முகநூல் நட்பு மாலை
தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்!
எவர்முகமுந்தேடி இன்னும் அறியோம்!
காற்றில் அலையும் வலைதள உலகம்!
கூட்டி அணைத்திடக் குடும்பம் ஆனோம்!
காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணா ளெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப் போமோ எனயெழு நினைவுகள்!
தோணா தொழிந்தால் தொடருமோ அணைவுகள்!
குரவர்கள் நாமே தர்மங்கள் படைப்போம்!
மறவர்கள் நாமே மடமைகள் உடைப்போம்!
அறவர்கள் நாமே வன்மைகள் துடைப்போம்!
உறவுகள் நாமே ஊழினை அடைப்போம்!!
தெய்வம் தந்த இதயம் நமக்கு.
பெய்வம் அன்பு வளர்ந்து சிறப்பு.
உய்வம் பழகி மனிதம் தழைக்க.
செய்வம் அழகு உலகம் நிலைக்க .
தேனும் தமிழாம் தேடி முகநூலில்
காணும் மொழியாம் நாடி இகநாளில்.
பேணும் நட்பினில் கூடி அகவானில்
தோணும் அன்பினில் ஆடுவம் சுபமாகில்.
படிக்கும் தமிழினிக்க பழகும் கவியினிக்க
வடிக்கும் பொருளினிக்க வாழும் வாழ்வினிக்க
முடிக்கும் செயலினிக்க முந்தும் கருத்தினிக்க
துள்ளும் மனமினிக்க தொடர்வோம் முகமினிக்க.
எவரிது செய்யினும் அவர்வாழ வேண்டும்!
சுவராய் அமைந்தார் ஓவியம் கண்டோம்!
அழியா உறவாம் முகநூல் நட்பாம்.
வழியாய் துணையாய் வாழ்ந்திடக் காப்போம்.
தங்கள் அன்பன்
கொ.பெ.பி.அய்யா.
தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்!
எவர்முகமுந்தேடி இன்னும் அறியோம்!
காற்றில் அலையும் வலைதள உலகம்!
கூட்டி அணைத்திடக் குடும்பம் ஆனோம்!
காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணா ளெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப் போமோ எனயெழு நினைவுகள்!
தோணா தொழிந்தால் தொடருமோ அணைவுகள்!
குரவர்கள் நாமே தர்மங்கள் படைப்போம்!
மறவர்கள் நாமே மடமைகள் உடைப்போம்!
அறவர்கள் நாமே வன்மைகள் துடைப்போம்!
உறவுகள் நாமே ஊழினை அடைப்போம்!!
தெய்வம் தந்த இதயம் நமக்கு.
பெய்வம் அன்பு வளர்ந்து சிறப்பு.
உய்வம் பழகி மனிதம் தழைக்க.
செய்வம் அழகு உலகம் நிலைக்க .
தேனும் தமிழாம் தேடி முகநூலில்
காணும் மொழியாம் நாடி இகநாளில்.
பேணும் நட்பினில் கூடி அகவானில்
தோணும் அன்பினில் ஆடுவம் சுபமாகில்.
படிக்கும் தமிழினிக்க பழகும் கவியினிக்க
வடிக்கும் பொருளினிக்க வாழும் வாழ்வினிக்க
முடிக்கும் செயலினிக்க முந்தும் கருத்தினிக்க
துள்ளும் மனமினிக்க தொடர்வோம் முகமினிக்க.
எவரிது செய்யினும் அவர்வாழ வேண்டும்!
சுவராய் அமைந்தார் ஓவியம் கண்டோம்!
அழியா உறவாம் முகநூல் நட்பாம்.
வழியாய் துணையாய் வாழ்ந்திடக் காப்போம்.
தங்கள் அன்பன்
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment