கொஞ்சந்தான் படிச்சேன்.................!
தமிழதுக்
கொஞ்சம் படிச்சேன்.
அமிழ்தமதுத்
துளிக் குடிச்சேன்.
தத்தித்தொத்திக்
கவி வடிச்சேன்-தமிழ்
வித்தரையும்
விஞ்சத்துடிச்சேன்..
தமிழதுக்
கடலென்பார்;
தரைக்
கண்டாரெவன்பார்.
தேடத்தேடப்
புதையலென்பார்-வாழ்வின்
தேவைக்கெலாம்
வள்ளலென்பார்.
எட்டித்தொடப்
பார்க்கிறேன்.
எட்டவில்லை
முயல்கிறேன்.
கிட்டும்
வரைத் தொடருவேன்-வாழும்
கெட்டிக்கவி
ஆகுவேன்.
வள்ளுவனைக்
கம்பனைப் பாரதியை :
கொள்ளுகிறேன்
நெஞ்சந்தனை!
முத்தமிட்டுத் தாள்கள் தொட்டு-மூத்த
முத்தமிழை கொஞ்சுகிறேன்.!
மனம்
இன்னும் அடங்கவில்லை.
மதி
ஒடுங்க உறங்கவில்லை.
இனம்
புரியாத் தேடும் நிலை-விதித்த
விதி
அதுவோ அடையுங்கலை!
எதை
நான் தேட வேண்டும்?
அதையேன் சொல்ல வேண்டும்?
ஞானம்
கொண்டு முயல வேண்டும்-தமிழை
நான்
இன்னும் பயில வேண்டும்.
முன் மொழியும்
புலம்பலெலாம்;
பின் வரைவு இலக்கியமாம்.
உள் முனையும் உணர்வெல்லாம்-அறிவுச்
உள் முனையும் உணர்வெல்லாம்-அறிவுச்
சொல் விளையும் களஞ்சியமாம்.
.
கொண்டு
வந்தது ஒன்றுதான்;
கொழுந்தான
ஞானம்தான்.
கண்டு
இங்குச் செழித்ததுதான்-நிலைத்து
நின்று
புவி வாழும் நான்!
இட்டு
வந்த இறைவனவனவன்;
இதயத்துள்ளே
இருப்பவன்.
விட்டு
வரச் சொல்லுவான்-நான்
விதைத்த
என் சொற்களைத்தான்!
சொல்ல
வந்ததுச் சொல்லத்தான்;
சுதந்திரமும்
எனக்குத்தான்.
கொள்ள
வேறு இல்லைதான்-வாழ்வே
கொடுப்பான் அமரச் சொர்க்கம்தான்.
ஒன்றொன்றாய்ப்
படியேறி
நன்றொன்றாய்
நான் தேறி
கண்டொன்றாய் விடைக் கூறி-வாழ்வேன்
நின்றொன்றாய் நிலம் ஊறி..
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment