இதுதான் அரசியலா?
மக்களுக்கே உழைத்திட்ட
மாமனிதர் போற்றிட்ட
மறுவில்லா அரசியல்--இன்று
மறைந்த ஓர் விரசியல்.
காந்தியர் காமராசர்
ஏந்திய தேசியம்.
குடும்பவியம் ஆனதோ-இன்று
தடமாறிப் போனதோ!
விடுதலை விளைத்திட
விதையான உயிர்களே
விளைந்துதான் எழுவீரோ-இன்று
விடியலாய் விளைவீரோ!
ஏமாறுந் தமிழனோ
இழக்கின்றான் சுதந்திரம்..
சோமாறுந் தலைவனோ--இன்று
கொழுக்கின்றான் தினந்தினம்.
தண்ணீரும் தரமறுக்கும்
தரங்கெட்ட அரசியலாம்.
அந்நியரும் செய்யாரே--இந்திய
ஒருமையென பொய்யாதே!
ஒன்றுபட்ட சமுதாயம்
உருவாக்கும் உழைப்பெல்லாம்
விழலுக்கு நீராச்சோ---அந்தோ
வீணாத்தான் ஆயாச்சோ!
அப்பாவித் தொண்டனாக்கி
அடியாளாய் உருமாற்றி
மப்பிலே கொண்டாற்றி--வாழ்வர்
மடமையை அரங்கேற்றி.
இரவிலே விடுதலையோ!
இன்னமும் விடியலையோ!
உறவிலே இந்தியரோ---ஏனோ
உணர்விலே அந்நியரோ!
வாரிசு ஆட்சி முறை
வழக்கிலே ஒழிந்த கறை.
மாறாகிக் கட்சித் தலை--சூதனப்
புறவாசல் புகுந்த பிழை..
எட்டும் வரை நாட்டையே
கட்டுமறைக் கொள்ளையே.
வெட்ட வெளி ஆக்கவோ--பின்
பட்டம் சூடபிள்ளையோ!.
வெக்கங்கெட்ட அரசியல்
நக்கி வாழும் விரசியல்
மக்கள் அப்பாவிகள் ---பாவம்
சொக்கினர் தப்பியல்.
மேடை மொழிப் பேச்செலாம்
காடைப் பிடிக் கூச்சலாம்.
ஆடைதானே வெள்ளையாம்--அவர்
வாடையே கொள்ளையாம்.
அவனை விட்டால் இவனுக்கா ?
இவனை விட்டால் அவனுக்கா?
எவனுக்கென்ன சேவகரோ--தமிழ்
கவனம் வைத்துத்த்துத் தேர்வீரே!!
கொ.பெ.பி.அய்யா..
No comments:
Post a Comment