Wednesday, 15 April 2020

உள்ளத்தில் நல்ல உள்ளம்.

உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்கா தென்பது
நல்லவர் பதித்தடா-நம்
மருத்துவத் தெய்வங்களே-நம்
மருத்துவத் தெய்வங்களே.

தன்னுயிர் போற்றாமல்
மன்னுயிர் காக்கவென்றே
மண்ணுலகில் வாழ்வோரடா-நம்
நெஞ்சத்தில் கொள்வோமடா-அவர்
மருத்துவத் தெய்வங்களே.

தெய்வங்கள் யார் கண்டார்
தரிசனம் எவர் கொண்டார்
உயிர் தந்த வள்ளல்களே-நம்
கண்கண்ட தெய்வங்களே-அவர்
மருத்துவத் தெய்வங்களே.

எவன் கண்ட கொரனாவோ!
இவர் வென்ற மகத்துவமோ!
எமன் நின்றும் மருண்டானோ!
என்றென்றும் நலம்வாழ்கவே-வாழ்க
மருத்துவத் தெய்வங்களே.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment