Monday, 22 September 2014

ஊளையிடுபவன் கோழை.


ஊளையிடுவான் கோழை.

அன்றவன் போனதெங்கே?
இன்றவன் புலம்பலிங்கே.
அன்றவன் சிங்கி தட்டி. .
இன்றவன் கோழையே?

ஆயுதம் பெற்றிருப்பான்
ஆகும்பயன் மறைத்துவைப்பான்.
சாயும் வேளை ஆனபின்னே
சங்கூதுவான் கோழையே?

ஆடைகளைத் திருத்துவதில்
ஆண்மையைத் தொலைத்திருப்பான்.
உழைத்தவன் வளர்ச்சியிலே
ஊளையிடுவான் கோழையே?

அதிகாரம் கொண்டிருப்பான்.
ஆனாலும் ஓய்ந்திருப்பான்.
விதியெனத் தூங்கி விட்டு
சதியென்பான் கோழையே?

துரியோதனம் சேர்ந்திருப்பான்
வெறியாட்டம் போட்டிருப்பான்.
கர்ணனாய்ப் பாவம் செய்வான்
கொலைகாரன் கோழையே!

தர்மங்கள் பேசுவான்
தர்மங்காணக். கூசுவான்.
பீஸ்மனாய் பாவங்கண்டும்
பாராமுகன் கோழையே!

நேர்கொண்டு போர்செய்யான்.
போர்கண்டு நேர்நில்லான்.
பேர்நின்று புகழ்வெல்லான்
கூரன்று கோழையே!

வீரெனென்று முழங்குவான்.
தீரன் கண்டு களங்குவான்.
புறம்கூறி பேதைபோல்
நிறம்மாறிக் கோழையே!

எதிர்வென்று வாழாதான்
இசைந்திங்கு சேராதான்.
இனங்கொன்று வாழ்பவன்
மனங்கொன்ற கோழையே!

தன்னின்பம் தலையென்பான்
மண்சொந்தம் பலிசெயவான்.
பொய்மையில் பொருள்சேர்ப்பான்.
மெய்மையில் கோழையே!

தம்பி எனக் கூவுவான்.
தன்முதுகு காவல் வைப்பான்.
நம்பியாரை நம்பாதான்
என்றும் அவன் கோழையே!

கொ.பெ.பி.அய்யா.


Friday, 19 September 2014

ஆளுக்கொரு மரம்........தெம்மாங்கு.


ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.(தெம்மாங்கு) 

பெண்:-- 
சரிகைக் கரை வேட்டி கட்டி 
சிலுக்குச்சட்ட மின்னும் மச்சான். 
அம்சமாக எம் ஜி யார 
அச்சாகக் காட்ட வச்சான். 
கண்ணு படும் சாமி-- காலடி 
மண்ணு எடு பூமி. 

ஆண்:- 
ரெட்டப் பின்னல் பாசி மாலை 
வட்டக் கொண்டக் காரி புள்ள 
சிக்குனுதான் சிங்காரமா 
நச்ச்சுன்னுதான் தேவிபோல 
அசத்துறைய குட்டி—நீ 
ஒசத்தி வெல்லக் கட்டி. 

பெண்:- 
என்னப் போல யாரு உண்டு 
இவ்வுலகில் கூறு ஒன்று. 
சும்மா கிடக்கும் காடு என்று 
அம்மான் நீயும் ஆசை கொண்டு. 
நம்பி வந்தால் மோசம்—நானும் 
நம்பிவிட்டால் மாசம். 

ஆண்:- 
என்னவிட யாரு புள்ள. 
உன்னத்தொட ஆளே இல்ல. 
சிந்து கங்கை காவேரியே 
சங்கமித்த சிங்காரியே! 
கை எடுத்தேன் வணங்க.—இது 
பொய் இல்லையே அணங்கே! 

பெண்:- 
உனக்கு நானே முந்தி தந்து 
எனக்கு நீயே தொந்தி தந்து 
கணக்கு ரெண்டு ஆணும் பெண்ணும் 
மணக்க என்றும் வாழ வேணும். 
நமக்கு நல்ல காலம்---அன்று 
நடத்து உந்தன் யோகம். 

ஆண்:- 
நதியெல்லாம் பெருகி வரும் 
நிலம்பஞ்சம் அருகி விடும். 
ஆறெல்லாம் கைகோர்க்கும். 
ஊரோடும் நமை வாழ்த்தும். 
இருவர் அன்று இணைவோ.ம்—நாம் 
திருமணமும் செய்வோம். 

பெண்:- 
நாடு வளம் ஆகுமுன்னா. 
வீடு நலம் வாழுமுன்னா. 
ஆளுக்கொரு மரம் நடுவோம். 
வாழ்வுக்கது வரம் கொடுக்கும். 
புள்ள குட்டி போல—காடும் 
எல்லாம் கட்டிக் காப்போம். 

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 17 September 2014

இவ்வளவுதான் வாழ்க்கை.


இதுதான் வாழ்க்கை. 

கிடக்கும் போதுதான் போடும் மல்லாக்கா 
கடக்கும் போதுதான் பூவும் பல்லாக்கா? 
இருக்கும் போதுதான் வாழும் நரகமா? 
பறக்கும் போதுதான் தேடும் சொர்க்கமா? 

மல்லாக்கப் படுத்துனது பல்லாக்குப் போகுது. 
சொல்வாக்கு அடுத்துனது பின்னாலே பேசுது.
நல்லவனா பொல்லவனா எல்லாமே புரியுது
செத்தவனா வாழ்ந்த பிணம் என்றுதான் விளங்குது.

பீச்சிந்திப் படுக்கையில் துரு நாற்றமா? 
பூச்சிந்தி நடக்கையில் அது மாற்றுமா? 
கொட்டுமேளம் வெடிகளும் செய்யும் சத்தமா? 
பட்டபாவம் மறைக்கவும் இது பத்துமா? 

சொத்துக்கள் பத்துக்கள் எதுவும் காக்குமா? 
பற்றுக்கள் பாசங்கள் அதுவும் மீட்குமா? 
எத்தனை வயிற்றெரிச்சல் எதுக்கது தேவையா? 
என்னநீ கொண்டங்கு போவாயோ காடய்யா? 

உனக்காக வீடழுதால் நீசெய்த உன்பாவம் 
உறவாக ஊரழுதால் பேர்செய்த தன்யோகம். 
உனக்காக நீ வாழ்ந்தால் ஊரறியாது.
உலகுக்காக உயிர் வாழ்ந்தால் பேரழியாது.

தாயிடம்தான் ஜீவன்கள் பயணம் தொடக்கமே.. 
தீயிடம்தான் தூலங்கள் பயணம் அடக்கமே. 
இடையில்சிறு பயணம்தான் வாழ்க்கை என்பதே.
முடிவினில்பிடி சாம்பல்தான் மனிதன் என்பானே!

சொந்தங்களும் சுற்றியழும் கூட  வருமா?
சுட்டெரிக்கும் நேரம்வரை கூடி அழுமா?
பந்தங்கள் எத்தனை நாள் நினைத்திருக்குமோ!
அந்த நாள் பதினாறில் மறந்து போகுமே.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 16 September 2014


பொய்யான உறவுகள். 

தேவைப்படும் போதுதானே ஓடிப்போய் ஒதுங்குவார். 
தேவைபட்டால் நாதியெனத் தேடிவந்து சினுங்குவார். 
இரக்கத்தை இறக்கிவைப்பார் இக்கட்டு வேளையே—செல்வப் 
பெருக்கத்தில் உறவணைவார் பற்றியும் காலையே. 

நாதியற்று வீழும்போது சாதிதொட்டு உதவாது. 
சாதிகெட்டுத் தாழும்போது நாதிகிட்டே நெருங்காது.. 
நாதியென்ன சாதியென்ன எதுஉன்னைச் சீண்டும்.?---பணத்துக்காக 
சாதியெல்லாம் நாதியென மதில்ஏறித் தாண்டும். 

பிணம்கூட மெய்யாட்டும் பணமென்றால் கைநீட்டும் 
வனமேகத் தான்மட்டும் கனமேறிக் கைநழுவும். 
பற்றுபந்தம் சுற்றமெல்லாம் பகலாடும் வேசம்---சும்மா 
ஓட்டவந்த சொந்தமெல்லாம் பொருள்நாடும் மோசம்.. 

இருக்கும்போது பட்டினியில் கிடத்திவைக்கும் மனமா? 
இறந்தபின்னே மேளதாளம் வெடிமுழக்கம் பணமா? 
ஊருமெச்ச பூந்தேரும் ஊர்கோலம் எதற்கோ?—புழுத்து 
நாறவச்சு மாண்டாரின் நாறக்காசு அதற்கோ? 

பொய்யான உறவுகளை மெய்யென்றும் நம்பாதே! 
மெய்யாக உழைத்ததை பொய்யரிடம் சொல்லாதே! 
இயன்றவரை இருந்துவிட்டு அயரும்போது அரசிடத்தில்—பொருள் 
முயன்றதெல்லாம் பொதுவாக்கி முடிவதும் புண்ணியமே. 

கொ.பெ.பி.அய்யா. .

அம்மாவின் கடிதம்.

அன்புள்ள மகனுக்கு.

அன்புள்ள மகனுக்கு அம்மா எழுதும் கடிதம்.
அரசு தரும் ஆயிரத்தால் அன்னையும் சுபமே.
உண்ண மணிஅரிசியும் உடுத்த துணி சேலையும்
உறங்கத் தனிவிடுதியும் ஒருகுறையும் இல்லை மகனே!

நாயொன்று வளர்த்தாயே அது நலமா மகனே!
தாயன்று ருசித்தகஞ்சியை நாயின்று குடிக்குதா மகனே!
பேயென்று பேசிப்பேர் வைத்தபோது மகிழ்ந்தேன் மகனே!
நாயின்று குரைத்துமகிழ என்னபேர் அழைத்தாய் மகனே!

தாய்க்குத்தந்த அன்னத்தட்டு நாய்க்கும் வேண்டாம் மகனே!
வாய்க்குவந்து எட்டும் போதுபட்டு வெட்டிவிடும் மகனே!
விரலாலோட்டை அடைக்கும் வித்தை நாயுமறியாது மகனே!
மறவாததனை மகனுக்குத் தெரியாமல் ஒளித்துவை மகனே!

உன்தாய் கதையெல்லாம்  உன்மகன் அறியவேண்டாம் மகனே஍
உன்நாய் கதைமட்டும் உன்மகன் புரியட்டும் மகனே஍
சின்னஞ் சிறுவனவன் கவனம் பதிவான் மகனே஍
பின்னும் உனக்கதுவே பரிசாகி வரலாம் மகனே஍

தாய்நான்படுத்த பாயதுபாவம் நாய்க்கும் வேண்டாம் மகனே!
காய்ந்துகிழிந்த கோரைகிழித்து மேனியதனால் புண்ணாகும் மகனே!
உதறிவிரிக்கப் பழகாநாயும் கதறியழுதும் கண்ணீர்விடும் மகனே!
சிதறியதனை சிதையில்கொழுத்தி சீக்கிரம் அழித்திடு மகனே!

தாய்தான்குளிரை தாங்கியவலிமை நாய்க்கும் வேண்டாம் மகனே!
வேய்போர்வை போர்த்தியும் மெத்தைமேல் கிடத்து மகனே!
தாய்போல் பொறுமையும் நாயும் கொள்ளாது மகனே!
வாயில்லா ஜீவனதும் வருத்தம் சொல்லப்புரியாது மகனே!

தாய்க்கூற்றிய தொட்டிக்கஞ்சி நாய்க்கும் வேண்டாம் மகனே!
சேய்க்காற்றும் சேவையெல்லாம் நாய்க்காற்று நல்ல மகனே!
நன்றியுள்ள பிராணியது நாளையது எண்ணும் மகனே!
என்றுமுன் தாய்நான் ஏங்குமுந்தன் நலம்தான் மகனே!

எப்படிநீ செய்வாயோ அப்படிநீ கொள்வாய் மகனே!
தப்படிநீ வைக்காதே ஒப்படிநீ முன்வை மகனே!
இப்படிநீ வாழ்வாயே என்றுமென் அன்பு மகனே!
இப்படிக்குன் நலம்விரும்பும் என்றுமுன் அன்புத்தாய் மகனே!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 14 September 2014


தரணி என்றும் வாழும்.

தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

பேருக்கு ஒன்று தலைமை
ஊருக்கு ஒன்று நிலைமை
ஆளுக்கு ஒன்று அதிகாரம்
யாருக்கு நின்று செயலாகும்?
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
.
சொந்தம் கூடி கொண்டாடும்
பந்தம் தேடி தந்தாளும்
மந்தை ஒன்று அரசாண்டால்
சந்தை போன்று நாடாகும்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

வியாபாரிகள் நாடாண்டால்
வியாபாரமே பாடென்றால்
விலையாவது மக்களென்றால்
விதியாவது வினைமறந்தால்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

வழக்கு வந்தால் எதிர்கொண்டு
இழுக்ககன்று புதிர் வென்று
நிலைத் தாள்வார் யார்நின்று.
தலைத்தான் வாழ்வே என்று.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 12 September 2014


விடியல் விடியட்டும்.

ஏதோ ஒன்று எண்ணுகிறேன்.
ஏதோ ஒன்று பண்ணுகிறேன்.
தோதாய் வரும் சொற்களுடன்.
சாதகம் பழகி பேசுகிறேன்.

பொழுதைப் போக்க எழுதுகிறேன்.
பொழுதைத் தேடி உலவுகிறேன்.
பொழுது முடிந்து போகுமுன்
பொழுது விடிந்திடப் பாடுகிறேன்.

அவசரம் கருதி ஓடுகிறேன்/
அவசியம் உறுதி நாடுகிறேன்.
அபசுரம் திருந்த வேண்டுகிறேன்.
இகசுகம் பொருந்த தூண்டுகிறேன்.

உயிர்களை நான் நேசிக்கிறேன்.
உணர்வுகளைத் தான் வாசிக்கிறேன்.
மனங்களை நான் யாசிக்கிறேன்.
மனிதரைத் தான் யோசிக்கிறேன்.

ஆதி மூலம் ஆய்கிறேன்.
ஆய்ந்து தூலம் ஓய்கிறேன்
நாதிப் பாலம் சேர்கிறேன்.
பேதம் கோலம் தேர்கிறேன்.

எழுதிச் சொல்லிப் பாடுகிறேன்.
இதயம் சொல்ல ஆடுகிறேன்.
மனிதம் சொல்லக் கூடுகிறேன்.
மறைகள் சொல்லைத் தேடுகிறேன்.

விடியல் விடியத்தான் நோக்குகிறேன்.
படியல் வடியத்தான் நீக்குகிறேன்.
கொடியில் உறவைக் கோர்க்கிறேன்.
மடியில் மரபை சேர்க்கிறேன்.

கொ.பெ.பி.அய்யா.


Sunday, 7 September 2014

வாழ்க சிறந்து.

ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் துறந்து.
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்து
அமைதி நிறைந்து வாழ்க மகிழ்ந்து.

இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்து
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்து
நம்பிக்கை தன்னில் நாளும் வாழ்ந்து
நன்னிலை நின்று வாழ்க சிறந்து.

அச்சம் அற்ற நம்பிக்கை கொண்டு
உச்சம் காண உன்னில் துணிந்து.
துச்சம் என்றே தூரம் மறந்து.
எச்சம் வாழ வாழ்க முயன்று.

தன்னைத் தாழ்த்தும் தாழ்மை அகற்று.
உன்னை ஏற்றும் உள்ளறி வேற்று.
பின்னை பயத்தின் பேதமை விடுத்து
முன்னை முயன்று வாழ்க முடித்து.

உருவாக்கு தெம்பு உன்னை நம்பி
புரட்டலாம் நெம்பு பூமியை தம்பி.
அடுத்தவர் உதவி கிடைப்பதை நம்பி
கெடுவதை உதறி வாழ்க தம்பி.

வண்ணத்துப் பூச்சி திண்ணத்தைப் பாரு.
தன்னைத் தூக்க தான்செய்யும் போரு.
எண்ணத்தின் வலிமை கிழிபடும் கூடு.
விண்ணில் பறந்து வாழ்க நீடு.

பொன்னிகர் மாட்சியா தன்னுயர் காட்சியா?
உன்னறித் தேடல் உள்ளறி வாயே.
மண்ணுயர் மாந்தர் விண்ணவர் சாட்சியா
மங்கலம் பொங்க வாழ்க நீயே.

பேய்கள் விளையும்  நரகம் அதை.
நாய்கள் அலையும் உலகம் அதை.
புண்ணிய மண்ணாய் பாடும் கீதை
பண்ணிப் போற்றி வாழ்க பாதை


கொ.பெ.பி.அய்யா.