முன்னை முதலொலி!
முன்னை முதலொலியே!
முதல்ச்சொல் அம்மாவே!
பின்னை வந்த மொழிகளுக்கும்
அன்னைத் தமிழ் செம்மொழியே!!
முதல்ச்சொல் அம்மாவே!
பின்னை வந்த மொழிகளுக்கும்
அன்னைத் தமிழ் செம்மொழியே!!
இலக்கணக் கட்டாலே
எழில் நிறை பெற்றவளே!
இசைத் தமிழ் நாடகம்!
இயல்பிலே கற்றவளே !
இலக்கியக் களஞ்சியமே
கலைகளின் தலை மகளே!
வளம் பெருத்த வள்ளலே!
வற்றாத சுரபி நீயே!
எழில் நிறை பெற்றவளே!
இசைத் தமிழ் நாடகம்!
இயல்பிலே கற்றவளே !
இலக்கியக் களஞ்சியமே
கலைகளின் தலை மகளே!
வளம் பெருத்த வள்ளலே!
வற்றாத சுரபி நீயே!
படர்ந்து வரும் உன்
புகழே
தொடர்ந்து
பெறும் உன் வளமே!
வளர்ந்து வரும் தமிழே
நீ
வயது
முத்தா இளம் எழிலே!.
சாபக்கேடாய் மேலைமொழி
சனியாக
நுழைந்தாலும்
மேவியே
மேலும் நீயே
மெருகேறி
ஆளுகிறாய்.
விறு விறுப்பாய் வளர்கின்றாய்.
வேக நடை விரைகின்றாய்.
முதன்மை
மொழி தமிழாக
முன்னேறிச் செல்லுகின்றாய்.
எங்கும்
தமிழ் எதிலும் தமிழ்
என்னும்
நிலை நிறைகின்றாய்
தமிழ்
வழிக் கல்விகளில்
தரணியெங்கும்.ஆள்கின்றாய்.
தன்
மானம் சிந்தாமல்
எந்நாளும் பிந்தாமல்
தமிழென்றால் செம்மையென
அமுதமாய் வாழ்கின்றாய்!
அமுதமாய் வாழ்கின்றாய்!
கொ.பெ.பி.அய்யா,
No comments:
Post a Comment