உலகம் அறியாத புதுமை-கூடிப்
பழக முடியாத கொடுமை.
காற்றில் பரப்பிய விசமாக-கொரோனா
தூற்றிய நெருப்போ எமனாக.
குடும்பம் நலம் வாழத் தனிமை
இருந்தால் எதிர் காலம் இனிமை.
விலகி இருப்போம் சில நாள்
உலகில் பிழைப்போம் பல நாள்.
சீனா விதைத்த விதையாலே
வீணாய் புதைந்தார் கொரோனாலே.
விழித்தோம் நல்லது முன்னாலே
ஒழிப்போம் கொரோனாவை அஞ்சாதே!
வாழ்வதும் வீழ்வதும் நம் கையில்
போனால் வெளியே எமன் பையில்
வீட்டுக்கு உள்ளே வாழ்ந்திருப்போம்
நாட்டுக்கு நல்லது காத்திருப்போம்.
கொ.பெ.பி.அய்யா.