Monday, 12 November 2018

சும்மா இரு!

சும்மா இரு ஆனால்
சோம்பலாய் அல்ல.
சொல்லே இல்லாத
நல்லவனாய் சும்மா இரு.

ஐம்புலன்கள் அடக்கி
சும்மா இருக்க!
சும்மா பயிற்சி
சும்மா வெல்க!.

சும்மா என்றால்
சுமை இல்லாமை.
சும்மா ஆகினால்
சுபம் ஆகவாம்.

சும்மா மறைந்து
சுயநிலை மறக்கும்.
ஐம்புலன் ஒடுங்கி
ஆகாயம் பறக்கும்.

சும்மா சும்மா
சொல்லாமை அடங்கு.
சும்மா சும்மா
இல்லாமை ஒடுங்கு.

சும்மா சும்மா
உள்ளமை சும்மா.
சும்மா சும்மா
எல்லாமே சும்மா.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 7 November 2018

சின்ன வயசு உறவுகள்

சின்ன வயசு உறவுகள்.

என்னமோ தெரியல 
இன்னமும் மறக்கல.
சின்ன வயசு உறவுகள்
நெஞ்ச விட்டு அழியல.

பள்ளிக் காலம் பழகிய
கள்ளம் போல் அரும்பிய
உள்ளம் ரெண்டு நெருங்கிய
வெள்ளை க்காதல் மறக்கல.

அண்ணன் தம்பி பிறவிகள்
வண்ணம் இல்லா உறவுகள்
ஒன்று பட்ட பரிவுகள் 
துண்டு பட்டும் அழியல.

வாண்டுகளாய் நண்பர்கள்
கூண்டு விட்ட அன்பர்கள்
ஆலமர ஊஞ்சல் ஆட்டி 
ஆடியதும் மறக்கல.

பாலினம் வேற்றுமையை
வாலிபக் கதைகளை
தோழமை அரட்டைகள்
கேளிக்கை அழியல.

பள்ளி செல்ல மறுத்ததும்
துள்ளி ஆட துடித்ததும்.
வில்லர்களாய் விடலைகள்
அள்ளியதும் மறக்கல.

பள்ளிப் பாடம் பிடிக்கல.
வீட்டுப் பாடம் முடிக்கல.
வாத்தியாரு பயத்தில
ஓட்டம் இன்னும் அழியல.

கொ.பெ.பி.அய்யா.

யார் ராஜபச்.சே

யார் ராஜபச்சே?

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்

உன்னிடமும் இல்லை நியாயம்.       

சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.

சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி

கப்பல் விடும் சண்டாளன்

உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி

உற்ற திருஷ்டி பூசணிதான்.

செந்நீரில் குளம் நிறப்பி

செழிக்கக் குளித்தவன்தான்

காட்டேரி அவனேதான்--மனித

காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட

பாவம் என்ன செய்தாயோ!

வேதம் கற்ற நீ கூட—பாவம்

விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்

புகழ் இன்னும் கூடுமன்றோ!

பாவியரை அழைத்தாயோ!-தமிழ்

பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!

தமிழினம் வேண்டாமோ!

தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா

தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை

திடங்கொண்டு கொன்றவனை

கடன் என்று அழைப்பாயோ!-எம்மை

ஜடம் என்றும் நினைப்பாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?

நாங்கள் செய்த பாவம் என்ன?

எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்

எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று

பகல்கனவா கண்டிருந்தோம்.

ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்

அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!

எங்கள் தமிழ் ஆளுமோ!

அன்றுதான் பாரதம் –தமிழ்

வென்றும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.

வெற்றிக் கனிகள்.

வெற்றிக் கனிகள்.

வெற்றிக்கனிகள்.

முப்பத்து ஏழு வெற்றிக் கனிகள்.

இப்போது ஆளும் இந்திய மணிகள்.

செப்பம் அம்மா சீர்வளர் பணிகள் 

எப்போது மேற்றும் நேர்மன அணிகள்.

இந்திய வரலாறு இன்றும் எழுதும்

முந்திய தமிழின் முன்னுரை முழுதும்.

பிந்திய நாளில் ஒன்றென அம்மா

சந்தியா மகளென சாதனை பதிக்கும்.

ஒற்றை அல்ல ஓராயிரம் கோடி

பற்றிய தமிழின தாயிடம் தேடி

வெற்றி வெற்றி எனவீரம் பாடி

சுற்றினோம் முப்பத்து ஏழும் சூடி.

தமிழினம் இன்று தரணியில் வென்று

தலைநேர் நிமிர்ந்து பரணியில் பகிர்ந்து  

உலகம் வியந்து உற்றுப் பார்க்க

திலகம் சூட்டிய அம்மா வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.