Monday, 9 September 2019

கொரோனா ஒழிப்போம்

 வல்லரசு இந்தியா.
-------------------------------
உலகம் வியக்க
நிலவைத் தொட்டோம்
வலிமை இந்தியா
வல்லரசு ஆனோம்.

பலமுறை முயன்றார்
சிலபேர் அல்லார்
ஒருமுறை வென்றார்
இந்தியார் என்பார்.

அறிவில் சிறந்தோம்
அண்டம் அறிந்தோம்
முன்னோர் ஆய்ந்தே
இன்னாள் பாய்ந்தோம்

நிலவினை அம்மா
பழகிட அழைத்தாள்.
உலவிட இன்று
நிலவினில் நடந்தோம்.

கொரோனா என்ன
வரம்பெற்ற ஒன்றா!
கழுவிய கைகளே
ஒழித்திடப் போதுமே!

கொ.பெ.பி.

Tuesday, 4 June 2019

சாதியில்லை பேதமில்லை.

சாதியில்லை மதமுமில்லை தமிழரே
பேதமாக்கி  மோதவிடுது அரசியலே.

Tuesday, 7 May 2019

வா மழையே வா!


மழையே மழையே வா! -உன்
மௌனம் கலைவாயே-நீ
தொலையாமல் கலையாமல்
வா மழையே வா வா!

காயும் நிலமெல்லாம்-உன்
தாய்மை வேண்டுதே-நீ
தாயாய் சுரந்து பாலாய் பொழிந்து
வா மழையே வா வா!

உன் தயவே அல்லாதே-உன்
பெருமை சொல்லாதே-நீ
ஆளும் உலகம் வாழாது தாயே
வா மழையே வா வா !

வறண்ட தமிழகத்தின்-உன்
வரவாய் வசந்தத்தின்-நீ
கருணை வடிவாய் பந்தத்தின்
வா மழையே வா வா!

கொ பெ.பி.அய்யா.

Friday, 3 May 2019

காதல் சொல்ல வார்த்தையில்லை

என்ன சொல்லத் துடிக்கிறாள்

என்ன சொல்லத் துடிக்கிறாள்..
இதயம் துள்ள ஒடிக்கிறாள்..
ஆனாலும் தான் நடிக்கிறாள்
அவள் என்னைப் படிக்கிறாள்.

சிரிப்பில் என்ன சொல்கிறாள்.
சிந்தைக்குள் மெல்கிறாள்
மரத்தைக் கட்டிக் கொள்கிறாள்.
கரத்தைப் பற்ற மொழிகிறாள்.

தாவணியை விரிக்கிறாள்`
தானுனக்கு என்கிறாள்.
பாவாடைக்குள் காற்றழைத்து
பாவி என்னை உசுப்புகிறாள்.

இழுத்து இழுத்து மூடுகிறாள்.
எல்லாம் உனக்கு என்கிறாள்.
பழுத்த கனிப் பருவம்தான்
பழகத்தான் அழைக்கிறாள்
.
கண்கள் சொல்லும் காதலை
கடை ஒதுக்கிக் காட்டுகிறாள்.
பெண்கள் வெல்லும் வித்தையை
பேசாமலே செய்கிறாள்.

காதல் சொல்ல வார்த்தையில்லை .
வேதங்களில் தேடுகிறாள்.
ஏதுமங்கே போதவில்லை.
பேதையவள் வாடுகிறாள்.

கொ.பெ .பி.அய்யா.

Friday, 12 April 2019

ஒன்றுபடுவோம்.

ஒன்று படுவோம்.

ஒன்றுபடு சகோதரா ஒன்றுபடு
வென்று எடு வீரா வென்று எடு ஓரணியாய் சிந்தாமல் சிதறாமல்-இந்தியச்
சீரணியாய் பலமாவோம் ஒன்றுபடு.

சதிகாரக் கூட்டத்தை தெறிக்கவிடு அதிகார ஆட்டத்தை முறிக்கவிடு நேர்வழிக் கழகப் பரிவாரம்-பாரத
ஓர் முழக்கம் ஆகி ஒன்றுபடு.

விஸ்வ ரூபம் இமயம பார்
அஸ்வ மேத யாகம் சேர்
எழுகவே இளைஞரே நேர்--பாரதக்
கணைகளாய் ஒன்றுபடு.

ஒன்று நின்றும் வேள்வியாய்
என்றும் புரட்சிப் பொறிகளாய்
பரவும் பரத நெறிகளாய்-உலகம்
பரந்து ஆள ஒன்றுபடு.

தர்மம் வெல்லும் நிச்சயம்,
கர்வம் கொள்வோம் இலட்சியம்.
வல்லரசு இந்தியா-வலிமை
கொண்டோம் நின்று  ஒன்றுபடு .

கொ.பெ.பி. அய்யா