எசப்பாட்டு எவடி?
அடி ஆரடி அவடிப் பொட்டப்புள்ள?
பொடி ஏனடிக் கூறடி மட்டப்புள்ள.!
கொடி நீயடி எங்கடி எட்டப்புள்ள?
பிடி காட்டடி வாலடிக் கிட்டப்புள்ள.!
பாட்டுக்குப் பாட்டு எசப்பாட்டா!
மேட்டுக்குத் தாவு வசப் பாட்டா!
ஆவலும் கூடியும் ஏறுதடி!
பாவியென் மனசும் தேடுதடி.
குரலங் கேட்டாக் குமரியடி.
உருளும் புரளும் ஆசையடி.
தானா நெஞ்சும் தொலையுதடி
வீணா கெஞ்சி அலையுதடி.
ஆசையும்
ஊறிக் கூடுதடி
மீசையும்
மீறி ஆடுதடி.
வீசுங் காற்றும் தூண்டுதடி.
கூசும் ஊற்றும் தாண்டுதடி.
ஏங்குற இளசும் தாங்கலயே!
நோங்குற வயசும் தூங்கலயே!
தேங்குற வெள்ளம் உடைக்குதடி!
வீங்குற உள்ளம் பதைக்குதடி!
கத்தாழங் காட்டு இருட்டுல
சித்தாரக் கள்ளி நடையில.
கொத்தோடு முள்ளு குத்தையில
அத்தான் அள்ளு வேங்கையில
சுடல
மாடன் துணையிருப்பான்
உடல ஒளிச்சதும் போதுமடி.
உள்ளம் இசஞ்சிச்
சேந்திருச்சி.
கள்ளம் மறஞ்சி
துணிஞ்சிருச்சி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment