Wednesday, 25 December 2013

திருமண வாழ்த்து.

திருமண வாழ்த்து

ஒன்னு தொட்டுராயர் துணையாய்
இன்று தொட்டுதானும் இணையாய்
இருமனம் கலந்து ஒருமனம் காதலாய்
திருமணம் நிரைந்த தெய்வீக ஈதலாய்
தினமும் வாழ்கவே!

உத்தண்ட ராமன் இராமலட்சுமி
உத்தமம் ஆகும் உம்மோட இணைவு.
பெற்றெல்லா நலமும் பேணியும் மேலும்
வற்றாத அன்பில் வாழ்நாளெல்லாம்
உற்றாள்வீராக ஒளிபோல் வாழ்கவே!

விதியின் பதிவிது புதிய உறவும்
பதிவின் வரவிது தம்பதி மரபும்
பதியின் இணையும் சதியின் துணையும்
மதியின் வளர்வும் நிறைந்தும்தாம்
மாண்புற வாழ்கவே!

மென்மையும் திண்மையும் இணைந்தும்
உண்மையும் நன்மையும் பிணைந்தும்.
ஒண்மையும் தண்மையும் துணைந்தும்
பெண்மையும் ஆண்மையும் அணைந்தும்
வளமுற வாழ்கவே!

பயனுறு செல்வம் பதினாறும் பெற்றும்
இயனுறு நலமும் இனிதே உற்றும்
நயனுறு நன்னூல் மங்களம் ஏற்றும்
வியனுற வாழ்வே வாழ்ந்தே போற்றும்
இல்லறம் வாழ்கவே!

இந்நாள் இனிமை பின்னாள் அதுபோல்
பெண்ணால் தொடரும் பெண்ணாள் அவளால்
நன்னாள் வளரும் தன்னால் தழையும்.
கண்ணால் துலங்கும் பொன்னாள் விளங்கும்

எந்நாளும் வாழ்கவே!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment