Wednesday, 25 December 2013

பீச்சுக்கு போகலாம்.

பீச்சுக்குப் போலான்டி!

என்னடிப் பொண்ணடி!
எங்கடிப் போறடி?
பின்னடிக் குந்தடி!
பீச்சுக்குப் போலான்டி!.

கண்ணடிப் படுண்டி!
உன்னடி நோவுன்டி!
இன்னாடி யோசனை!
இட்டுனு போறேன்டி.!.

முன்னாடி இருக்கடி!
முந்தரிக் கொத்தடி!
தின்னாடித் தீருன்டி!
தேகம் குளிருன்டி.!

அன்னான்ட மாம்பழம்!
ஆசையா இருக்குடி.!
உன்னான்ட ஏங்குதே!
ஊறுதே நீரடி.!

உன்னோட மடியடி!
என்னோட சுகமடி.!
கன்னத்தில் பேசலாம்!
காத்திருக்குக் காத்தடி!.

புருவந்தான் ஏனடி!
கருவந்தான் வீணடி!.
இருப்பதும் நானடி!
இதயமோ நீனடி.!

வளையாடுங் கையடி!
விளையாடச் செய்யடி!.
மழையாகிப் பெய்யடி!
தொலைகிறேன் மெய்யடி!

பேசாதப் பேச்சடி!!
பிசகென்ன ஆச்சடி!
அடைக்குதே மூச்சடி!
ஆறலாம் பீச்சடி!





சிவக்குறக் கண்ணடி!.
செவ்வாள மீனடி!


உதட்டிலே வண்டடி!
உண்ணுதே தேனடி!

சொன்னாடிப் புரியேன்டி!
கண்ணாடிப் பாரேன்டி.!
அண்ணந்தான் வாரான்டி!
நின்னாப் பேஜார் ஆகுன்டி.!

பண்ணாட மாமன்டி!
பாவியவன் பாப்பான்டி!
பின்னாடிக் குந்தேன்டி!
பீச்சுக்குப் போலான்டி!

கொ.பெ.பி.அய்யா.

 



No comments:

Post a Comment