பழைய உறவுக்காரி!
சாய்ந்த பொழுதில்தான்,
ஒய்ந்த உறவெல்லாம்,
உதிர்ந்தும் வதங்காமல்
மலர்வதும் காதலோ!..
இளமைப் பருவத்தில்,
இனித்த உறவுகளோ!,
கருத்துப் புரியாமல்,,
அறியாத காதலோ!!
பள்ளிப் பருவத்திலே,
துள்ளுஞ் சிட்டுகளோ!,
விவரந் தெரியாமலே.,
விளங்காத காதலோ!.
மொட்டாக நெருங்கியவள்,
மலராகி விலகினாள்.!
பட்டதென்ன நெஞ்சிலே!
பழகியது காதலோ!.
விரும்பியதும் விளையாட்டு.,
அரும்பியதும் இளங்கூட்டு.,,
பிரிவென்றும் விளங்காமல்,
உருகியதும் காதலோ!
முன்னிளமை சிறுபருவம்
முளைவிடும் அன்பருவம்
வெண்ணிலை இருமனதும்
விளையாத காதலோ!
வெண்ணிலை இருமனதும்
விளையாத காதலோ!
பாலிய வேற்றுமையும்,
பதியாத ஆற்றுமையும்
பதியாத ஆற்றுமையும்
பூவையவள் பூப்பெய்தும்
புரியச்சொன்ன காதலோ!
புரியச்சொன்ன காதலோ!
உலகமது புரியாமல்,
உருவான உருக்கமோ!,
விலகிய போது நெஞ்சம்,
வலித்ததும் காதலோ!
பின்னிளமைப் பருவமோ!,
பிரியமவள் உருவமோ!.
எண்ணியும் வரையுமோ!.
இதயம்தான் காதலோ!
காலத்தால் மலர்வதும்.
கோலத்தால் வளர்வதும்.
மோனத்தில் நிறைவதும்.
ஞானமும் காதலோ!
உண்ணவும் மறக்குமோ!
தன்னிலை இழக்குமோ!
கண்ணுறக்கம் துறக்குமோ!
இன்னதுதான் காதலோ!
காலத்தால் மலர்வதும்.
கோலத்தால் வளர்வதும்.
மோனத்தில் நிறைவதும்.
ஞானமும் காதலோ!
உண்ணவும் மறக்குமோ!
தன்னிலை இழக்குமோ!
கண்ணுறக்கம் துறக்குமோ!
இன்னதுதான் காதலோ!
இதயங்கள் சங்கமம்.
உதயமுதல் சங்கடம்.
உறவுகள் பொங்குமோ!,
உறவுகள் பொங்குமோ!,
மறப்பதும் காதலோ!
உறவுக்குக் கைதியோ!
பிரிவுக்குச் செய்தியோ!
இரவுக்குள் இருளோ!
இறப்பதும் காதலோ!
பித்தமாக்கும் நஞ்சோ!
பேச்சுக்கும் ஒன்றோ!.
தேவதாசன் ஆக்குமோ!,
கேவலம் காதலோ!
விதி யாரை விட்டதோ!
மதியேன் கெட்டதோ!.
உறவுகளின் கண்ணீரில்
கரைவதுதான் காதலோ!
ஒருநாள் பாதை வழி
உருகும்பேதை காதல் மொழி.
மருமகனைப் பாரென்றே
திருந்துவதும் காதலோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment