apps ஆப்புகள்
உலகம் கையிலே விவரம் பையிலே
உலவும் appsகள் உளவும் செயலிலே
நிலவும் வன்மைகள் நிசத்தின் பதிவுகள்
களவும் கையுமாய் மாட்டும் விதத்திலே.
சென்னையில வழிப்பறி
பெண்ணிடம் பகல் கொள்ளை
தட்டிப்பறிக்கிறான் தாலியை
கெட்டிக்காரி பெண்ணொருத்தி
கைபேசியில் பதிவு செய்கிறாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில்
வண்ணமாய்க் காட்சிகள்
பற்றிய தீயாக
பரவிட உலகமெலாம்
சுற்றி வளைத்தது
நற்றமிழ் காவல்துறை.
பற்றுவோம் இவ்வழி
பாவியரை படம் பிடிக்க.
ஊழியம் செய்வதற்கு
ஊதியம் பெறுபவர்க்கு
ஊழலாம் நோய் அதற்கு
ஊசிபோட apps இருக்கு.
சாலைகளில் மாதக்கடைசிகள்
காலை மாலை வேலைகள்
சோதனைச் சுங்கங்கள்
சோதிப்பதோ சட்டைப்பைகள்.
ஒருநூறில் உரிமங்கள்
இருநூறில் இன்சூரன்ஸ்கள்.
மாடியில் மறைந்திருக்கும் appsகள்
ஓடிவரும் உனக்கான ஆப்புகள்
பதிவாக்கிப் பரப்புதெங்கும் மாப்புகள்.
விதிதூக்கி விரட்டுதெங்கும் காப்புகள்
சட்டைப்பை ஒளித்திருக்கும் சாட்டைகள்--ஊழல்
கெட்டப்பை கிழித்தெடுக்கும் வேட்டைகள்
வாட்சப் வைபர் கைப் appsகள்
கேச்சப் சைபர் வைப் ஆப்புகள்.
அங்கங்கு அலுவலக மேசைகள்
எங்கும் நிறைந்ததாய் ஊழல்கள்.
சங்கம் ஊதட்டும் appsகள்
மங்கி ஒழியட்டும் கையூட்டுகள்.
இளைஞர் கைகளில் appsகள்-ஊழல்
களையக் கிளிக்குங்கள் காட்சிகள்.
பகிர்ந்து பரப்புங்கள் உண்மைகள்
அகிலம் நிரப்பட்டும் நன்மைகள்.
ஒழிக ஒழிக என்றால் ஒழியாது--இளைஞர்
விழித்தாலொழிய விடியாது.
தொழில்தன் நுட்பம் துணையாலே
ஒழிப்போம் ஊழல் செயலாலே.
கொ.பெ.பி.அய்யா.
உலகம் கையிலே விவரம் பையிலே
உலவும் appsகள் உளவும் செயலிலே
நிலவும் வன்மைகள் நிசத்தின் பதிவுகள்
களவும் கையுமாய் மாட்டும் விதத்திலே.
சென்னையில வழிப்பறி
பெண்ணிடம் பகல் கொள்ளை
தட்டிப்பறிக்கிறான் தாலியை
கெட்டிக்காரி பெண்ணொருத்தி
கைபேசியில் பதிவு செய்கிறாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில்
வண்ணமாய்க் காட்சிகள்
பற்றிய தீயாக
பரவிட உலகமெலாம்
சுற்றி வளைத்தது
நற்றமிழ் காவல்துறை.
பற்றுவோம் இவ்வழி
பாவியரை படம் பிடிக்க.
ஊழியம் செய்வதற்கு
ஊதியம் பெறுபவர்க்கு
ஊழலாம் நோய் அதற்கு
ஊசிபோட apps இருக்கு.
சாலைகளில் மாதக்கடைசிகள்
காலை மாலை வேலைகள்
சோதனைச் சுங்கங்கள்
சோதிப்பதோ சட்டைப்பைகள்.
ஒருநூறில் உரிமங்கள்
இருநூறில் இன்சூரன்ஸ்கள்.
மாடியில் மறைந்திருக்கும் appsகள்
ஓடிவரும் உனக்கான ஆப்புகள்
பதிவாக்கிப் பரப்புதெங்கும் மாப்புகள்.
விதிதூக்கி விரட்டுதெங்கும் காப்புகள்
சட்டைப்பை ஒளித்திருக்கும் சாட்டைகள்--ஊழல்
கெட்டப்பை கிழித்தெடுக்கும் வேட்டைகள்
வாட்சப் வைபர் கைப் appsகள்
கேச்சப் சைபர் வைப் ஆப்புகள்.
அங்கங்கு அலுவலக மேசைகள்
எங்கும் நிறைந்ததாய் ஊழல்கள்.
சங்கம் ஊதட்டும் appsகள்
மங்கி ஒழியட்டும் கையூட்டுகள்.
இளைஞர் கைகளில் appsகள்-ஊழல்
களையக் கிளிக்குங்கள் காட்சிகள்.
பகிர்ந்து பரப்புங்கள் உண்மைகள்
அகிலம் நிரப்பட்டும் நன்மைகள்.
ஒழிக ஒழிக என்றால் ஒழியாது--இளைஞர்
விழித்தாலொழிய விடியாது.
தொழில்தன் நுட்பம் துணையாலே
ஒழிப்போம் ஊழல் செயலாலே.
கொ.பெ.பி.அய்யா.