Monday, 23 December 2013

பழிக்கவும் பசலையோ!

உன்னினைவை உன்னோடு

உன்னினைவை உன்னோடு
உடன் கொண்டு சென்றுவிடு.
என்னினைவைத் தந்துவிடு
இல்லையெனைக் கொன்றுவிடு.

உண்பது போல் நாடகம்.
திண்பதுங் காய்த் தேகம்
ஒளித்ததும் புளித்ததோ!
பழிக்கவும் பசலையோ!.

உறக்கமும் மறந்திட்டேன்.
உருகித்தரை உறைந்திட்டேன்.
இரக்கமிலாக் காதற்பட்டேன்.
இதயத்தைத் தொலைத்திட்டேன்.

என்னெஞ்சே என் பேச்சை
என்னென்றும் கேட்பதில்லை.
பின்கெஞ்சி அவன் வரவை
எண்ணுவதேன் அது பேதை?

மறந்தவனை மறப்பதற்கும்
திறமில்லா மடநெஞ்சம்.
இறக்கலாம் என்றாலும்
பொறுக்கலாம் என்பதாம்.

மாலையேன் மயங்குதோ!
மனதுயேன் தயங்குதோ!
மாலையனை நோங்குதோ!
மனதுயெண்ணி ஏஙகுதோ!

பிரிந்தவன் நினைப்பானோ!
புரிந்தவன் வருவானோ!
பிரிவிதின் துயரொழித்தே
நெருங்கியு மணைப்பானோ!

இமையெனுஞ் சிறகுகள்
அமைந்திட்ட விழிகளே!
பறக்கவும் உரமிலையோ!
துறக்கவும் துணிவிலையோ!

கடல்கடந்து பிரிந்தவன்
உடல்மறந்து கிடப்பவன்
மடல் நனைந்து சொல்கிறான்
விடல் மறந்து கிடக்கிறேன்.

கொ.பெ.பி.அய்யா.










No comments:

Post a Comment