Friday, 27 December 2013

எங்கிருந்து வந்தாள்.

எங்கிருந்து வந்தாளோ!

எங்கிருந்து வந்தாளோ- இவள்
என்னைக் கொல்வதற்கொ!
தங்குமோ என்னுயிரும் இவளைத்
தழுவி அணையும் வரை.

பொங்கும் மின்னலாய் இவள்
பொலி முகம் கண்டப் பின்னும்
தங்குமோ அந்தத் தண்ணிலவும்
மங்கித்தான் வாடினள்!

கோடி நட்சத்திரங்கள் விண்ணில்
கொட்டிக் கிடந்ததில்
ஈடில்லை அவள்கயற் கண்ணில்
தோற்றுத்தான் வீழ்ந்தன.

வானவில்லின் வளர்ந்த வண்ணங்கள்
காணில்லை சேலைத்
தாவணி முந்தனை விரித்தணங்காள்
நாணித்தான் வளைந்தன. 

விழுந்த சூரியன் எழவுமில்லை
ஒளிந்தான் மலையடி.
விழுவன் நானவள் மடிமுல்லை
விடிவதும் வீணடி..

எண்ணித் துள்ளி எழுந்தேனே
முன்னவள் இல்லையே!
கண்ணைக் கசக்கி விழித்தேனே
கனவில் கரைந்தனளே!

கொ.பெ.பி அய்யா.


No comments:

Post a Comment