Wednesday, 25 December 2013

அடையாளம்.

அடையாளம்

உண்ணவோ! உறங்கவோ!
ஊர்க்கதை அரட்டவோ!
தண்டமோ!தறுதலையோ!
தேறாத தெருவலையோ!
ஈன்றாரும் இழிபடவோ!
ஈரமில்லா பிறப்பெதற்கோ!

உயிர்வாழ  உண்டடங்கி.
உணர்வடங்கப் பெண்டுறங்கி.
பயனின்றி உலகுக்கு-
பலனின்றி பிறவிக்கு-
வந்துபோவதும் தெரியாதென்றால்
வாழ்ந்ததும் திருட்டுவாழ்க்கையோ!

உயிர்ப்பதும் உழைப்புக்கு.
உழைப்பதும் உயர்வுகு.
கனவுக்குக் கண்ணயர்வு.
கனியத்தான் கண்டதற்கு.
பிறந்ததொரு கடமைக்கு
புரிந்தெழுவாய் பொறுப்புக்கு.  
                                
கர்த்தருக்குச் சிலுவைபோல்
காசிமிற்கு பிறைமதி போல்
காந்திக்கு இராட்டைபோல்
கடன் முடித்தார் அடையாளம்


காலத்தோடு பதிந்திருக்கும்.

ஞாலத்தை வழிநடத்தும்.

வந்ததும் வாழ்ந்ததும்
தந்தும்தன் வாழ்வும்.
வரலாறாகி வையமெங்கும்
வாழ்வதும் தத்துவம்.
அவரவர் கடமை
ஆண்டவன் சித்தம்.

சந்ததிக்கு விடைகூறும்
சாட்சிகூறும் அடையாளம்.
ஆக்கமுறப் படைப்பதெல்லாம்
அத்தனையும் அடையாளம். 
கடமை முடித்தாரே!

பிறவியும் அறுப்பாரே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment