Wednesday, 25 December 2013

முயற்சிகளே பயிற்சிகள்.

முயற்சிகளே பயிற்சிகள் !

இறைவன் ஒருவன் இருக்கின்றான்,
அருளால்  அவனே கொடுக்கின்றான்.,
என்றே படுத்தும்  கிடந்திட்டால்--தானே
எந்தப் பருப்பும் வேகாதே.

உணவைப்பெறவும் பயிர் செய்யணும்
உழவர் அதற்கும்  முயன்றிடனும்.
கனவையுங்கூட காண்பதற்கும்--நீயே
கண்ணில் உறக்கம்  தூண்டிடனும்..

செத்த எலிக்கும் விலையுண்டு.
விற்றுப் பெருக்கிய கதையொன்று.
பூனைக்காரன் தேவை கண்டு--வளர்வான்
மூளைக்காரன் காசு வென்று.

எலிவிற்ற காசில் வைக்கோலும்
அதுவிற்ற இலாபம் கைமேலும்.
சில்லறை பெருகி பணமாகும்--அன்று
சொல்லுற பெயரெல்லாம் அவனாகும்.

வீணில் எதுவும் ஆவதில்லை
பேணும் செயலும் தோற்பதில்லை.
ஒன்றில் முயன்று மேலொன்று--தொடரும்
நன்றில் உயரும் நாளொன்று.

விற்று  விற்று  வியாபாரியாவான்.
கற்று கற்று அதிபருமாவான்.
முயற்சிகள்தானே பயிற்சிகளாகும்--அயரா
பயிற்சிகள்தானே திருவினையாகும்..

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment