தென்றல்விடு தூது!!
தென் திசைத் தென்றலோ
தேன் சுமந்து சீதனமோ!
தமிழ் அணங்கைக் காணவோ
தலை வணங்கும் காதலோ!.
வடக்கு திசைப் பயணமோ
வழக்கு நெடும் உலாவாமோ!
பொதிகை மலைப் புறப்பாடோ!
பொழில் எழில் வழியூடோ!
அகத்திய தமிழ் முனிவர்க்கோ
ஆசிரமத் தவப் பணியாளோ!
இகந்தனில் முந்து தழிழர்க்கோ
ஏவுதூதன் சேவை இனியனோ!
சுகந்தரும் மூலிகைச் சுகந்தனோ!
சுருதியிசை ஆவர்த்தன முகுந்தனோ!
ஜகம்புகழ் இன்னிசைத் தமிழுக்கோ!
நிரந்தரம் தன்னிலைப் பெருமைக்கோ !
தாமிர வரணி ஆறு
தலைமுழுகி நடைதேறு!
தேமதுரத் தமிழது மணக்க
திசையெலாம் முழங்கிநீ பாடு!
குற்றாலக் குளிர் சாரலோ!
குளிக்கவும் தான் ஆசையோ!
கொட்டும் விசை அருவிகளோ!
குதுகளித்தும் விளை யாடுவையோ!
நெல்லை புகழ் அல்வாவோ!
நினைவில் சுவை மெல்வாயோ!
எல்லை ஆளும் காந்திமதி
அன்னை வேண்டி செல்வாயோ!
நெல்லாம் வயலும் நீண்டவழி
எல்லாம் பயணம் தாண்டிவெளி
செல்வன் அவனே செந்தூரான்
சேவடிகள் சேவை திருச்செந்தூரோ!
திருச்சீர் அலைவாய் நீராடி
முருகன் அவன்வாய் சீராடி
இருந்தே அங்கே குமரியவள்
பொருந்தி இங்கே சேவிப்போ!
செங்கண் கதிரோன் தாங்கலோ!
தங்கியும் யெழுகின்ற காட்சியோ!
பொங்கும் பூக்கும் புத்துணர்வோ!
அங்கந் துள்ளும் அகமகிழ்வோ!
உவரி வந்தால் மாதாவோ!
செபிக்குஞ் செபஞ்செய் மாலையோ!.
தியானம் ஒருங்கி செய்தாயோ!!
தரிசனம் துலங்கிப் பெற்றாயோ!
தூவா ஒலியும் கேட்குதோ!
தூரம் மினார் தோன்றுதோ!
காயல் பட்டணம் தர்காவோ!
காலும் ஆற்றித் தொழுகையோ!
வெற்றிலை மணக்கும் தோட்டங்களோ!
சுற்றிலும் மலைகள் கூட்டங்களோ!
முற்றிய பலாமா வாழைக்கனி!
பெற்றிய மகிழ்வோ ஏழைக்களி!
ஆழக்கடல் வளம் தூத்துக்குடி.
ஆழத்தில் மூழ்கி முத்துக்குளி.
ஈழக்கடல் வீரத் தமிழ்
வாழ்த்திக் கூறி வணங்குவியோ!!
வாழுந் தமிழர் சிதம்பரனார்!
வாழுங் கப்பல் தடம்பாரு!
கீழக்கரை வாழ் மீனவரோ!
ஆழக் காயம் ஆற்றுவையோ!!
பாதைகள் எல்லாம் உப்பளங்கள்!
பாமரர் கூலி கொப்பளங்கள்.!.
வேதனை தானவர் விடியல்கள்.
ஊதுநீ இதமாய் புண்ணாற!
வருகின்ற வழிதான் மணியாச்சி.
வாஞ்சிநாதன் பேராச்சு.
தியாகப் பெருமை தமிழருக்கோ!
தீரும் உரிமை ஆரியர்க்கோ!
கட்ட பொம்மனே ஆண்டவன்.
எட்டப்பன் அவனோ மாண்டவன்.
கொட்டும் முரசு பாஞ்சாலமோ!
வெற்றிப் பொறியை தூண்டிவா!
வீரம் பற்றியும் விழித்ததோ!
தீரம் துள்ளியும் எழுந்ததோ!
நேர்ந்தது நெருப்புக் குஞ்சொன்றோ!
கூர்ந்தது பாரதி சொல்லன்றோ!
வீரியம் விளைந்த
எட்டையபுரமோ!
சோரமும் முளைத்தது சோதனையோ!
பாரதி பிறப்பால் கொண்டது புகழோ!!
ஊரது சிறப்பால்
தென்றலும் புயலோ!
சுற்றியும் தென்னிலம்
ஊரெல்லாமோ!
சுதந்திரத் தன்னுரம்
வேரென்றாமோ!
கற்றிடப் பற்றறம்
வேறெங்குதானோ!
கதைகளும் பற்றிடும்
நேரொன்றுந்தானோ!
கர்ம வீர்ராம் காமராசரோ!
தர்மப் பேரதாம்
விருதூராரோ!.
பரம ஏழையாம் ஊருந்தொட்டோ!
பிறந்த மண்ணையும் மணந்தாயோ!
சங்கத் தமிழும் தங்குமதுரையோ!
கொஞ்சும் மொழியது
நெஞ்சமழியுமோ!.
தேவிமீனாள் ஆளும் பூமியோ!
ஈவின்சொக்கன் வாழும்
சாமியோ!
திருக்குறள் ஈந்த
பொற்றாமரையோ!
தமிழும் வென்ற செந்நாப்புலமையோ!
இறைவன் தலைவன் இயற்றிய
சங்கமோ!
இனிக்கும் மதுரை சுவைக்கும்
தென்றலோ!
ராமநாதன் பூமி கண்டாயோ!
சேமநாடாம் சேது பந்தமாமோ!
ஈழங்கொண்டும் பாலம்
செய்வோமோ!
வாழுந்தமிழங்கு ஆளும்
என்போமா!
தஞ்சை மண்ணுந்தாண்டி
வந்தாயோ!
தமிழினருமை கண்டு
கொண்டாயோ!
காவிரி மொண்டுந்தாகம்
ஆற்றினாயோ!
கல்லணை வியந்தும் கவியேற்றினாயோ!
வழியெங்கும் அலையாடும் கழனிகளோ!
கலையழகு விளையாடும் கோவில்களோ!
திருவரங்கம் எழில்கூடும் அமைதியோ!
பெருமாளின் அருள்தேடும் கோபுரமோ!
வழியெங்கும் அலையாடும் கழனிகளோ!
கலையழகு விளையாடும் கோவில்களோ!
திருவரங்கம் எழில்கூடும் அமைதியோ!
பெருமாளின் அருள்தேடும் கோபுரமோ!
வீரநாச்சி பூமி நின்றாயோ!
சீறும் பெண்ணாள் சினமறிந்தாயோ!
தமிழுயர் மங்கை பற்றுணர்ந்தாயோ!
தலைதான் வணங்கத் தான்பணிந்தாயோ!
சீறும் பெண்ணாள் சினமறிந்தாயோ!
தமிழுயர் மங்கை பற்றுணர்ந்தாயோ!
தலைதான் வணங்கத் தான்பணிந்தாயோ!
தீரன் சின்னமலை வீரமறிவாயோ!
பேரன் முன்னபெறுஞ் தீரந்தெளிவாயோ!
பேரன் முன்னபெறுஞ் தீரந்தெளிவாயோ!
கொங்கு மன்னன் திரைமறுத்தவனோ!
எங்குப் பின்னம் வரலாறதுவோ!
அடிமைப்பட்ட தமிழினம் மீட்க
உரிமை வேட்கை உயிருங்கொடுக்க
கொங்கு நாட்டு சிங்கஞ்சின்னமலை
சென்னி மலைக்குத் தலைவனவனே!
அடிமைப்பட்ட தமிழினம் மீட்க
உரிமை வேட்கை உயிருங்கொடுக்க
கொங்கு நாட்டு சிங்கஞ்சின்னமலை
சென்னி மலைக்குத் தலைவனவனே!
தேடும் வழிதான் ஈரோட்டுப்பெரியார்.
ஞான ஒளிதான் சுயமதிப்பறிவார்
வாடும் இழிவாம் இனப்பிரிவினையோ!
கூடும் தெளிவோ சமூகநீதியோ!
காஞ்சி நுழைந்தும் போற்றினாயோ!
காஞ்சி நுழைந்தும் போற்றினாயோ!
கடமை கண்ணியம் கட்டுப்பாடோ!
அறிஞரைப் போலினி ஆவதிலையோ!
அறியும் தலைவர் சாவதிலையே!
சென்னைப் புகழோ கூவநதியோ!
இன்னை இகழும் பாவவிதியோ!!
முன்னைத் திகழ்ந்த ஜீவநதியோ!
பின்னை நிகழ்வோ சாபகதியோ!
முன்னைத் திகழ்ந்த ஜீவநதியோ!
பின்னை நிகழ்வோ சாபகதியோ!
வங்கம் தாலாட்ட மடிதுங்குமண்ணா
தங்க மகனுடன் தன்மடியொன்னா!
மங்காப் புகழுடன் சிங்கங்களோயுதோ!
பங்கம் நேராது பார்ப்பதுந்தமிழன்றோ!
மங்காப் புகழுடன் சிங்கங்களோயுதோ!
பங்கம் நேராது பார்ப்பதுந்தமிழன்றோ!
ஆக்கம் தந்தவராகினர் சிலைகளோ!
ஊக்கமின்றவர் தேங்கிய மனிதற்கோ!
பார்க்கவோ நிற்கிறார் பற்றுவதென்னவோ!
தேற்றவும் ஆற்றவும் வழிமொழியவராமோ!
ஊக்கமின்றவர் தேங்கிய மனிதற்கோ!
பார்க்கவோ நிற்கிறார் பற்றுவதென்னவோ!
தேற்றவும் ஆற்றவும் வழிமொழியவராமோ!
நாடெல்லாம் காடெல்லாம் பறந்தாயோ
நதிகளாடி விதியென்ன புரிந்தாயோ!
விவசாய பூமியிது அவசரமெதுவோ!
அவசியம் நதியிணைப்பு ஆவதென்றோ!
போதுமோ சுற்றுச்சூழல்!வாழ்வதற்கு!
எதிர்காலம் என்னாகும் என்பதற்கு!
பசுமைதான் கார்மேகம் தாய்மைக்கு!
புதுமைதான் போர்தேடும் தீய்மைக்கு!
இளங்காற்றே இதமான தென்றலே!
நலந்தேற்ற விதமான கொண்டலே!
ஏழைக்குத் தோழமை நீதானே!
இளைப்பாற நேரமும் ஏதுதானே!
இளங்காற்றே இதமான தென்றலே!
நலந்தேற்ற விதமான கொண்டலே!
ஏழைக்குத் தோழமை நீதானே!
இளைப்பாற நேரமும் ஏதுதானே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment