Thursday, 26 December 2013

காதல் என்றும் புதியது.

காதல் வாழட்டும்

காதல் மிகவும் வலியது-அது
காதல் மெய்யென்றால்.
கடவுளையும் கட்டி விடும்---அதனால்
காதல் வாழட்டும்!.

காதல் மிகவும் கட்டுப்பாடுள்ளது--அது
குடும்பத்தார் வசமென்றால்.
பாசம் ஒன்றில் பண்படும்-அதனால்
காதல் வாழட்டும்.

காதல் மிகவும் நன்றியுள்ளது-அது
கருமத்தின் கட்டென்றால்.
பெற்றவர்க்கு பிள்ளை யாக்கும்-அதனால்
காதல் வாழட்டும்.

காதல் என்றும் புதியது-அது
கட்டியவள் மடியென்றால்.
இனிக்கும் என்றும் மனைவாழ்வு----அதனால்
காதல் வாழட்டும்!.

காதல் என்றும் அன்பானது-அது
உயிர்களில் தானென்றால்.
உலகமும் நின்று வாழும்---அதனால்
காதல் வாழட்டும்!.

காதல் மிகவும் நல்லது-அது
கடமையில் தானென்றால்.
காலம் பழகிப் பயனாகும்---அதனால்
காதல் வாழட்டும்!.

காதல்மிகவும் இனியது-அது
கலையின் மீதென்றால்.
இன்பம் நல்கிப் பயக்கும்----அதனால்
காதல் வாழ்ட்டும்!.

காதல் மிகவும் மேலானது-அது
காசினி மேலென்றால்.
சமூகம் கூடி வாழும்-----அதனால்
காதல் வாழட்டும்!.

காதல் மிகவும் அழகானது-அது
காடுமலை தனிலென்றால்.
வானம் கருத்துப் பொழியும்---அதனால்
காதல் வாழட்டும்!.

காதல் மிகவும் புனிதமானது-அது 
கருத்தில் ஒருமையென்றால்.
மனிதம் நிறைய செய்யும்-அதனால்
காதல் வாழட்டும்.

காதல் மிகவும் சத்தியமானது--அது
கருவில் உருவென்றால்.
சாதி சமயம் மொழியில்லை--அதனால்
காதல் வாழட்டும்.

காதல் மிகவும் சுகமானது-அது
கவிதை எழுத்தென்றால்.
கருத்து வளம் செழிக்கும்----அதனால்
காதல் வாழட்டும்!.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment