செதுக்குங்கள் சிலையாகிறேன்..
தலைவாசல் வழியே நுழையவும்
தயங்கித்தான் தனியே விழையவும்
புறவாசல் எட்டிப் பார்க்கிறேன்
முறைவாசல் செய்தும் வேர்க்கிறேன்.
நானோ ஒரு பாறாங்கல்தான்........
நானே சுமந்து நேர்கிறேன்
பக்குவமாய் செதுக்குவீரானால்
நானுங்கூட சிலையாவேன்.
கலைமிளிரும் கருத்துளியால்.
சிலைவளர திருத்துவீர்!
சிலைவளர திருத்துவீர்!
செதுக்குவீர் ........ செதுக்குவீர்..
சிற்பமாகும்வரை செதுக்குவீர்!!
கொ.பெ.பி.அய்யா.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment