பொறுமையுடன்
வாழ்க
பிழைக்கத் தானே உலகம்.
உழைக்கத் தானே உடலும்.
கவலைக் கென்ன
தேவை.
கவனம் பண்ணு வாழ்வை.!
வரவினை நினைவிலிடு.
செலவினைக் கணக்கிலிடு.
வீணான ஆடம்பரம்.
தானாளும் சங்கடம்.
தானாளும் சங்கடம்.
திட்டமாய்
அடியெடு.
எட்டுவதைக்
குறியிடு
கிடைப்பதில் நிறைந்திடு.
அடைவுக்குள் அளவிடு.
நிலையினை
உணர்ந்திடு
விலையினை
தேர்ந்திடு
கடன்படாக்
கரந்தொடு.
உடன்படு வரம்பொடு.
பெருமைக்கு
மாவிடிப்பு.
வறுமைக்குள் மூழ்கடிப்பு.
பொறுமையுடன் வாழ்வது.
அருமையது தேர்வது.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment