக்கச் சொன்ன
காந்தி கண்ட கனவென்ன!
சுயேச்சைகள் தழைக்கும் என்றால்!
சுதந்திரம் நிலைக்கும் என்றார்.
எண்ணி மீண்டால் குடியாளும்.
பம்மிக் கொண்டால் முடியாளும்.
மக்கள் பயம் பொதுவானால்
தக்க நேரம் இதுவாகும்,
கொ.பெ.பி.அய்யா.