Thursday, 26 December 2013

பூமிக்கு நரகம் மாறுது

மண்ணில் என்ன நடக்கிறது?

என்ன மண்ணில் நடக்கிறது.
எண்ணம் நெஞ்சில் பதறுது.
திண்ணமில்லா முடிவுகள்-மனிதம்
தன்னைக் கொல்ல துணியுது,

ஆன்மா கண்டு கூடாது
ஆண்டு தன்னை தேடாது.
தூண்டா(த) மணி விளக்காக--மனதும்
மாண்டதுதான்அவலமாய்.

பக்திபயம் விட்டுப் போச்சு.
சத்தி யமும் செத்துப் போச்சு..
பத்தினியும் கொலைகாரி--ஒழுக்கம்
கெட்டதிதும் நிலைமாறி.

பெற்றெடுத்த பெண்ணையும்
அற்றழிக்கும் வன்மையும்
நாயினும் கேவலமாகவே-காமப்
பேய்களின் ஊர்வலம் சூழுது.

தற்கொலைகளும் தினம் தினமே
தவறாமல் செய்திகள் கதறுது.
விற்பனை விபச்சாரங்கள் படறுது.
வேதனையோ வேதனை தொடருது.

அடுத்த மனைக்கு ஏங்கலும்
கெடுக்கும் குடிக்கு  நோங்கலும்
அறம்பிறழ் வாழ்க்கை வீங்கலும்
நரகமே பூமிக்கு மாறுது.!

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment