கடவுளுக்குப் பயந்து நீ கட்டுப்பட்டு வாழாதே!
குடும்பத்தை நீ நினைவில் வைத்து கடமைப்படத் தவறாதே!
காவலுக்குப் பயந்து நீ சட்டங்களை மதிக்காதே!
காவலனாய் வாழ்ந்து உன் கடமைகளை மீறாதே!
போலீஸ்க்காகப் பயந்து நீ ஹெல்மெட்டைப் போடவேண்டாம்.
பெண்டாட்டிப் பிள்ளைக்காகத் தலைக்கவசம் மறக்கவேண்டாம்.
குடும்பத்தோட கவசம் நீ
கொண்ட கடமை தவறவேண்டாம்.
தடுமாறும் குடும்ப நிலைப் படும்பாடும் நேரவேண்டாம்.
உயிர்காக்கும் எச்சரிக்கை சாலை விதிகள் மீறும்போது,
உன்னை நம்பும் உயிர்கள் நிலை என்னவென எண்ணும்போது;
பாதுகாக்குஞ் சட்டங்களைப் பாதுகாகாக்கப் பற்றும்போது:
பாதுகாவல் வேறெதற்கு யாதும் நீ ஆகும்போது.
நாம் வாழ வேண்டுமானால் நமக்குத்தான் பொறுப்பிருக்கு.
சட்டங்களும் காவல்களும் சட்டாம் பிள்ளை போலெதற்கு!
மிருகங்களை மேய்க்கத்தான் மெனைக்கெட மேய்ப்பன் வேண்டும்.
மனிதர்களை வழிநடத்த மனம் ஒன்றே போதாதோ!
கொ. பெ. பிச்சையா.