Friday, 27 December 2013

பிறவி வேண்ணடாம்.

இதுதான் சுழற்சியோ!

விண்ணுக்குள் மறைந்தேனோ!
வேண்டி நானுங் கேட்டேனோ!
பெண்ணுக்குள் விதைத்தானோ!
பிள்ளையாகி விளைந்தேனோ!

விளைந்து என்ன தந்தேனோ!
வீணாகிப் போனேனோ!
மணியானால் விதைதானோ!
மறுபடியும் முளைப்பேனோ!

மண் புதையும் நாளதுவோ!
மீண்டும் விதை தேறுதற்கோ!
விண்ணேகி வேண்டுதற்கோ!
என் தாயில் பிறப்பதற்கோ!

வேண்டாம் வேண்டாம் பிறவி வேண்டாம்.
வாழ்ந்தேனோ வீழ்ந்தேனோ!புரியவில்லை.
வாழ்ந்திருந்தால் வாழுவேன் பிறவியில்லை.
வீழ்நதிருந்தால் மாண்டிருப்பேன் வரலாறில்லை.

கொ.பெ.பிச்சையா..



No comments:

Post a Comment