கனவு காணுங்கள்
சின்னஞ்சிறு பிஞ்சுகளே!
எண்ணம் வளர் கலாம்களே!
வண்ணமெதிர் காலங்களே!
கண்வளர்க கனவுகளே!
ஏழ்மையில்லா உலகமே
ஏற்றக் கனவு காணுங்கள்.
பாழ்மையில்லா அறிவியலே
ஆளக்கனவு காணுங்கள்.
செயற்கையிலா வேளாண்மை
இயற்கைக் கனவு காணுங்கள்.
தரிசு அற்றுக் கழனிகள்
விரியக்கனவு காணுங்கள்
அறியாமை போக்கி மக்கள்
தெளியக்கனவு காணுங்கள்.
பகையறியா ஞாலமாக
பசுமைக்கனவு காணுங்கள்.
சுயநலம் விட்டுஞ்சுற்றம்
சூழக்கனவு காணுங்கள.
பயம் மறந்த விடியலை
பாரக்கக்கனவு காணுங்கள்.
நதிகளெலாம் கைகோர்க்கும்
நாளைக் கனவு காணுங்கள்.
அதிகாரஞ் செயலாக்கும்
அரசைக்கனவு காணுங்கள்.
ஊழல் செத்த நிர்வாகம்
உதிக்கக்கனவு காணுங்கள்.
ஊழியரும் மக்கள் நலம்
உணரக்கனவு காணுங்கள்.
வேலை தேடும் வெறுமைநிலை
விலகக்கனவு காணுங்கள்.
உழைக்காத வெட்டிக் கூட்டம்
உழைக்கக்கனவுகாணுங்கள்.
சலுகை நாணும் சமுதாயம்
சமையக் கனவு காணுங்கள்.
காசுக்காக கடமை விற்போர்
கூசக்கனவு காணுங்கள்.
பிச்சையவலப் பாவமும்
பற்றாக்னவு காணுங்கள்.
பாதையோர வேதனைகள்
போக்கக் கனவு காணுங்கள்.
எல்லாரும் எல்லாம் பெற்ற
இயல்பைக் கனவு காணுங்கள்.
திருடரில்லா தீர்வுநிலை
தேரக் கனவு காணுங்கள்.
சாதி மத பேதஞ் சாகும்
ஆதிக் கனவு காணுங்கள்.
நீதி வாழும் நிசங்களே
நேராய்க் கனவு காணுங்கள்.
பெண்களைத் தாயெனப்
போற்றக் கனவு காணுங்கள்,
தன்னுயிராய் மற்றுயிரும்
எண்ணக் கனவு காணுங்கள்.
காந்தி காமராசர்களை
கனவிலேனும் காணுங்கள்.
ஏந்தியவர் கனவுகளை
இயற்றக் கனவு காணுங்கள்.
கொ.பெ.பி.அயயா
சின்னஞ்சிறு பிஞ்சுகளே!
எண்ணம் வளர் கலாம்களே!
வண்ணமெதிர் காலங்களே!
கண்வளர்க கனவுகளே!
ஏழ்மையில்லா உலகமே
ஏற்றக் கனவு காணுங்கள்.
பாழ்மையில்லா அறிவியலே
ஆளக்கனவு காணுங்கள்.
செயற்கையிலா வேளாண்மை
இயற்கைக் கனவு காணுங்கள்.
தரிசு அற்றுக் கழனிகள்
விரியக்கனவு காணுங்கள்
அறியாமை போக்கி மக்கள்
தெளியக்கனவு காணுங்கள்.
பகையறியா ஞாலமாக
பசுமைக்கனவு காணுங்கள்.
சுயநலம் விட்டுஞ்சுற்றம்
சூழக்கனவு காணுங்கள.
பயம் மறந்த விடியலை
பாரக்கக்கனவு காணுங்கள்.
நதிகளெலாம் கைகோர்க்கும்
நாளைக் கனவு காணுங்கள்.
அதிகாரஞ் செயலாக்கும்
அரசைக்கனவு காணுங்கள்.
ஊழல் செத்த நிர்வாகம்
உதிக்கக்கனவு காணுங்கள்.
ஊழியரும் மக்கள் நலம்
உணரக்கனவு காணுங்கள்.
வேலை தேடும் வெறுமைநிலை
விலகக்கனவு காணுங்கள்.
உழைக்காத வெட்டிக் கூட்டம்
உழைக்கக்கனவுகாணுங்கள்.
சலுகை நாணும் சமுதாயம்
சமையக் கனவு காணுங்கள்.
காசுக்காக கடமை விற்போர்
கூசக்கனவு காணுங்கள்.
பிச்சையவலப் பாவமும்
பற்றாக்னவு காணுங்கள்.
பாதையோர வேதனைகள்
போக்கக் கனவு காணுங்கள்.
எல்லாரும் எல்லாம் பெற்ற
இயல்பைக் கனவு காணுங்கள்.
திருடரில்லா தீர்வுநிலை
தேரக் கனவு காணுங்கள்.
சாதி மத பேதஞ் சாகும்
ஆதிக் கனவு காணுங்கள்.
நீதி வாழும் நிசங்களே
நேராய்க் கனவு காணுங்கள்.
பெண்களைத் தாயெனப்
போற்றக் கனவு காணுங்கள்,
தன்னுயிராய் மற்றுயிரும்
எண்ணக் கனவு காணுங்கள்.
காந்தி காமராசர்களை
கனவிலேனும் காணுங்கள்.
ஏந்தியவர் கனவுகளை
இயற்றக் கனவு காணுங்கள்.
கொ.பெ.பி.அயயா
No comments:
Post a Comment