Friday, 27 December 2013

கண்ணீர் தேசம்.

கண்ணீர் தேசம்.

இனியும் அனுமன் எழுவானோ!
இலங்கை எரித்தும் முடிப்பானோ!
இராசபச்சே ஏரோதன்
ஏசுவின் சிலுவை துடிப்பானோ!

மனித உரிமையும் செத்ததோ!
மனிதப் பலிகள் அய்யகோ!!
கொத்துக் கொத்தாய் குழந்தைகள் 
கொல்லப்பட்டும் அற்றதோ!.

குடும்பங்கள் எல்லாம் குலைந்ததோ!
கொடுமைகள் சொல்லி அழிந்ததோ!
விதவைகளாகிப் பெண்களும்
விலைகளாகி இழிந்ததோ!

இணங்க மறுத்த மாதரை
பிணங்களாக்கிப் புணர்ந்தனர்.
பால் மனம் மாறாப் பிஞ்சுககள்
பாலியல் கசங்கி சிதைந்தனர்.

வீடுகள் அழித்து விரட்டினர்.
காடுகள் ஒழித்து எரித்தனர்.!
உணவைப் பறித்து உமிழ்ந்தனர்
உடைகளை உரித்து மகிழ்ந்தனர்

கணவன் கண்ணே கற்பழித்தும்
காட்சி இரசித்து களித்தனர்.
வணங்கும் தாயவள் பிறப்புறுப்பை
வாள்முனை துளைத்து வதைத்தனர்.

பள்ளி செல்லும் பருவத்திலே
துள்ளி யாடும் துடிப்புகளோ!
கொள்ளி வயிற்றுப் பசியாலே
கிள்ளி மண்ணைத் தின்றனவோ!

பாட சாலைகள் தகர்த்தனர்.
ஓடும் உயிர்களை உதிர்த்தனர்..
குண்டு மழைகள் பொழிந்தனர்.
கண்டு இனத்தினை அழித்தனர்.

இறந்த மனித உறுப்புக்களை
அறிந்து நாய்க்கு எறிந்த்தனர்.
பருவமங்கை சிறு முலைகள்
திருகிப் பந்து விளையாடினர்.

பாலுக்கு அழுதிடும் குழந்தைகளை
காலில் நசுக்கித்  தேய்த்தனர்.
சேலையை விலக்கித் தாயினை
பாலினை உறிஞ்சி தீய்த்தனர்.

கண்ணீரின் தேசமோ!
உண்ணீரும் செந்நீரோ!
எந்நாள்தான் மீளுமோ
அந்நாள்தான் ஈழமோ!

உரிமைக்குத்தான்  போராட்டம்
சரித்திரம்தான் தேரோட்டும்.
உலகில் இன்றும் குருச்சேத்திரம்


உதிரம் வென்றும் ஈழம் பெறும்.

ஏரோதை ஒழித்திடவே
ஏசுவே பிறந்து வந்தார்.
கீசகனை அழித்திடவே
கிருட்டிணரும் அவதரித்தார்.

காலத்தின் அவதாரன்
வேலுப்பிள்ளை பிரபாகரன்
ஞாலத்தின் ஒரு படையன்
ஈழத்தின் விடியலவன்.


கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment