Wednesday, 25 December 2013

சோறு சும்மா வராது!

சும்மா வரவில்லை சோறு !

அம்மா தருஞ்  சோறு!
சும்மா வரல கேளு!.
அதற்குப் பின்னால் பாரு!
அடங்கி இருக்கு நூறு

ஆதிமனிதன் யாரு!
அவன்கொடுத்தான் சோறு.!.
என்ன என்ன திண்ணானோ!
எத்தனை பேர் செத்தானோ!

ஒண்ணு ஒண்ணாத் தேடித்தான்.
மென்னு திண்ணுப் பார்த்துத்தான்.
கண்டு தந்தான் வயிற்றுக்கு
உண்டி என்றும் உயிருக்கு.

நெருப்புக்கண்ட பின்னாலே
பருப்பு வேககக் கண்டானே .
தரிசக்கொத்தி விதைவிதைச்சி
தானியங்கள் கொண்டானே .

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment