Wednesday, 25 December 2013

தீபா வளி

தீபாவளி வாழ்த்து!

வருசமெல்லாம் பார்த்துவழி
வந்ததுதான் தீபா வளி
வரிசையாக தீப ஒளி
சிரிக்கிறது ஏழை மொழி,

பிறந்தவீடு தேடி மகள்
புருசனோடு வந்திருப் பாள்
தலை தீபாவளி  கொண்டாட்டம்.
தகப்பன் பாவம் திண்டாட்டம்.

சிறுவராடும் திரு விழா
பறக்கும்வெடி ஒரு விழா
கீழி ருந்து வானுக்கு
கோளனுப்பும் பெரு விழா.

ஏழை வாழ்த்தும் தீபாவளி.
ஆளை ஆக்கும் கடனாளி
பாடே தானே உழைப்பாளி
வாழும் மானப் பொறுப்பாளி,

விதியை மறந்து மரிக்கிறான்.
புதிதாய் பிறந்து சிரிக்கிறான்.
குழந்தைகள் மகிழும் புத்தாடை
இழந்ததை கொடுக்க நிறைகிறான்.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment