தொழுவது கடனே!
படைத்தவன் ஒருவன் படைப்பெலாம் அவனே!
உடையவன் திருவன் உரியவன் அவனே!
தானே எதுவது தோணுவது பூவுலகில்
பேணாது பொதுவதன் பிழைப்பும் அவனே!
புறந்தும் கடந்தானை புவியெங்கு
தேடுவோம்!
நிறைந்தும் கடந்தானை நெறியங்கு
கூடுவோம்.
படர்ந்தும் கருணை பகிர்ந்தும் பருகுவோம்.
தொடர்ந்தும் கடனை
தொழுதும் உருகுவோம்.
கடந்தும் கடந்தவர்
கடமை கிடந்தவர்.
நடந்தும் நடந்தவர் நன்மை தொடர்ந்தவர்
அறிந்தும் அறவாரின் அருமைகள்
பாடுவோம்.
புரிந்தும் துறந்தாரின் தெய்வநிலை தேடுவோம்
மண்ணுலகு உய்யவே தன்னிலை
நின்றவர்!
எண்ணிய எய்யவே திண்ணிலை
வென்றவர்.
புண்ணிய மாந்தரே பின்னவர்க்கு கண்ணவர்.
நண்ணிய நலமெலாம் இன்னவர்க்கு அன்னவர்.
அம்மையப்பன் காணுங்கண் ஆண்டவ
சாட்சி.
செம்மையாம் சேவையும் செய்வதே மாட்சி.
நன்றிகடன் தீராதார் நாயினுங் கேவலம்.
பன்றியுடன் ஒப்பிடவும் பாவியவர் நீசராம்.
தூய்மைக்கு ஏசுதான் தோன்றுபுகழ் நேசராம்.
வாய்மைக்கு நபிகள்தான் வள்ளலவர் வாசராம்.
தாய்மைக்கு சங்கராம் தேசமறி
ஈசராம்.
சீர்மைக்கு செப்பனிட்டார்
செழுஞானப் பூசராம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment