தீரமா!தீவிரமா!
பாரம் பரியம் தேடத் தேட
தீரம் ஊறுமே-நெஞ்சில்
தீரம் பெருகி கூடக் கூட
வீரம் ஏறுமே.
தீரம் வீரம் என்ன என்ன
தீ வீரமோ-உறவை
கூறு போட எண்ண எண்ண
நேரும் கோரமோ!
தீரம் வீரம் என்ன என்ன
தீ வீரமோ-உறவை
கூறு போட எண்ண எண்ண
நேரும் கோரமோ!
நீதி எங்கும் பேணப் பேண
நீளும் உலகமே-மனிதன்
சாதி தொங்கி வாழ வாழ
சாகும் சமூகமே!
பறவைக் கூட்டம் பாரு பாரு
நிறங்கள் பார்க்குமோ-விலங்கும்
உறவுகள் பேசும் மொழியோ மொழியோ!
பிரிந்தும் வாழுமோ!
காட்டில் என்ன சாமி சாமி
கோவில் செய்யுமோ-அங்கும்
வாழ்வில் என்ன பாவம் பாவம்
மீளக் கெஞ்சுமோ!
உறவுகள் பேசும் மொழியோ மொழியோ!
பிரிந்தும் வாழுமோ!
காட்டில் என்ன சாமி சாமி
கோவில் செய்யுமோ-அங்கும்
வாழ்வில் என்ன பாவம் பாவம்
மீளக் கெஞ்சுமோ!
அறிவு ஒன்று மிஞ்ச மிஞ்ச
முறிந்த மனிதமோ-மரபை
இழந்த மனிதன் நாண நாண
மிருகம் சிரிக்குமோ!
முறிந்த மனிதமோ-மரபை
இழந்த மனிதன் நாண நாண
மிருகம் சிரிக்குமோ!
உருண்டை உலகில் எங்கே எங்கே!
இருக்கும் திசைகளோ-பேதம்
துலங்கும் கதைகள் பேசி பேசி
மறந்த பழமையோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment