Friday, 18 September 2020

பொறுமையுடன் வாழ்க!

பொறுமையுடன் வாழ்க

பிழைக்கத் தானே  உலகம்.
உழைக்கத் தானே  உடலும்.
கவலைக் கென்ன தேவை.
கவனம் பண்ணு வாழ்வை.!

தன்பலம் எழுப்பிடு.
பின்புலம் மறந்திடு.
வெறும் பேச்சு விலக்கிடு.
பொறுப்பாச்சு புறப்படு.

வரவினை நினைவிடு.
செலவினைக் கணக்கிடு.
வீணான ஆடம்பரம்.
தானாளும் சங்கடம்.

திட்டமாய் அடியெடு.
எட்டுவதைக் குறியிடு
கிடைப்பதில் நிறைந்திடு.
அடைவுக்குள் அளவிடு.

நிலையினை உணர்ந்திடு
விலையினை தேர்ந்திடு
கடன்படாக் கரந்தொடு.
உடன்படு வரம்பொடு.

பெருமைக்கு மாவிடிப்பு.
வறுமைக்குள் மூழ்கடிப்பு.
பொறுமையுடன் வாழ்வது.
அருமையது தேர்வது.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 14 September 2020

தமிழன் வாழ்வான்.

பச்சைத்தமிழன் வாழ்வான்!

எல்லாம் எனக்குத் தெரியும்
என்றே தானே அலைவான்.
மெய்யுமிங்கே அறியாமல்
அய்யோவெனப் போவான்!

பிறரைப் படிக்கத் துணியாதான்
தன்னை வளர்க்கமாட்டான்
பிறவிப் பயனுமடையாமல்
பேதையாகச் சாவான்.

மாற்றாரையும் உணராதான்
மனிதம் நலமே பழகாதான்
சுற்றாரெவரு மில்லாமல்
அனாதையாக மாழ்வான்.

இயற்கை மகிமை புரியாதான்
இறையினருளை உணராதான்
செயற்கை கவரும் மயக்கத்தில்
சிக்கித்ததானே மாய்வான்.

உயிர்கள் போற்றா எவனுமே
மயிரினுங் கேவலமாவானே.
பயிரும் வாடப் பொறுப்பானோ
பச்சைத்தமிழன் வாழ்வானே!

கொ.பெ.அய்யா.

Saturday, 5 September 2020

மிச்சமென்ன?

பதவி மேலே பதவி ஏறி
பணம் மட்டுந் தானே குறி--ஒருநாள்
பாடை யிலே சவ்வாரி