Thursday, 30 April 2020

போராட்டம்.

போராட்டம் போராட்டம்,
கொரனாவோட போராட்டம்;
உலகமே போராடும்:
கொரனாவோடு போராட்டம்.

மருத்துவம் கண்ட விஞ்ஞானம்,
இருண்ட சமயசாதி அஞ்ஞானம்;
உறுத்தும் மதுவிலக்கு மெஞ்ஞானம்:
வருத்தமுறும் போராட்டம்.

சட்டாம்புள்ள நாட்டுக் கெல்லாம்,
நாட்டாமை உலகுக் கெல்லாம்;
அமெரிக்காவே உக்கி போடும்:
திமிரழிஞ்ச போராட்டம்.

இரண்டு அதிகாரப் போராட்டம்,
முரண்டு சதிவேலைக் கோராட்டம்;
தெறிக்க விடும் ஓராட்டம்
கொரனாவின் போராட்டம்.

அதிகாரம் பணம் எல்லாம்
கதி இல்லை காவலுக்கு.
மதி சொன்ன கொரனாவே
முடித்து விடு போராட்டம்

கொ.பெ.பி.அய்யா.

என்னடி பொன்மழை சுகமா?

என்னடி பொன்மழை சுகமா?
சொல்லடி எப்படி நலமா?
காலம் முடிக்காத கொரோனாவோ!
நாளும் விடியும் நம்புவோம்.

இயற்கை என்பது இறைவனே!
செயற்கை மிஞ்சாத அறிஞனே!
எதுதான் அவனன்றி ஆகுமோ!
இதுவும் கடந்து போகுமே!

காதலின் வடிவம் உலகமே!
கொரோனா இதையும் அறியுமே!
காதலைக் கொன்றும் சாதிக்குமோ!
கொரோனா என்ன போதிக்குமோ!

இயற்கை அதனை மதிப்போமே!
இறைவன் அதுவே துதிப்போமே!
தனிமை ஆயுதம் வல்லமை,
துணையாம் அதுவே வெல்லுமே!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 28 April 2020

நிறைந்து உலகம் வாழ்கவே!

கரைந்து கரைந்து மறைந்து போகும் கொரோனா.
விரைந்து விரைந்து உலகம் நிறைந்து வாழ்கவே--பொருள்
நிறைந்து வாழ்கவே!

தொடர்ந்த போரில் விழுந்த நாடுகள்
எழுந்த தில்லையா வரலாறு!
கொரோனா சரித்த பொருளா தாரமும்
விரைந்து உலகம் நிரைந்து எழுமே!

உலகம் வாழ தமிழகம் இருக்கிறது பயமேன்?
பழகும் மருந்தும் ஆய்வில் வளருது நிசம் தான்.
பிழைக்காது கொரோனாவும் ஒழிஞ்சு சாகுமே!
அலைப்பரை வேசக்கூட்டம் வாயைப் பிளக்குமே!

கொ.பெ.பி.அய்யா.

Monday, 27 April 2020

சும்மா இரு போதும்.

ஆணியே புடுங்க வேண்டாம்
ஏணி விட்டு ஓரம் போ!
ஒன்னுமே கிழிக்க வேண்டாம்
சும்மா இருந்தால் போதும்.

எதையாவது உளறினாத்தான்,
இருக்கிறேணு தெரியுமுண்ணா;
கதை சொல்லிக் கொல்லாதீர்:
விதை உளுத்தது முளைக்காது.

பெத்தாங்கலா செஞ்சாங்கலா
சத்தியமா புரியல.
மனச்சாட்சி இல்லாம சிலது
மனுசம் போல திரியிது.

அங்க பாரு இங்க பாருணு
இங்க தான வாழுற.
பாராட்டத்தான் மனம் இல்லை
பார்கவுமா எண்ண மில்லை!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 25 April 2020

அன்பின் ஏக்கம்.

குடும்பம் ஒன்னா கூடியிருக்கு,
கொரோனா செஞ்சி கூட்டியிருக்கு.
விடிஞ்சு முடிஞ்சா ஊரடங்கு:
அடைஞ்ச குருவிக பறக்குறதெங்கோ!

அப்பன் ஆத்தா ஆளொரு திசைக்கு,
தப்பிப் பறந்ததும் ஏங்குற குழந்தைக்கு;
ஆயாவே தாயான அவலம் கண்டுதான்
தாயும் தந்தையும் தந்தது கொரோனா.

தாய்ச்சீலை வாசம் தாய்மடித் தொட்டில்
தாயன்பு மொழியில் சேய்பழகும் கட்டில்
இருந்தும் குழந்தை அன்புக்கு ஏங்கும்
வருத்தம் திருத்திய கொரோனாவும் நீங்கும்.

கொ.பெ.பி.அய்யா.

கனவு!

கனவு என்பது கண்டு மறவாது
மனதில் எழுந்த நெருப்பு--அது
ஒவ்வொரு இதயம் ஒவ்வொரு விதமே
செவ்வழி துடிக்கும் இலக்கு.

தூங்கும் போதும் ஏங்கும் மனதில்
தேங்கிய மூச்சாம் கனவு--அது
ஓங்கிய வேகம் பாங்கும் நினைவில்
தாங்கிய வீச்சாம் கனவு.

ஆசையின் பாசையில் பேசும் இரகசியம்
ஓசையில் மௌனம் கனவு--அது
தேசம் விளைந்த விஞ்ஞான மெல்லாம்
யோசனை வென்ற கனவு.

முன்னேறும் மனிதன் தன்னார்வ ஏக்கம்
கொண்டதன் ஊக்கம் கனவு--அது
ஒன்றிய சிந்தனை பண்ணிய அற்புதம்
என்றும் வளர்க கனவு.

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 23 April 2020

தன்னலம்!உன்னலம்!

உன்னலம் முக்கியம் காத்திடு!
தன்னலம் சௌக்யம் ஆகிடு.
சுயநலம் நீயும் பார்த்துக்கோ!
பொதுநலம் வாழும் கேட்டுக்கோ.

பாவம் சும்மா ஓயாமல் பேசி,
ஆவது என்ன நீ யோசி!
வீட்டுள் சும்மா அடங்கிக் கிடந்தாலே
நாட்டுள் நடக்கும் எல்லாம் நலமே.

சாதி மதங்கள் பேதங்கள் பாராமல்,
சகட்டு மேனிக்கு கொரோனா பேசாமல்;
ஊதீ அழிப்பதை ஒழிக்கச் சேராமல்
வீதீயில் வீணே பேச்சென்ன கூசாமல்!

சும்மா நீவீர் இருந்தாலே போதும்
பம்மாத்து எதற்கு பயனென்ன ஆகும்!
கொரோ னாவை கொன்றொழிப்போம்
உறுதி கொள்வோம் அரசிணைவோம்.

கொ.பெ.பி.அய்யா.

அரசியலா முக்கியம்!

அரசியலா முக்கியம்!
அப்பாவி கேட்கிறான்
என்ன கொடுமை இது!
சொன்னதும் கொரோனாவோ!

அறிந்தவரை ஊடகங்கள்
வருமானம் குவிக்கின்றன.
அரசியல் நாடகங்களும்
அரங்கேரறிக் கழிகின்றன.

இருப்பதை காட்டிக்கொள்ள
அரசியலும் அவசியந்தான்.
துணைநின்று காட்டுவதும்
இணையென்ற தந்திரந்தான்.

இடுவாரைப் பழிப்பதும்,
பெறுவாரை இழிவதும்;
தன்னிலை வெளிப்பாடு,
பின்னிலை நிலைப்பாடு.

பேரிடர் காலம் சீரிடவா!
போர்முனைக் கோலம் போரிடவா!
ஒன்று படுவோம் ஓரணி நிற்போம்.
வென்று விடுவோம் கொரனா அற்பம்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 21 April 2020

மனித நேயம் எங்கே?

நன்றி கெட்ட உலகமடா,
பன்றிக் கூட்டம் பழக்கமடா
மனிதம் இல்லா மிருகத்துக்கு;
மனிதன்  என்ற பெயர் எதற்கு?

தொற்றும் என்று அறிந்துதானே,
பற்றி யுன்னை தொட்டுத்தானே;
பிணி யுனக்கு தீர்த்துத்தானே:
பிணம் ஆனார் உன்னால்தானே.

பாது காப்பு ஆராய்ந்தும்,
பக்குவமாய் பாடம் செய்தும்;
பையுரையில்.மூடித் தானே;
மையவாடி கோண்டு வந்தார்.

மருத்துவரை தெய்வம் என்றும்,
மதிக்க வில்லை என்றாலும்;
இறுதி விடை பெறுவோர்கு
மறுக்கலாமா புதைக்க இடம்?

தன்னுயிரைப் பணயம் வைத்து;
மன்னுயிர் மீட்ட போராளிக்கு:
மண்ணும் சொந்தம் இல்லையோடா!
என்ன சொல்ல வெட்கக் கேடு!

உனக்கும் குழி ஆறடிதான்,
கணக்கு ஆழம் நாலடிதான்;
புலுப்பூச்சி தின்ற பின்னே:
புதைத்தயிடம் சொந்த மென்ன!

கொ.பெ.பி.அய்யா.

ஆகாயம் சுத்தமாச்சு!

ஆகாய வானம் சுத்த மாச்சு,
தேகாயம் பூமி குளிர்ந்தும் போச்சு.
கங்கை நீரும் குடிக்க லாச்சு
காற்று மாசும் நீங்கி யாச்சு--இது
கொரோனா செஞ்ச புண்ணியந்தான்:
புரிஞ்சா உலகம் சொர்கந்தான்.

போராட்டம் கூட்டம் மறந்திரிச்சு,
ஊராட்டம் கூச்சல் குறஞ்சிரிச்சி,
பாதை மேடைகள் கிடைச்சிரிச்சு ,
சாலை நெருக்கடி ஓடுங்கிரிச்சு--இது
கொரனா செஞ்ச புண்ணியந்தான்:
புரிஞ்சா உலகம் சொர்கந்தான்.

காவல் துறைகள் காக்கும் பேச்சு,
ஏவல் துறைகள் இயங்கும் வீச்சு,
கோவில் ஆயங்கள் அமைதி மூச்சு,
நாவல்போன்ற நடைமுறை காட்சி--இது
கொரனா செஞ்ச புண்ணியந்தான்
புரிஞ்சா உலகம் சொர்கந்தான்.

கொல்லத்தான் வந்தாயோ கொரனாவே!
நல்லதும் செய்தாயே வரலாறே!
வில்லன் போல்வந்த கொரனாவே!
உள்ளதை உணர்ந்திடச் செய்தாயே!
வாழ்வியல் சொன்ன கொரனாவே--நீ
போய்விடு புரிந்தோம் கொரனாவே!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 19 April 2020

ஏய் கொரோனா!

ஏய் கொரோனா --நீ
ஏன் வந்தாயோ!
வருந்தாத திருந்தாத பேர்களையே
வருத்தவே வந்தாயோ--சரியே
திருத்தவும் வந்தாயோ!

பிறந்தயிடம் கண்டுசெல்ல
பறந்துவந்த சொந்தமோடு
விருந்தாளி போலவே
கொரோனாவே வந்தாயோ!

பணந்தேடிப் பறந்தோரெல்லாம்
இனங்கூட வந்தாயோ!
பொருள்தேடி நிறைத்தோரெல்லாம்
கர்ணனாக்க வந்தாயோ!

மறந்துபோன ஒழுக்கங்கள்
மலர்ந்திட வந்தாயோ!
கலைந்திட்ட கலாச்சரங்கள்
விளங்கிட வந்தாயோ!

அறுந்தலைந்த விடலைகளை
அடக்கிட வந்தாயோ!
கேளிக்கை விரயங்களை
காலிசெய்ய வந்தாயோ!

ஆயாமடிக் குழந்தை தந்தை
தாயாக வந்தாயோ!
ஓய்வறியா பாட்டாளிமண்
சாய்வணைய வந்தாயோ!

குடிமறந்து குடிமகன்கள்
குடிதழைக்க வந்தாயோ!
அவசிய மற்றதெல்லாம்
அற்றதாக்க வந்தாயோ!

சீர்திருத்தி முடித்துவிட்டாய்.
நேர்பொருத்தி வடித்துவிட்டாய்.
விருந்தாளியாய் வந்த நீ
கொரோனாவே விடைபெறுக!

கொ.பெ.பி. அய்யா.

Wednesday, 15 April 2020

கொரோனாகூட பரவாயில்ல.......

கொரோனாகூட பரவாயில்ல ஒளிஞ்சிக்கலாமே--ஆனாசில
அரக்கர்களின் கொடுமைதான
பொறுக்க முடியல.

தொலைக்காட்சி பெட்டிகள
விலக்கி வையுங்க--விவாத
அலப்பரைக தொல்லைக்கு
முழுக்குப் போடுங்க.
இரத்த அழுத்தம் ஏத்திவிட்டு
சாகடிக்காங்க.
கொரோனாவிட மோசமான பாவி இவங்க.

ஏபார நோக்கந்தான வேற என்னவோ!
விவாதக் கூச்சலால ஆவது என்னவோ!
வெட்டிப்பேச்சுப் பேசிக்கட்டும் பொட்டணந்தானோ!
ஒட்டாது ஒட்டாது ஓழிஞ்சு போகட்டும்--பேச
விட்டால் நாடும் பாவம் அழிஞ்சு போகுமே!

அவசரச் சட்டம்போட்டு அடக்கி வச்சாத்தான்:
அவசியம் இல்லாதெல்லாம் முடங்கிக் கிடக்கும்.
என்னென்னமோ பேசிப்பேசி நாசமானதே--கொஞ்சம்
ஜனநயகம் ஒத்தி வச்சா மனிதம் வாழுமே!

கொ.பெ.பி.அய்யா.

உள்ளத்தில் நல்ல உள்ளம்.

உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்கா தென்பது
நல்லவர் பதித்தடா-நம்
மருத்துவத் தெய்வங்களே-நம்
மருத்துவத் தெய்வங்களே.

தன்னுயிர் போற்றாமல்
மன்னுயிர் காக்கவென்றே
மண்ணுலகில் வாழ்வோரடா-நம்
நெஞ்சத்தில் கொள்வோமடா-அவர்
மருத்துவத் தெய்வங்களே.

தெய்வங்கள் யார் கண்டார்
தரிசனம் எவர் கொண்டார்
உயிர் தந்த வள்ளல்களே-நம்
கண்கண்ட தெய்வங்களே-அவர்
மருத்துவத் தெய்வங்களே.

எவன் கண்ட கொரனாவோ!
இவர் வென்ற மகத்துவமோ!
எமன் நின்றும் மருண்டானோ!
என்றென்றும் நலம்வாழ்கவே-வாழ்க
மருத்துவத் தெய்வங்களே.

கொ.பெ.பி.அய்யா.

மனுசனை மனுசன்......

மனுசன மனுசன் ஒழிக்கிற நாளும் -ஒரு
தினுசாய் வந்ததும் கலி காலம்-அவன்
கொரோ னாவாக தானே மாறும்-இந்த
மருமம் புரிஞ்சா தீரும்-இந்த
உலகப் போரும் ஓயும்-மூன்றம்
உலகப் போரும் ஆறும்.

ஆயுதம் வேண்டாம் அணுகுண்டும் வேண்டாம்;
சாயும் மனிதக் கூட்டம்.
மேயும் கொரோனா மெல்லக் கொல்லும்
தீயும் உலக ஆட்டம்.
உடலால் விலகு உள்ளத்தால் பழகு
உயிர்கள் தாங்கும் உலகு.

அரசு சொல்லும் பேச்சைக் கேளு
வருசங்கள் பலவும் வாழலாம்.
புருசன் மனைவி புள்ள குட்டிகள்
உறவு களோடும் கூடலாம்.
உலகம் உன்னால் நிலவும் தன்னால்
விலகும் அழிவும் இந்நாள்.

வாதம் பேதம் பேட்டிகள் எல்லாம்
வாழ உதவா பேச்சுக்கள்.
சாதி மதங்கள் சச்சரவு களெல்லாம்
சாதிக்க ஆகா கூச்சல்கள்.
வேதங்கள் எல்லாம் பேதங் களையத்தான்
ஓதும் போதனை சத்தியங்கள்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 12 April 2020

என்னதான் நடக்குது!

என்னடா இது அரசியல்
ஒன்னுமே நிசமா புரியல!
என்னதான் நடக்குது நாட்டுல-இது
பண்ணுற நேரமா அரசியல்?

சோதனைக் காலம் இதுதா னோ!
வேதனைக் கோலமும் விலகாதோ!
ஒற்றுமை என்பது இருந்தாலே,
கட்டுக்குள் அடங்கும் கொரோனாவே.

காட்டுத் தீயைப் போலவே;
நாடே பற்றி எரியிதே;
வாதம் பேதம் வீணாலே;
ஊதித் தீயை வீசாதே.

தேர்தல் வருமா புரியல.
யார்தான் பிழைப்பார் தெரியல.
பிழைத்தால் பார்க்கலாம் தேர்தலை
இணனந்தால் வெல்லலாம் கொரோனாவை.

குடும்பங்கள் வளர்க்க கட்சிகளா?
அடிமைகள் சிலர்க்கு கொள்கைகளா?
இதுதான் இந்திய அரசியலா?
அதுதான் கேள்வி கொரோனாவே!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 11 April 2020

இதுவும் கடந்து போகும்!

கொரோனொபோல் கொடுமைகள்
எத்தனையோ கடந்ததுபோல்
இதுவுந்தான் கடந்து போகும்.
கொரோனாவும் மறந்து போகும்-இதுவும்
என்மேல்  சத்தியமே.

பழகும்வரை குதிரைகூட,
பகையாளி போலத்தான்.
பழகிவிட்டால் நோயுங்கூட
பழக்கப்பட்ட நாயுதான்-விஞ்ஞானம்
துலக்கிடும் மருந்துந்தான்.

தட்டம்மை போலியோவும்
பட்டொழிந்து போனதுவும்
மருத்துவத்தின் சாதனைபோல்
கொரோனாவும் ஒழிந்ததென-நாளை
சரித்திரம் எழுதிவைக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 10 April 2020

பரந்தாமன் பழனிச்சாமி.

எங்கிருந்தோ அபயக்குரல்
எப்போது கேட்கிறதோ!
அங்கிருந்தே அப்போதே-தேடி
அடுத்தகணம் உதவி வரும்.

மக்கள் உயிர் முக்கியம்
மற்ற தெல்லாம்  அப்புறம்.
திக்கெல்லாம் பழனிச்சாமி-அம்மா
சக்தியாய்  காக்குஞ்சாமி.

பாஞ்சாலி மானங்காத்த
பரந்தாமன் அவரேபோல்.
தமிழினம் உயிர்காத்த-தமிழ்த்
தலைமகன் எடப்பாடியார்
வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 9 April 2020

ஊருக்குள் சுற்றாதே!

ஊருக்குள் சுற்றாதே;
யாருக்குள்ளும் தொற்றாதே;
ஆளுக்குள் ஒளிந்திருக்கும்:
ஆரறிவார் கொரோனாவை!

உறவாடும் உறவுக்கெல்லாம்;
பரவுமே கொரோனாவும்.
உன்னோடு போகாதே!
இந்நாடு தாங்காதே!

உன்னலம் காக்கத்தானே;
தன்னலம் பார்க்காமலே:
கொரோனாவோடு போராடும்;
மருத்துவர்கள் தெய்வமன்றோ!

நான்கு சுவர் வீட்டுகுள்ளே;
நீயிருந்தால் நாட்டுக்குள்ளே;
தீங்கு செய்யும் கொரோனாவும்:
தீண்டாதே பாரெல்லாம்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 5 April 2020

விளக்கேற்று.

விளக்கேற்று விளக்கேற்று
குலமகளே விளக்கேற்று.
மனிதரெல்லாம் மனிதரான
புனிதமான இந்நாளில்
விளக்கேற்று விளக்கேற்று.
குலமகளே விளக்கேற்று.

வனந்திரியும் விலங்கினங்கள்
இனம்புரியும் அறிவினங்கள்
கற்றுத்தந்த பாடங்களை
கற்றோமென இந்நாளில்
விளக்கேற்று விளக்கேற்று
குலமகளே விளக்கேற்று.

மனந்தொலைத்து அலைந்தவரும்
மனிதருள் கலந்தவரும்
உணர்ந்துமே மனிதங்காக்க
இணைந்தாரென இந்நாளில்
விளக்கேறுறு விளக்கேற்று.
குலமகளே விளக்கேற்று.

மக்களேபோலுரு கொரோனாவை
எக்காலம் எவர்கண்டார்?
தக்கதே தனித்திருப்போம்
சிக்காது இந்நாளில்
விளக்கேற்று விளக்கேற்று
குலமகளே விளக்கேற்று.

கொ.பெ.பி.அய்யா.

சம்மதம் சந்தோசம்.

ஒன்பதில் ஒன்பது
என்பது அடையாளாம்.
இந்நாள் வரலாறாம்.

ஒன்பது மணிக்கு
ஒன்பது நிமிடம்
கண்டது அதிர்வானது.

ஒன்பதுக்குப் பின்னாலே
உன்னிழல் தன்னாலே
ஒழிஞ்சது கண்ணிலே.

மனிதன்நீ தெளிஞ்சுக்கோ!
தனித்துநீ ஒளிஞ்சுக்கோ!
புரிஞ்சதா தத்துவம்!

உன்னலம் நினைந்தாரை
தன்னலம் மறந்தாரை
எண்ணலாம் இந்நாளை.

கொரோனாவைக் கொல்லத்தான்
ஒருங்கிணைந்தோம் சொல்லத்தான்.
இருளிது சாட்சியம்.

மக்களின் ஆதரவு
திக்கெல்லாம் உறுதியாய்
சக்தியாய் ஒளிர்ந்தது.

நம்மரசு நமக்காக
எம்முயற்சி எடுத்தாலும்
சம்மதம் சந்தோசம்.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 3 April 2020

ஆடு புலி ஆட்டம்.

கொரோ னாவின் அட்டகாசம்,
புறட்டிப் போட்ட பொருளாதாரம்
புரியாமல் திரிகிறோம்
தெரியாமல் சிரிக்கிறோம்-வாழும்
மக்கள் உயிர் முக்கியம்
மற்ற தெல்லாம் அப்புறம்.

ஓடலாம் புலியைக் கண்டால்
உயிர் காக்கத் தப்பிக்கலாம்.
ஆடெல்லாம் புலி யானால்
அடையாளம் எப்படி-கொல்லும்
கொரோ னாவே நீயானால்
குடும்பத்தின் கதியென்ன!

ஆடு புலி ஆட்டத்தில்
நாடு படும் ஆபத்தில்
மனிதன்நீ மனித னென்றால்
தனித்திரு வீட்டுக்குள்-இன்று
உன் னுயிரைக் காக்கவே
இன்னாடே முடங்கிப் போச்சு.

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 2 April 2020

வெண்ணை திரளும் நேரத்தில்.

வெண்ணை திரளும் நேரத்தில்
மண்தாலி உடைந்தது போல்
கண்கள் திறக்கும் தருணத்தில்
வெண்சுடர் அணைந்தது போல்
பாரதப் பொருளாதரம்
சீராகும் காலத்தில்
கொரோனாக் கோரத்தால்
சரிந்ததோ! அய்யகோ!

பேரிடர் பெருந் துயரம்
சீராக ஆகுந் தூரம்
கூறத்தான் கூடுமோ!
காலந்தான் கைதூக்கும்.
ஜப்பானின் நோக்கமும்
சாதித்த ஊக்கமும்
ஒப்புவோம் நம்புவோம்
ஒருங்கிணைவோம் தப்புவோம்.

சாதிமதப் பேதமெல்லாம்
சாதிக்க உதவாது.
மோதிக் கொள்ளும் வாதமெல்லாம்
நீதி செய்யப் போதாது.
சிலந்தி கட்டும் வீட்டைப்போல்
சீர்செய்வோம் நாட்டை மேல்
வெறிகொண்டு வெற்றி கொள்வோம்
நெறிகண்டு பற்றிச் செல்வோம்.

அரசியல் செய்யுந் தீரம்
சரியல்ல இது நேரம்.
உரிமைநம் உயிர் நாடு
பெருமைகொள் செயல் நாடு.
மனிதவளம் நமது பலம்
இனியென்ன வேறு களம்.
யோசிக்க நேரம் இல்லை.
யாசிக்கத் தேவை இல்லை.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 1 April 2020

மலர்ந்தும் மலராத

வளர்ந்தும் வளராத ஆலமரம் போலே
வளருரும் இந்தியாவே-வளம்
கொண்டும் திறமாக வாழும வல்லரசு
ஆகும் நாளானதே-இந்த
நிலையில் தலை தூக்கி நிமிரும்
வேளையில்
கொரோனா தடையானதோ!

வெள்ளை அதிகாரம் கொள்ளை கொண்டதும்
மெல்லச் சீரானதே-வளர்ந்து
மெல்லச் சீரானதே.
மூல ஆதாரம் தேறும் விவசாயம்
வாழும் வகையானதே.
மூல ஆதாரம் தேறும் விவசாயம்
வாழும் வகையானதே.

ஆறு நதியென்று இணையும் காலமும்
கைகூடும் நிசமே.
பாயும் நீர் கொண்டு காயும் நிலம் மேவுமே-வளம்
கொழிக்கும் தீர்வானதே.
பாயும் நீர் கொண்டு காயும் நிலம் மேவும்-வளம்
கொழிக்கும் தீர்வாகுமே

தொழில்கள் பெரூக்கி பொருளின் ஆதாரம்
நிலைக்கும் நிலைக்கே
உள்நாட்டு உற்பத்திகள் எல்லாம் உபரியாய்-வெளி
ஏற்றுமதி இயல்பாகுமே
உள்நாட்டு உற்பத்திகள் எல்லாம் உபரியாய்-வெளி
ஏற்றுமதி இயல்பாகுமே.

மலர்ந்தும் மலராத மலமரும் மலர்போலே
வளருரும் இந்தியாவே-வளம்
கொண்டும் திறமாக வாழும வல்லரசு
ஆகும் நாளானதே-இந்த
நிலையில் தலை தூக்கி நிமிரும்
வேளையில்
கொரோனா தடையானதோ!

கொ.பெ.பி அய்யா.