Thursday, 26 June 2014

எம்ஜிஆர் ......குழந்தைப்பாடல்



எம்ஜியாரு(குழந்தைப் பாடல்)

எம்ஜியாரு எம்ஜியாரு
என்பதே பேரு
என்றும் அவர் நம்மோடுதான்
வாழ்ந்து வாராரு.
அன்பு கொண்ட நெஞ்சமெல்லாம்
அவருக்கு சொந்தம்.
கொஞ்சும் தமிழ் குழந்தையுள்ளம்
குலவிடும் பந்தம்,.(எம்ஜியாரு)

தமிழ் பேசும் இதயங்களில்
கனியாகத் தானே
தரணியிலே மனிதனாக
நிசமாகத் தானே
அழகின் வடிவமும்
அவராகத் தானே
நிலவிடும் தர்மமும்
நினைவாகத் தானே (எம்ஜியாரு)

சின்னச் சின்னப் பிஞ்சான
எண்ணங்களில் தானே.
அன்னமிட்ட நெஞ்சமான
தந்தையாகத் தானே.
ஏழையின் சிரிப்பினிலே
இறைவனாகத் தானே
வாழும் வழி காந்தியின்
ஒளியாகத் தானே.(எம்ஜியாரு)

தர்மனாக வாழ்ந்த தமிழ்
தலைவராகத்தானே.
வாழ்ந்ததே பிறர்க்கான
வள்ளலாகத் தானே.
புரட்சி எனும் சொல்லுக்கான
புகழாகத் தானே.
வறட்சி எனும் சொல்லொழித்த
வாத்தியாராத் தானே.(எம்ஜியாரு)

எம்ஜியாரு தானே சினிமா
என்பதும்தானே.
என்றுமே சூப்பர் ஸ்டாரு
எம்ஜியாருதானே
கொள்கை என்றொரு
குறிக்கோள் தானே.
எல்கை நோக்கியே
இவர் வழி தானே.(எம்ஜியாரு)

கொ.பெ.பி.அய்யா.

Friday, 20 June 2014

மயக்கம் தீர்க!


மாறவேண்டும் மனிதனே!

மாறவேண்டும் மனிதனே
தீரவேண்டும் மயக்கமே!
காரணங்கள் ஆராய்ந்தும்
சேர வேண்டாம் கொள்கைகள்.
தீர்வுக்குத் தேர்வென்ன?
தேடுங்கள் தெளியுங்கள்.

சாதியா வர்க்கமா? சமயமா சாத்திரமா?
ஆதியா அந்தமா?ஆதாரம் தேடாமல்
இம்சைதான் சாபமா?இச்சைதான் பாவமா?
ஆசைதான் அழிவாமா?காரணம் தோண்டாமல்
தீர்வுக்கு வழியென்ன தேடுவோம் வாருங்கள்
தேவைக்குப் பொருளென்ன நாடுவோம் சேருங்கள்.

சான்றோரின் சரித்திரமும் ஆன்றோரின் கருத்தறமும்
தீண்டாத பொருளாச்சோ! வேண்டாத சொல்லாச்சோ!
தருதலைத் தலைவர்கள் திருந்தாத தொண்டர்கள்.
ஒருதலை மயக்கமோ உருப்படா அடிமைகள்
சுயநல வேடத்தில் சொக்கித்தான் கிடந்திடும்
சுதந்திரம் பாவமோ சுபாஸ் விட்ட சாபமோ!

மனிதனை மாற்றத்தான் மார்க்கமென்ன காண்போமோ!.
மனம் நிறைந்த மயக்கத்தை தீர்க்கவென்ன செய்வோமோ!
மாலைக்காக சிலைகளா மனம் மாற்றா நிலைகளா?
வேலையற்ற வெறுங்கல்லா வீணான கலைகளா?
கல்வியெனும் தீர்க்கமதை கசடற வழங்கினோமோ!
வல்லவை ஏதுண்டு வளம்பெற மனித மனமோ!


கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 18 June 2014

இது காதலா?

என்ன இது காதலா?

என்ன இது காதலா?
அன்பில் காதலா?இல்லை 
ஆசைக் காதலா?

அன்பில் நிறைந்த காதலானால்
அருமை குலையாது--அது
ஆசை வரைந்த காமமானால்
பாசம் பழகாது.

என்ன இது காதலா?
உண்மைக் காதலா?இல்லை
உறவில் காதலா?

உண்மை மணந்த காதலானால் 
கண்கள் பரவாது--அது 
உறவுக்கான கூடலானால்
கண்கள் பேசாது.

என்ன இது காதலா?
கருணைக் காதலா?இல்லை 
கடமைக் காதலா?

கருணை அருளும் காதலானால்
கைகள் தயங்காது--அது
கடமை வருடிய பரிவேயானால்
காமம் மயங்காது.

என்ன இது காதலா?
கனவுக் காதலா?இல்லை
காமக் காதலா?

கனவில் பூத்த காதலானால்
கற்பனை முடியாது--அது 
காமம் கூடிய மயக்கமானால்
காலம் விடியாது.

என்ன இது காதலா?
எண்ணக் காதலா?இல்லை
வண்ணக் காதலா?

எண்ணம் கொண்ட காதலானால்
என்றும் மாறாது--அது
வண்ணம் கண்ட நெருக்கமானால்
வறுமை தாங்காது.

என்ன இது காதலா?
என்னில்க் காதலா?இல்லை
என்மேல்க் காதலா?

பழகி என்னில் காதலானால்
விலகி ஓடாது—அது
பருவம் என்மேல் மோகமானால்
பழமை நிலையாது.

என்ன இது காதலா?
அழகில் காதலா?இல்லை
அறிவில் காதலா?

அழகில் நனைந்த காதலானால்
ஆயுள் வளராது—அது
அறிவில் வளர்ந்த பந்தமானால்
அன்பில் குறையாது.

என்ன இது காதலா?
இளமைக் காதலா?இல்லை
இயல்பில் காதலா?

இளமை குளிர்ந்த காதலானால்
முதுமை காயாது—அது
இயல்பில் முதிர்ந்த சொந்தமானால்
இதயம் தேயாது..

என்ன இது காதலா?
உணர்வில் காதலா?இல்லை
உடமைக் காதலா?

உணர்வில் கலந்த காதலானால்
கனவில் கலையாது—அது
உடமை நினைந்த உறவேயானால்
நினைவில் தொடராது.

என்ன இது காதலா?
உடல்மேல்க் காதலா?இல்லை
உள்ளத்தின் காதலா?

உடலால் தீண்டிய காதலானால்
உணர்வில் இணையாது—அது
உள்ளம் தழுவிய உருக்கமானால்
உயிரில் பிரியாது.

கொ.பெ.பி.அய்யா.




Friday, 13 June 2014

ஒத்தைச் சிங்கம்.









சிங்கம் ஒன்றுதான்.

சிங்கம் ஒன்றுதான் சிலுக்குதடா.
சீற்றம் கொண்டுதான் குலுக்குதடா.
எங்கே தேடுறே துணைக்கு ஆளுடா?
எதிர்க்கத் துணிவது எத்தனை பேருடா?

ஆம்பளை நீயென்றால் ஆயுதம் எதற்கடா?
ஆளா ஒத்தையா மோதத் துணிவாயடா.
அம்மா தமிழுன்னா அதிரும் உலகம் தானடா..
சும்மா இல்லடா செய்த தர்மம் துணையடா.

துரியோதனக் கூட்டமே உன்பின்னே
தூரம் திரும்பிப் பாரடா.
துச்சாதனன் அவன் அச்சம்
தொடை நடுக்கம் கேளடா.
எண்ணிக்கை எதற்கு
இடத்தை நிறைக்கவாடா?
ஒன்றெனச் சிங்கம்
உறுமி நின்றால் போதுமடா.

புரிந்த பாவங்கள் உன்னை
போரில் எதிர்க்குமடா.
புரிந்தும் உன்படை கலங்கி
புறமுதுகு காட்டுமடா.
செய்த தீவினை சகுனி போலடா   
சேர்ந்தே அழிக்குமடா.
சிந்திக்கும் மனமே பலமே
சத்தியம் இதுவே ஜெயமே!

கொ.பெ.பி.அய்யா.



Thursday, 12 June 2014

மழை நீர் சேமிப்போம்.




மழை நீரை சேகரிப்போம்.

தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரும் கோலம்—அதை
எண்ணி எண்ணி இன்றே நாமும்
சேகரிப்போம் மழை நீரை.

நிலத்தடி நீர்மட்டம் முழத்தடி முன்னூறும்
இழுத்தடி கீழ்மட்டம் இறங்கியும் போனதும்
அலுத்துத்தான் சாகுது அம்மாடி நோகுது.
வெளுத்துத்தான் விவசாயம் வீணாகி வாடுது.

என்றோ ஒருநாள் கண்டால் திருநாள்
அந்தோ அதுவும் கடலுக்குப் போனால்
ஊருக்குப் பாவம் யாருக்கு லாபம்?
சேகரிப்போம் மழை நீரை.

ஒரு சொட்டு நீருக்கு உலகமே தேடுது.
பெருவெள்ளம் கூடியே கடலுக்கு ஓடுது.
ஒரு சொட்டு நீருக்கு உலகப்போர் ஆகலாம்
உணர்ந்திந்த அவசரம்  சேகரிப்போம் மழை நீரை.

தேங்கிய கடல்நீரை ஏங்கியே கரையில்
நோங்கியே நின்றாலும்—தனக்குள்
வாங்கிய நீரை தவிக்கும் உயிருக்கும்
தந்தாலும் பயன்படுமா?

அவசரம் அறிந்துதான் ஆய்ந்தவர் சொன்னாரே.
அகிலமும் அவர் சொல்லை ஆணைகள் ஆக்குதே.
வீடெங்கும் நாடெங்கும் விரைந்துமே செய்யுவோம்
வீணாகும் மழை நீரை தேனாக சேகரிப்போம்.

கூரை நீரை பூமிக்குள் புதைப்போம்
பூமி நீரை கரைகட்டித் தடுப்போம்.
ஒவ்வொரு துளியும் உயிரெனக் காப்போம் 
ஔவ்வை மொழியென அரசாணை மதிப்போம்.

தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரும் கோலம்—அதை
எண்ணி எண்ணி இன்றே நாமும்
சேகரிப்போம் மழை நீரை.


கொ..பெ.பி.அய்யா.


  


Wednesday, 11 June 2014

அம்மாவும் பொய் சொல்வாள்.





அம்மாவும் பொய்யும்

பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

உச்சி வெயிலது உச்சிக்கு நேராய்
உருக்கி மூளையை கருக்கி மூஞ்சியை
புத்தியை மயக்கி சக்தியைக் குறைப்பதால்
மத்தியா னம்தான்  அடிக்கும் பேய் என
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.


அதிகப் புளிப்பு ஆகா தென்பதால்
அதுஉன் நரம்புகளை முறுக்கும் என்பதால்
வலிப்பு நோய்களே புளிப்பு என்பதால்
புளிய மரங்கள் பேய்களின் வீடென
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

சுவாசிக்கப் பிராண வாயு தந்திடும்
சுகமே பகலில் மரத்தின் நிழல்களும்
இரவில் அது விடும் கரியமில வாயு
ஏற்கா தென்பதால் அமுக்கும் பேய் என
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

இரவுப் பொழுததில் இரைக்கு அலைந்திடும்
கொடிய ஜந்துகள் விடிய நெருங்கிடும்
பெருகிய நீர்நிலை உறங்கிடும் வேளை
குளித்திடக் கோபம் கொன்றிடும் எனவும்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

இதுபோல் பொய்கள் இன்னும் எத்தனை
இயற்றிச் சொல்லுவாள் எமது அன்னை
அதுபோல் தொடரட்டும் அவள்மறை மெய்கள்.
அனைத்தும் வாழ்க அவள்முறை நெறிகள்.  
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள் ஒரு
பொய்யும் நன்மை தருமானால்
பொய் சொல்லுவாள் அம்மா
பொய் சொல்லுவாள்.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 9 June 2014

வேடநத்தம்



விரும்பும் ஊர் வேடநத்தம்.

வேட நத்தம் என்றாலே--எவரும்
விரும்பும் ஊர் என்னும் பொருளே.
தேடும் நித்தம் கண்டாலே--காசி
விசுவநாதர் அருளாலே!

தூத்துக்குடி மாவட்டம்--வளம்
ஏற்றுக்குடி வேடநத்தம்.
வேற்றுமைகள் பாராட்டா--உளம் 
போற்றுக்குடி வேடநத்தம்.

ஊரென ஒன்றும் தூரம்--காட்டும்
உயர்ந்து நின்றும் தோப்பு.
நேரெனக் கொண்டும் நித்தியம்--போற்றும்
நிமிர்ந்த கோபுரம் வேட நத்தம்.

வீர வேடர் நீராவி--கண்டு
வேட்கை தணிய மொண்டு
ஆறிய தாகம் அருமை--கொண்டு
தேரிய நத்தம் வேட நத்தம்.

வேடுவர் பெண்ணை நாடியே--வேலன்
தேடிக் களைத்து ஓடியே-
கூடிய மோகம்  தீரவே---ஊற்று
ஆடிய தீர்த்தம் வேடநத்தம்

ஊரெனக் குடும்பம் ஒன்றாம்--பந்தம்
தேரெனப் பிடிக்கச் சொந்தம் 
சீரென நகர்த்தும் நன்றாம்--ஒன்றாம்
பேரெனப் புகழுறும் வேடநத்தம். 
.
விரிந்தும் பெருகியும் வளர்ந்தும்--தினம்
அறிந்தும் சமத்துவம் அமைந்தும்-
நிறைந்தும் இணக்கம் நிலைக்கும்--கணம்!
உறையும் வணக்கம் வேட நத்தம்.

சுவர்க்கம் எங்கே தேடலாம்--அந்த 
சுகமும் கண்டே ஆறலாம்.
கரிய மாலின் கருணையே--கண்ட
புதிய சுவர்க்கம் வேடநத்தம்.

காசி விஸ்வ நாதனும்--துணை
வாசி விசாலா ஆளும்-
ஆசி மேவும் வாசம்--இணை
நேசம் வாழும் வேடநத்தம்.

கொ.பெ.பி.அய்யா.

பெண் யோகம்.




ஏனழுதாய் என்மகளே

ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்.மகளே!
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

பெண்ணாகப் பிறப்ப தந்நாள்
பாவம் என்றும் பழி சொன்னார்..
பெண்ணாகப் பிறப்பதுவும் குலப்
பெருமை என்றும் ஔவ்வை சொன்னாள்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

ஔவ்வை சொன்ன மொழி போலே
அவள் கண்ட வழி மேலே
பேறு புகழ் கொண்ட பெண்கள்
பெருமை பெற்றார் தோன்றலையோ!
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

பெண்ணாகப் பிறந்தவர்தான்
பெண் பெருமை ஜெயலலிதா.
கண்ணாகப் பெண்ணைப் போற்றி
மண்ணாளப் பெருமை செய்தார்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

கள்ளிப்பால் கொடுத்த காலம்
கருவிலே முடித்த கோலம்
இல்லை என்றே ஆனதம்மா
எங்களம்மா ஜெயலலிதாவால்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

பெண்ணாகப் பிறந்தவளை
பொன்னாகப் போற்றுகின்றார்.
கல்வி எல்லாம் கற்றுத் தந்து
விண்ணாய அம்மா செய்தார்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

கல்யாணச் சந்தையிலே
கண்கலங்கும் பெண்ணில்லை.
கட்டுந்தாலி தங்கமுடன் அம்மா
பெற்ற தாயாய் தருகின்றார்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

கொ.பெ.பி.அய்யா.