Friday, 27 December 2013

கொஞ்ச நேரம் மட்டும்.

கொஞ்ச நேரம் ஒளிந்து  கொள்ளேன்!

சூரியனே நீ  மட்டும்
ஏன் இப்படிச்  சுடுகிறாய்?
நீ ஒரு சுடு மூஞ்சியா?
உனக்கேன்  இந்தப்  பொறாமை?

உன்னை  யார் தான்
காதல் செய்ய   மறுத்தார்கள்?
உனக்கேன் இத்தனை  கோபம்?
உன்னால் தான் என்  காதலி
ஒளிந்து   கொண்டிருக்கிறாள்.

நிலவைக் கண்டுங் கூட
நீ திருந்த   மாட்டாயா?
அது  இரவிலும் எமக்கு
வழி காட்டுகிறதே!

கொஞ்ச நேரம்  ஒளிந்து கொள்ளேன்
என்  காதலியும்
முகங் காட்டி  விட்டுப் போகட்டும்.
அட்டட்டே இப்படிச்  சிவந்து விட்டாய்.
உனக்குங்   கூடக்  கூச்சமா!!

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment