Tuesday, 27 June 2017

சாதனை.

சாதனை.

அறிவால் செயலால் உலகம் பயன்பெற சாதிப்பது சாதனை

சாதனைதான் புகழ். புகழே பேர் சொல்லும்.


இறப்புக்குப்பின்னும் வாழ என்ன நீ சாதித்தாய்?

இறந்தபின் உடலோடு பேரும் அழிகிறது.

இருக்கும்வரை  அழைக்கத்தான் பேரும் உடலும்.

புகழுடையார்க்கு மரணமில்லை

புகழுடையார் மட்டுமே பேருடன் வாழ்கின்றனர்.

உயிர் இருந்தால் பணக்காரன்.
உயிரற்றால் பிணந்தானே.

பிணத்துக்கு
பேருமல்ல உறவுமல்ல.

உயிருக்குத்தான் உறவும் பேரும்
உடலுக்கல்ல.

உயிர் பிரியும்போதே உலகமும் உன்னை மறந்து போகும்

உயிருள்ள  வரைதான் உறவும் உரிமையும்

மரணம் வரைதான் வசதியும் வாழ்க்கையும்

மரணம் வரைதான் பகையும் வெறுப்பும்

மரணம் ஒரு தண்டனையல்ல விடுதலை.

பாவியின் மரணத்தைக்கூட நியாயப்படுத்தல் பாவம்.

கொ.பெ.பி.அய்யா

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

தலைவரை மறந்தவர்கள்
தலையில்லா முண்டங்கள்.
உப்பிட்டவரை எண்ணாதார்
உப்பில்லா தெண்டங்கள்.

அடிப்படையை மதியாதார்
அடிமரத்தை அறுப்பவர்.
மூலவரைத் துதியாதார்
மூலசக்தி புரியாதார்.

இவர் பெயர் சொல்லாரார்?
இவர் படம் கொள்ளாரார்?
இவர் அன்றி அரசியலா?
இவர் பகவான் எம்ஜிஆர்.


கொ.பெ.பி.அய்யா.

என்ன சொல்ல போகிறான்?

என்ன சொல்ல போகிறான்?

என்ன சொல்ல போகிறான்-அவன்
என்ன சொல்ல போகிறான்!
நெஞ்சுக்குத் தான் தெரியும் -அவன்
செஞ்ச பொல்லா பாவம்-தனக்கு  
வந்த இந்த சாபம்.

பாழடைஞ்ச வீடு- அது
பங்களாணு பேரு.
தேளடைஞ்ச கூடு -அது
திசை இல்லா ஊரு.

அடைஞ்சாலும் பொழுது-இன்னும்
விடியலயே அழுது.
ஒத்தையானா சத்தம்-கும்மி
சுத்தி சுத்தி அடிக்கிறது.

அய்யோ சாமி போதும் -இது
ஆருக்குமே வேண்டாம்.
தீயா வாட்டும் தேகம்- எப்போ
பேயா கூட்டிப் போகும்.

பேய்கள் வாழும் பூமி-இங்கு
நாய்கள் ஓலம் சாமி.
மறுபிறவி வேண்டாம்-இந்த
ஒறுபிறவி போதும்.

கவிஞர்.கொ.பெ.பி அய்யா. 

Friday, 27 January 2017

விடியட்டும்.

விடியட்டும் விலகச்சொல்லு!

மக்களுக்கே உழைத்திட்ட
மாமனிதம் போற்றிட்ட
மறுவில்லா அரசியல்--இன்று
மறைந்தவொரு விரசியல்.

காந்தியர் காமராசர்
ஏந்திய தேசியம்.
குடும்பவியம் ஆனதோ-இன்று
தடமாறிப் போனதோ!

குடும்பங்களே கட்சிகள்.
இடும்புகளே இயக்கங்கள்.
உடும்புப்பிடி நாற்காலி-இன்று
படும்பாடு போர்க்கோலம்.

விடியலைக் காட்டியவர்
விருதுபட்டிக் கோட்டியவர்.
பொடியனிடம் தோற்றபாவம்-இன்று
எறுமைகள் மேயும்சாபம்.

ஏமாறுந் தமிழனோ
இழக்கின்றான் சுதந்திரம்..
சோமாறும் எவனெவனோ-இன்று
கொழுக்கின்றான் தினந்தினம்.

அடிமைகளாய்த் தொண்டன்கள்
அடியாளாய்த் தண்டங்கள்.
கொடியேந்தும் கைமரங்கள்-இன்று
கொடிக்கென்ன கொள்கைகள்!

அடிமைத்தனம் ஒழித்திடத்தான்
உரிமைக்கணம் விழித்தது.
வழிவழித் தலைமுறைக்குள்-இன்று
ஒளித்தடிமை இலைமறைக்குள்.

விடியலைத் திருடத்தான்
விட்டிலைச் செருகுகிறான்!
விடியட்டும் விலகச்சொல்-இன்று
முடியட்டும் கழுவித்தள்!

வெக்கங்கெட்ட பயணங்கள்
நக்கி வாழும் நயனங்கள்.
மக்கள் பாவம் அப்பாவிகள்-இன்று
சிக்கி மீட்பு எப்போ!எப்போ!

மாற்றமென்றால் என்னய்யா?
மாற்றமொன்று சொல்லய்யா!
நாட்டாத புதியவன்-இன்று
நாட்டுவது தானய்யா!

விடுதலை விளைத்திட
விதையான உயிர்களே
விளைந்துதான் எழுவீரோ-இன்று
விடியலாய் விளைவீரோ!

கொ.பெ.பி.அய்யா..

Wednesday, 18 January 2017

நகரமா நரகமா?

வீடுகளா கூடுகளா!

வீடுகளா கூடுகளா விளங்கவில்லையே!
வாழுவதும் மனிதர்களா துலங்கவில்லையே!
விடியலுக்குக் காத்திருக்கும் பறவைக் கூட்டமாய்
வெளிச்சமென நம்பித்தான் பறந்து தேடுதோ!

நரகமா நகரமா புரியவில்லையே!
அவலந்தான் வாழ்க்கையா தெரியவில்லையே!
நாற்றமே காற்றாகி நகரும் நெருக்கமாய் 
நாதியற்ற துயரந்தான் நாகரிகமா! 

அவசரமே வாழ்க்கையா தெரியவில்லையே!
அடையுமிடம் எங்கேயோ
தோணவில்லையே!
பழகிக்கொள்ள நேரமில்லா
உறவுப் பஞ்சமாய்
வாழும் இந்த வாழ்க்கைதான்
மனித நேயமா!

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.