Thursday, 30 July 2020

குப்பைகளைத் தள்ளு!

அம்மாவின் செல்லம் நீ!
அப்பாவின் உள்ளம் நீ!
வீடுநாடு போற்ற நீ!
வாழ்வினை ஆற்று நீ!

விவசாயம் வாழ நீ!
அவசியம் தேடு நீ!
இயற்கையை வணங்கு நீ!
இயல்புக்கு இணங்கு நீ!

குப்பைகளை தள்ளு நீ!
ஒபுபுதல் கொள்ளு நீ!
ஒழுக்கமே ஆற்று நீ!
பழக்கமே தேற்று நீ!

அரசியல் பழகு நீ!
விரசங்கள் விலக்கு நீ!
புதுமைகள் ஆக்கு நீ!
பழமைகள் தேக்கு நீ!

வாய்மையே பழக்கு நீ!
நேர்மையே துலக்கு நீ!
தூய்மைமையை விளக்கு நீ!
சீர்மையை நிலவு நீ!

வாழ வைத்து வாழ்க நீ!
சூழ வாழ்ந்து ஆள்க நீ!
செப்பும் மொழி போற்று நீ
தப்பும் வழி மாற்று நீ!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 25 July 2020

வருவாரா மாட்டாரா!


வருவாரா மாட்டாரா--நன்மை
வரவேற்பது நம்பாடு.
தருவாரா பெறுவாரா--அவசரம்
தமிழர்நம் நிலைப்பாடு.

ஆட்சிதான் மாற்றமா--இன்று
அதுவல்ல அவசரம்.
அரசியலின் மாற்றமே--அறிவு
புரிந்தவரின் தரிசனம்.

இரஜினி என்ற நல்லவர்--மாற்று
கஜினி அல்ல சொல்லவர்.
இது தருணம் ஒன்றுதான்--மறு
முறைக் கல்ல என்பதாம்.

காந்திமகான் போலத்தான்--தூய்மை
ஏந்தியரசு ஆளத்தான்.
கட்சிக்கவர் தலைவர்தான்--தமிழ்
ஆட்சிக்கொரு இளைஞர்தான்.

காமராஜர் எம்.ஜி.ஆர்--பாமரர்
சேமங் காக்க ஆண்டனர்.
நாமறிந்த நல்லவரில்--இந்நாள்
நேயம் இரஜினி போலயார்?

இரசிக னென்ற பேரோடு--தலைவன்
இரசனைக் கென்ன புகழோடு!
அதிசயம் நிகழட்டும்--இரஜினி
எழுச்சி உன்னில் விழிக்கட்டும்.

உன்னில் விழிக்கும் எழுச்சியே--தமிழ்
மண்ணில் செழிக்கும் புரட்சியே!
தயாரானார் இரஜினியே--தமிழ்
தாயார்க்கவர் இரட்சனே!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 17 July 2020

பயம் எதற்கு கொரோனாவுக்கு!

பயம் எதற்கு கொரோனாவுக்கு!
வயப் படுவோம் நாம் நமக்கு.
புதிய பாதை தேடுவோம்.
முகக் கவசம் சூடூவோம்.

விலகி உள்ளம் பழகுவோம்.
வணங்கிக் கூப்பி அளவுவோம்.
இடை வெளிகள் விலகுவோம்
தொடுங் கைகள் கழுவுவோம்.

வெளியில் பயணம் சிக்கனம்.
குளியல் உடனே அக்கணம்.
ஆடை நாளும் துவைத்திடுவோம்.
கூடும் கூட்டம் தவிர்த்திடுவோம்.

வாயும் மூக்கும் மூடவே!
தூய கவசம் அணிவதே!
சூடிய கவசம் மூடியே,
மீறும் இருமல் விடுகவே!

வாங்கும் பொருளில் கிரிமிகள்,
தூங்கும் இரகசியம் அறிந்திடணும்;
வெய்யில் வெளியில் சிலமணிகள்:
வெய்யக் கழுவியே புழங்கிடணும்.

அரசு மருத்துவ விதிமுறைகள்,
அறிந்து நடக்கும் செயல்முறைகள்.
எமனாம் கொரோனா ஒழிந்திடுமே!
நமக்கு நாமே மருந்தாமே!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 15 July 2020

தமிழின் விளக்கம் அழகு முருகன்.

பழிப்பதும் இழிப்பதும் எதற்கு?
அதனா லென்ன முறுக்கு!
பழிக்கவும் இழிக்கவு முன்னே
படித்ததும் தெளிந்ததும் என்னே!

தமிழின் விளக்கம் முருகன்.
தமிழின் அழகின் அருகன்.
அமுதத் தமிழின் ருசியும்--அவனை
அறிந்தால் அடங்கும் பசியும்.

கவசம் என்பது காப்பு,
அவசியம் சொன்னது கோப்பு.
துவேசம் இதிலென்ன நோக்கு--மாசு
ஆபாசம் திரித்தலை நீக்கு.

இலக்கியம் தமிழின் சொத்து.
சிலாக்கியம் தமிழினப் பற்று.
அருகதை எவர்க்குப் பழிக்க--இல்லை
விடுகதை இதுவோ அழிக்க!

அவரவர் உணர்வு அவர்க்கு.
எவரெவர் உரிமை தகர்க்க?
அருத்தம் தெளிந்தால் பழகு--மெய்மை
பொருத்தம் முறிந்தால் விலகு!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 14 July 2020

ஒருநிலம்-ஒருகுலம்-ஒருமதம்.

பாரென்ற ஊரொன்று உலகமே!
ஊரென்ற பேரொன்று பாரதமே!
குலமென்ற இனமொன்று மனிதமே!
இயலென்ற இறையொன்று சம்மதமே!

மதமெனும் சொல்லே சம்மதமே!
பொதுவெனும் நெறியே நம்மதமே!
கீதை பைபில் குர்ரா னெல்லாம்
போதனை வாழ்வியல் ஒரு சொல்லாம்.

வேளாங் கண்ணி கிருபை மாதா,
நாகூர் நாயகம் கருணை தர்கா;
கன்னியா குமரி பகவதி உதயம்:
சன்மார்க்கம் துலக்கும் சங்கம இதயம்.

இந்து முசுலீம் கிறித்துவரும்,
சொந்தம் உறவில் ஒருகுடும்பம்.
நிறத்தால் சொல்லும் சாதியில்லை:
பிறப்பால் இந்தியர் பேதமில்லை.

நீதிகள் பழக்கும் திருமறைகள்,
வேதங்கள் விளக்கும் பொதுமறைகள்.
ஒற்றுமை அடையாளம் இந்தியம்:
பற்றிய நெறிமுறை உலகியம்.

ஒருநிலம் ஓருகுலம் ஓரினமே!
பெருமை துலங்கிடும் பாரதமே!
உலகம் ஒன்றியம் ஓரரசு
துலங்கட்டும் இந்தியப் பேரரசு.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 12 July 2020

டி.வி மூடு!

உண்ணமை யெது பொய்யெது!
உள்ட்டா வாத்தான் தெரியுது!
கழுதையை குதிரையாக்கும்--விவாத
காட்சி பாவம் டி.வி மூடு

தெருச்சண்டை நாய்க் கூச்சல்,
ஒருமையிலே பேய்ப் பாய்ச்சல்;
பலகீனர் பாலகர்கள்--வன்மை
பழகல் தோசம் டி.வி மூடு.

கூலிக் காக மாரடிக்கும்,
கூடிப் பேசி நாறடிக்கும்;
வாயாடும் வெட்டிகள்--பொழுது
வீணாப் போக்கும் டி.வி.மூடு.

எலி செத்தா தேடும் வீச்சம்.
இழிவான காக்கா கூட்டம்;
மலிவான அரசியலின்--விவாத
மேடை விரசம் டி.வி.மூடு.

நன்மைகளைப் பாராட்டியும்,
உண்மைகளைப் பேசாட்டியும்;
பொய்யெனும் வைரசை--பரவச்
செய்யும் நாசம் டி.வி.மூடு

புண்படும் விவாதப் பேச்சு,
பண்பாடு ஆகிப் போச்சோ!
உரிமைக்கும் எல்லையே--மனித
அறிவு ஆகும் டி.வி.மூடு.

பெண்களை வில்லி ஆக்கும்
தன்மை கெட்ட நாடகங்கள்
ஒப்பாரி அவலங்கள்-வீடு
ஒப்பலாமோ டி.வி மூடு.

கொலைக் குற்ற விரசங்கள்
களவு கலை நுட்பங்கள்
கண்கூசும் கொடுமைகள்-காட்டும்
காட்சி வேண்டாம் டி.வி மூடு

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 9 July 2020

அம்மாவின் வாக்கு.

நூறாண்டு காலம் கழகம் ஆளும்
அம்மாவின் வாக்கு வேரூன்றி வாழும்.
புரட்சியில் உதித்த பொன்மனக் கழகம்,
நிரந்தரம் அண்ணா தி.மு கழகம்.(நூறா)

சத்தியத் தாயின் உத்தமப் புதல்வன்,
சத்தியப் பாதையின் புரட்சித் தலைவன்;
இரத்தத்தின் இரத்தம் தமிழர் இயக்கம்-அம்மா
புரட்சித் தலைவி புதுயுகம் தொடக்கம்.(நூறா)

தொண்டன் இங்கு தலைவ னாகிறான்.
எந்தன் என்பான் இடறி வீழ்கிறான்.
வாரிசு முறையாம் சர்வாதி காரம்--என்றும்
நேராத கழகமாம்  சனநாயகம்.(நூறா)

எவரும் உழைத்தால் முதல்வர் ஆகலாம்.
எடப்பாடி உரைத்த சத்திய வாக்கதாம்.
வாணிவக் கழகம் போலிது அல்ல-தமிழ்
மானுடக் கழகம் நூறாண்டு வெல்லும்.(நூறா)

கொ.பெ.பி.அய்யா.

விவசாயி முதல்வர்.

விவசாய விவசாயி!
விழித்துணர்ந்த யோகமோ!
விவசாயம் வாழவே,
விவசாயி முதல்வரே,
அவசரம் அவசியமோ!

வாடிய பயிர்கண்டு,
வாடிடும் கருணையே,
தேடிய வழிகண்டும்;
பாட்டாளி முதல்வரே:
மீட்டினார் காவேரி.

நாடெல்லாம் நீர்நிலைகள்,
நதிபெருக்கும் பேரணைகள்,
காடெல்லாம் கழனிகள்;
கண்ணிறைந்த பசுமைகள்:
கண்டதும் தமிழகமே!

வீணாகும் வெள்ளநீர்,
தானாக செல்லும்சீர்,
ஊனப்பட்ட நதிவழிகள்;
ஆழப்பட தூரெடுத்த:
சோழனவர் பழனிச்சாமி.

விவசாய மண்டலம்,
நவதானியக் களஞ்சியம்,
பாதுகாத்த விவசாயி,
சாதித்தமிழ் முதல்வராம்
சாதித்த பழனிச்சாமி.

தொடரட்டும் தமிழாட்சி,
படரட்டும் வள(ம்)மாட்சி,
கடரட்டும் சனித்தனம்;
இடரட்டும் திரியோகணம்:
விடிந்தது விடியலே!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 5 July 2020

பசுமை இந்தியா.

முத்துக் குவியலாய் பனிமலைகள்,
மெத்தக் கொடைகளாய் அரணிலைகள்;
கத்தும் கடலலைகள் மிரட்டவே:
கெத்துப் பரதப்படை அணிவகுப்பே!

எதிரி யெவருண்டோ எதிர்க்கவே!
பதறும் பலங்கொண்டோம் உலகிலே.
ஓருயிர் இந்தியர் ஒருங்கிணைவே!
பாரினில் நின்றதார் அருஞ்சிறப்பே!

மொழி பல்லாயிரம் ஒரு குரலே!
இனம் எல்லாமே ஒரு குலமே!
மதங் கொள்ளாத மதமறங்கள்:
விதஞ் சொல்லாத இந்தியமே!

நதிகள் பாயுங் கடைமடைகள்,
விதிகள் மேவும் பொதுவுடைமை;
பசுமை இந்தியா நடைமுறைகள்:
வலிமை என்பதே படைநிரைகள்.

ஆலைகள் நிறம்பும் பாரதம்.
வேலைகள் வழங்கும் பாரிடம்.
ஆயுதம் வேறுண்டோ வெல்லவே!
ஆனதில் மாறுண்டோ வல்லரசே!

கொ.பெ.பி அய்யா.

Friday, 3 July 2020

உன்னுயிர் நாங்கள்.

எம்மை நீ தூங்க வைக்க,
உன்னை நீ காவல் வைத்தாய்.
நம்பிக்கை உன் நிழலே--எமது
நிம்மதிக்கு ஆறுதலோ!

பனிமலை மீதில் நீ,
பகலிரவு எண்ணாமல்;
எம்முயிரை உன்னுயிராய்:
எண்ணி நீ காவல் செய்தாய்.

தாயாக விழித்திருந்து,
தவமாக தனித்திருந்து;
உன்னுயிரை பணயம் வைத்து:
மன்னுயிரை வாழ வைத்தாய்.

இந்தியாவே குடும்பம் என
சந்ததிக்கு சாட்சி யானாய்.
உன்னுயிரே எம்முயிரே
இன்னுயிராய் உயிர்க்கிறதே!

எம்மில் நீ வாழ்கிறது,
இதயம் சொல்லி துடிக்கிறது.
நூறு முப்பது கோடியுயிர்:
சேரத் தப்பாது பேடியுயிர்.

தாயை பழிப்பவன்,
நாயினுங் கீழாவான்.
தாய்நாடு காப்பவன்
சேயெனும் தாயாவான்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 1 July 2020

எம்ஜிஆரு.

எம்ஜியாரு(குழந்தைப் பாடல்)

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

தமிழ் பேசும் இதயங்களில்
கனியாகத் தானே—அந்தக்
கனியோடு பசுமையான—இரட்டை
இலையாகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

சின்னச் சின்னப் பிஞ்சான
எண்ணங்களில் தானே-சத்து
அன்னமிட்ட நெஞ்சமான--கல்வித்
தந்தையாகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

ஏழை அவன் சிரிப்பினிலே
இறைவனாகத் தானே-என்றும்
வாழும் வழி காந்தியான--குடிசை
ஒளிவிளக்காகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

தர்மனாக வாழ்ந்த தமிழ்
தங்கத் தலைவரு—வாழ்வில்
தனக்கென வாழாத_கண்ட
கர்ணனவர் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

புரட்சி எனும் சொல்லுக்கான
புகழ் அவர்தானே—தமிழில்
வறட்சி எனும் சொல்லொழித்த
வாத்தியார் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

எம்ஜியாரே சினிமா
என்பதுதே நிசமா--என்றும்
சூப்பர் ஸ்டாரு
என்பதுதும் எம்ஜிஆரு..

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

கொ.பெ.பி.அய்யா.