காதலா! காமமா!
காதலைக் காமம் எனக்
கருத்துப் பிழை செய்யாதீர!
உறவுகள் கலப்பதை
உள்ளங்கள இணைவதை
உணரச்சிகளின் ஈர்ப்பென
உளறாதீர் உளறாதீர்!
அழகுக்கு மயங்காது
ஆசைகொண்டு அலையாது
உடல்தீண்டத் துடிக்காது
உயிர்தொடுங் காதலதை
உணர்ச்சிப்ப்சி காமத்திற்கு
ஒப்பிட்டுப் பாவம் செய்யாதீர்!
மனங்கள் தழுவிப் பேசுகின்ற
மனிதருக்குள் வாழுக்கின்ற
புனிதமெனப் போற்றுகின்ற
இனமறியாத் தர்மக் காதலை
பாலினக் கவர்ச்சியெனப்
பைத்தியராயப் பிதற்றாதீர்!
உறவுக்குக் குளிர்ந்திடும்
பிரிவுக்குச் சுட்டிடும்
வரவும் செலவும் எனவும்
கரவிலா நிறைக் காதலை
வரணத் தடை பூட்டி
மரணிக்கத் தண்டிக்காதீர்!
உயிர்கள் கலந்திடும்
உணர்வுகள் மலர்ந்திடும்
இயல்புகள் புரிந்திடும்
இயற்கைக் காதலை
நயமாக வாழ்த்துங்கள்
பயமாக்கி மடிக்காதீர்!
சாதிகள் ஒழித்திடும்
பேதங்கள் மறைத்திடும்
சமநிலை சமைத்திடும்
அமைதியும் அமைத்திடும்
அமிழ்தமே காதலன்றோ!
தமிழ்மறை நீதியன்றோ!
கொ,பெ.பி.அய்யா.
காதலைக் காமம் எனக்
கருத்துப் பிழை செய்யாதீர!
உறவுகள் கலப்பதை
உள்ளங்கள இணைவதை
உணரச்சிகளின் ஈர்ப்பென
உளறாதீர் உளறாதீர்!
அழகுக்கு மயங்காது
ஆசைகொண்டு அலையாது
உடல்தீண்டத் துடிக்காது
உயிர்தொடுங் காதலதை
உணர்ச்சிப்ப்சி காமத்திற்கு
ஒப்பிட்டுப் பாவம் செய்யாதீர்!
மனங்கள் தழுவிப் பேசுகின்ற
மனிதருக்குள் வாழுக்கின்ற
புனிதமெனப் போற்றுகின்ற
இனமறியாத் தர்மக் காதலை
பாலினக் கவர்ச்சியெனப்
பைத்தியராயப் பிதற்றாதீர்!
உறவுக்குக் குளிர்ந்திடும்
பிரிவுக்குச் சுட்டிடும்
வரவும் செலவும் எனவும்
கரவிலா நிறைக் காதலை
வரணத் தடை பூட்டி
மரணிக்கத் தண்டிக்காதீர்!
உயிர்கள் கலந்திடும்
உணர்வுகள் மலர்ந்திடும்
இயல்புகள் புரிந்திடும்
இயற்கைக் காதலை
நயமாக வாழ்த்துங்கள்
பயமாக்கி மடிக்காதீர்!
சாதிகள் ஒழித்திடும்
பேதங்கள் மறைத்திடும்
சமநிலை சமைத்திடும்
அமைதியும் அமைத்திடும்
அமிழ்தமே காதலன்றோ!
தமிழ்மறை நீதியன்றோ!
கொ,பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment