திராவிடன் எவனோ கூறடா!
சொந்தம் எனக்கு தமிழினமே-வாழ்க
செந்தமிழ் நாடென்றே போற்றடா.
மொழியே இனத்தின் அடையாளம்-அதனின்
வழியே தமிழன் பலமாகும்.
வண்ண பேதங்கள் எமக்கில்லை-தமிழ்
சொன்ன வேதங்கள் பொய்யில்லை.
சொல்லும் சொல்லே மொழியாமோ-நிலை
வெல்லும் சொல்லே மொழியாமே!.
இசையும் ஓசை நயம்தானோ-நா
அசையும் விசை பண்ணாச்சோ!
தமிழுக்கு எதுவும் நிகருண்டோ!
அமிழ்தம் என்றால் தமிழன்றோ!
பெற்ற பயனும் வேறென்ன-தாய்
பெற்றது தமிழனாய் நானென.
கொ.பெ.பி.அய்யா.