Saturday, 22 February 2025

நாட்டு நடப்பு.


 நாட்டு நடப்பு.

நாட்டுல என்ன நடக்குது.
வீட்டுல கேட்டாத் தெரியுது.
போனுல எல்லாம் காட்டுது.
புரியாதும் புரிஞ்சு சிரிக்குது.

பழையக் காலம் வாழ்ந்தவர்
படம் பாத்து ஓட்டுப் போட்டனர்.
படிக்கத் தெரிஞ்சக் காலமிது.
விடியலைத் தேடி ஏங்குது.
 
அந்தக் காலம் ஆகாயப் பேச்சு,
அந்த வேளையே மறந்தும் போச்சு.
இந்தக் காலம் மூச்சுக் காற்றும்
எந்திரப் பதிவு இருப்பில் ஏற்றும்

அன்றன்று பேசியது அன்றோடு
இன்றுச் சொன்னதும் இன்றோடு
எதையும் மறுத்தால் ஒப்பாது.
அதையும் பதியத் தப்பாது.

எந்தக் காலமும் சாட்சியாம்.
சொந்தக் குரலாகச் சத்தியம்.
வானம் காற்றும் உள்ளவரை
வாய்மொழிப் பதிவு மாறாது.

யாரோப் பேசியப் பேச்சல்ல
வேறேக் குரலின் வீச்சல்ல,
ஊரே வீசும் மூச்சல்லவோ!
நேரேயே தெறிக்க விடலாமோ!

மனத்தின் சாட்சி மாண்டும் போமோ!
மறந்தும் பேச மீண்டும் துணியுமோ!
காற்றில் கலந்து வானம் பரவும்
பேச்சும் மறந்தும் மானம் ஆமோ!

கொ. பெ. பிச்சையா.



பழனி சாமி முடிக்கட்டும்!

நாட்டுப்புறப் பாடல்.


ரெட்டைச் சடைக்காரியே

கொல்லுறியேக் கள்ளியே!

வட்ட விழிக் கொள்ளியே--சுட்டு

வாட்டுறியே  என்னையே!


உன்னப் பெத்தவ யாரடி

எனக்கு அத்தை  அவளடி.

மச்சான் எவனோ பாக்கல!

மாமன் குணத்தக் கேக்கல!


முன்னப் பின்ன அறியல

முறையப் பத்தியும் நினைக்கல.

எப்படி நுழைஞ்சக் கனவுல

இப்படிப் படுத்துற உசுறல.


காந்தக் கண்ணோ இழுக்குற! காரணம் புரியலக் கவுக்குற. சிரிச்சும் சிரிக்காம சிரிக்கிற பறிச்சது மனசு பாவன்டி.


இடுப்பு எங்கடிக் காணல. மடிப்புச் சுங்கடி மறப்புல.

வெடுக்கு நடையின் மிடுக்குல

படபடக்குது மனசுல.


நடப்பது எதுவோ நடக்கட்டும்.

நடந்தும் நலமே விடியட்டும்.

பழனிச்சாமி அருளாலே

பாலும் பழமும் கிடைக்கட்டும்


காத்துல பாவாடை பத்திரம் பாத்துக்கோடி அள்ளுது.

மானம் போகுமோ அஞ்சாதே!

மாமன் என்னை மிஞ்சாது.


கொரனா ஒழிஞ்சும் போனது

குடும்பம் ரெண்டும் கலந்தது.

கோவில் வாசல் திறந்தது.

ஆவது எல்லாம் ஆகட்டும்.

கொ.பெ.பிச்சை யா.

Monday, 17 February 2025

தெரு வீதித் தெய்வங்கள்.

தெருவீதித் தெய்வங்கள்.

தெருவீதித் தெய்வங்கள் உருவான விதமென்ன!
இரக்கம் இல்லா இதயங்கள்
உருவாக்கிய பாவங்கள்.
உறவிருந்தும் ஒதுக்கப்பட்டார்
வரவில்லா காரணத்தால்.
இருந்த தெல்லாம் உதறிவிட்டு
பிறந்த கோலம் ஆகிவிட்டார்.

ஆதாரம் சொத்து இல்லை
அதனாலே சொந்தம் இல்லை.
சேதாரம் செல்வம் போனால்
ஆதாரம் அருகுந் தன்னால்.
தனக் கென்று ஒரு பாகம்
தன்வசம் இல்லாமல் 
ஆதரவு அற்றதால் அநாதை ஆக்கப்பட்டார்.

உடுக்கவும் உடை இல்லை
படுக்கவும் இடம் இல்லை.
உண்ணவும் ஒரு வேளை
எண்ணவும் விதம் இல்லை.
தன் தோலை தான் போர்த்தி
தன் நிழல் தனைக் கிடத்தி
பாரமாய் பூமிக்கு
ஓரமாய் கிடக்கிறார் 

மக்கள் நலம் கொள்கை என்பார்.
மக்கள் ஆட்சி நாடு என்பார்.
தெரு ஓரம் கிடப்பவரை
ஒரு ஓரம் போடு என்பார்.
அநாதை என யாருமே அவனியில் பிறப்ப தில்லை.
இருந்த தெல்லாம் இழந்த 
பின்னே,
பிறந்தாரும் காப்பாரில்லை.

கருணை உள்ளம் மனிதர் சிலர்
கடவுளாய் வாழ்கிறார்கள்.
தெருவில் இத்தெய்வங்களை
தேடித் தேடி தரிசிக்கிறார்கள்.
பணம் பொருள் பசி தீர்த்து
மனித நேயம் காக்கிறார்கள்.
மனம்போல் வாழ்கவென மனிதராகத் தொடர்கிறார்கள்.

கொ.பெ.பிச்சையா.

கண்டு கொள்ளப் படாத கலைஞர்கள்.

தெருக் கலைஞன்.

என்னயிதுக் கொடுமையோ ஏனிந்த நிலைமையோ!
கண்டுக் கொள்ள நாதி இல்லையோ!
கருணைக்கும் இரசனை
இல்லையோ!
கடவுளின் கண்களிலும்
படவில்லையோ!

கலைத் திறன் வரம் பெற்றார்
அலைப் போலும் அலைய லுற்றார்.
தெருவிலே பாடவும் வித்தைகள் ஆடவும்
சித்திரம் முதலிய செய்யொனாக் கலைகளும்
பிச்சைக்குக் கெஞ்சிடும்
இலச்சைக் கென்ன பஞ்சமோ!

பக்க வாத்தியம் ஏதும் இல்லை.
சுதி சுத்தம் பேதம் இல்லை.
வண்ணங்கள் கிண்ணம் இல்லை.
வரையவும் தூரி இல்லை.
எண்ணம் போல் ஏகலைகள்
எல்லாமே திரு வினைகள்.
அன்னம் பெறச் செய் மொழிகள்,
என்ன வேறு இவர் வழிகள்.

கலைத்தாய் பிள்ளைக்கு விலை யென்ன விதிப்பிலையோ!
வாங்கும் சக்தி எவருக்கும் தாங்கும் யோகம் இல்லையோ!
தெருக்கலை தெய்வீகம்
அருங்கலை அவர் யாகம்,
வயிற்றுக்கு இயன்ற கலை முயன்றவரை வாழ்வென்றார்.

இரயில் வண்டிப் பாடகர்கள் முயன்ற சிலர் வாழ்க்கை முறை,
வியக்கும்படி உயர்ந்ததும் விளங்கியரும் சிலருண்டு.
ஆனாலும் இன்னும் இலட்சம்
வானம் பாடித் தானம் கேட்கும்
கானம் காற்றில் மானம் காக்கும்.

கொ.பெ.பிச்சையா.





























Sunday, 16 February 2025

ஒன்னம்மாள் மந்திரம்.

ஸ்ரீ வீர ஒன்னம்மாள் ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம்
.(நூற்று எட்டு வரிகள்)

1)இமயம் பிளந்து எழுதீ பிறந்தாய்
உமையாள் மகளே ஒன்னம்மாள்.
அமையும் உலகின் அனுப்பர் புதல்வி
இமையாய்க் காவல் ஒன்னம்மாள்.

2)கங்கை யமுனை கரைகள் ஆண்டு
தங்கம் அறிந்த ஒன்னம்மாள்.
துங்கம் பரவி எங்கும் உலவும்
சிங்கத் தலைவி ஒன்னம்மாள்.

3)வீரம் விதைத்து தீரம் வளர்த்து
விந்தியம் தாண்டிய ஒன்னம்மாள்
அரணும் படைத்து அனுப்பனை மணந்து
ஆட்சி அமைத்தாய் ஒன்னம்மாள்.

4)அட்டிய தொட்டன் அய்யன் மனையாள்
அம்மா அரசியே ஒன்னம்மாள்.
பற்றிய பலுத்தன் பகையினை வென்று
பாவையை மீட்டாய் ஒன்னம்மாள்.

5)சோளியோர் வம்சம் சுடற்கொடி ஆண்டாள்
மாலவி அம்சம் ஒன்னம்மாள்.
ஆயர்பாடி அனுப்பரின் கூட்டம்
தாயார் நீயே ஒன்னம்மாள்.

6)முள்ளால் கோட்டை பெல்லார் நாட்டை
சொல்லால் ஏற்றிய ஒன்னம்மாள்.
வல்லான் காட்டிய நல்லார் பாட்டை
கொள்ளோர் போற்றிய ஒன்னம்மாள்.

7)கன்னடம் கடந்தும் பன்நிலம் பரந்தும்
தென்நிலம் உறைந்தாய் ஒன்னம்மாள் .
கொண்டிடம் தமிழும் மன்றிடம் நிறைந்தும்
நின்றிடம் நிலைத்தாய் ஒன்னம்மாள்.

8)பகவான் அருளும் இகம்பெற பொருளும்
தகவாய் பெருக்கிய ஒன்னம்மாள்.
அகமும் புறமும் அன்பே உருக்கும்
மகிமைத் திறமும் ஒன்னம்மாள்.

9)செந்நிறக் குருதி தண்ணீராய் ஓடிய
பெண்ணாறு கண்டாய் ஒன்னம்மாள்.
தன்னறம் கொண்டும் பொன்கரம் மொண்டும்
உண்ணீர் செய்தாய் ஒன்னம்மாள்.

10)வியந்தான் மன்னன் விசயபுரத்தான்.
நயந்தான் சொல்லில் ஒன்னம்மாள்.
உயர்ந்தான் தோளன் தொட்டன் அவற்கு
முயன்றாய் ஆட்சி ஒன்னம்மாள்.

11)ஆநிரை மேய்த்து அட்டிகள் பெருக்கினர்
தானிறை அனுப்பர் ஒன்னம்மாள்.
வானிறை வையம் வல்லமை முறுக்கவும்
மேநிறை கொடுத்தாய் ஒன்னம்மாள்.

12)அடையா மழையால் அணைகள் உடைய
படையாய் அடைத்தாய் ஒன்னம்மாள்.
கொடையாய் நாட்டைக் கொடுத்தான் மன்னன்
விடையாய் விபூதி ஒன்னம்மாள்.

13)நாடெங்கும் நல்ல மழையும் பெய்ய
நல்வரவு கொள்ள ஒன்னம்மாள்.
காடெங்கும் கானம் அலையும் செய்ய
வீடெங்கும் வாழ்வே ஒன்னம்மாள்.

14)நல்லார் நன்மை பேரும் பெற்றாய்
பொல்லார் புகைய ஒன்னம்மாள்.
கொள்ளோர் உண்மை கொற்றம் முன்னே
தில்லார் நிறுவினை  ஒன்னம்மாள்.

15)அதிகாரம் பெற்றார் அனுப்பர் எல்லாம்
கதியாவும் தந்தாய் ஒன்னம்மாள்.
சதிமோசம் செய்தான் சண்டாளன் மல்லன்
விதிதோசம் ஏற்றாய் ஒன்னம்மாள்;

16)சத்திய வழியில் லட்சியப் பணியில்
நித்தியம் வாழ்ந்தாய் ஒன்னம்மாள்
உத்தம நெறியில் நிச்சயத் துணிவில்
பற்றினை நெருப்பை ஒன்னம்மாள்.

17)வேல மரங்கள் நாலா புறங்கள்
வீழவும் முழங்கினை ஒன்னம்மாள்.
சூழத் தீயதில் ஞாலம் அதிரவே
சூளுரை செய்தாய் ஒன்னம்மாள்.

18)மேகம் கூடி ஆகமம் முழங்க
வேகம் சிவந்தாய் ஒன்னம்மாள்.
யாகம் இதுதான் ஆகம் வழங்க
தேகம் துணிந்தாய் ஒன்னம்மாள்.

19)வானவர் பதைக்க ஏனென விளக்க
கோனவன் துடிக்க ஒன்னம்மாள்.
மானம் பெரிதென வாழ்பவர் அனுப்பர்
வானிலை சபதம் ஒன்னம்மாள்.

20)சத்தியம் காக்கும் உத்தமர் அனுப்பர்
நிச்சயம் செய்தாய் ஒன்னம்மாள்.
குற்றங்கள் செய்யா குலமென்று அனுப்பர்
பெற்றினைத் தந்தாய் ஒன்னம்மாள்.

21) புதல்வன் பொட்டியன் பொறுப்பினை பெற்றதும்
முதல்வன் அட்டியனுடன் ஒன்னம்மாள்.
தகதக நெருப்பின் தங்கக் குதிரையில்
சகமாய் அமர்ந்தாய் ஒன்னம்மாள்.

22)அக்கினிக் கருவில் அவதாரம் ஆக்கினை.
அக்கினிப் பிறவி ஒன்னம்மாள்.
இக்குலம் அனுப்பர் நற்குலம் தேக்கினை
மற்பலம் உரக்க ஒன்னம்மாள்.

23)உறுமி முழக்கம் பெருகி முழக்க
புரவி பறக்க ஒன்னம்மாள் .
வானம் தொடவும் வளரும் நெருப்பில்
வலம்வரும் தாயே ஒன்னம்மாள்.

24)வானோர் பூமழை வாரியும் இறைக்க
தானுடல் தவிர்த்த ஒன்னம்மாள்.
மாயோன் அவனே மன்னவன் தொட்டன்
நாயகி பறந்தாய் ஒன்னம்மாள்.

25)தொட்டன் இராயன் பட்டம் விளங்க
பெற்றனை ஆணை ஒன்னம்மாள்.
அனுப்பர் என்றால் அடையாளம் உறுமி
தனிப்புகழ் அருளினை ஒன்னம்மாள்.

26)கிளைகள் வகுத்து தழைகள் தொகுத்து
உறவுகள் இணைத்தாய் ஒன்னம்மாள்.
வரங்கள் வழங்கி வாக்கும் விளங்க
அறங்கள் அருளினை ஒன்னம்மாள்.

27)பரந்து வாழ்ந்தும் மரபு நிறைந்தும்
அறியும் தெய்வம் ஒன்னம்மாள்.
அனுப்பர் குலத்தின் ஆதாரம் அறிந்தும்
இணைக்கும் பலமே ஒன்னம்மாள்.
----------'----'''''''-------------'--''''"''"''''----------------
ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம் (பாகம் இரண்டு)

ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!
ஆதி முதலாய் நீதி செய்த
அம்மா அனுப்பாள் ஒன்னம்மாள்.
மேதினில் ஆதியாய் வேதியம் கண்ட
மேலான குலத்தாள் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

வாழும் ஒழுக்கம் ஆளும் வழக்கம்
ஞாலம் பழக்கிய ஒன்னம்மாள்.
குடும்பம் கூட்டம் ஊரும் நாடும்
குலமுறை அமைத்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

சத்திய வாக்கு உத்தமம் ஆக்கும்
பத்தினித் தெய்வம் ஒன்னம்மாள்.
தொட்டது துலக்கும் இட்டது விளங்கும்
உத்தமித் தாயே ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

அனுப்பர் என்றால் அறவோர் என்பார்
மனுகுலம் கண்டாய் ஒன்னம்மாள்.
அறம்பாடி என்பார் ஆக்கினை பெற்றார்
திறம்தேடி தந்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
அனுப்பர் வாழும் அவனி எங்கும்
அமைதி நிலைக்க ஒன்னம்மாள்.
வளமும் வளர்ச்சியும் வல்லமை பயிற்சியும்
நலமும் எல்லாம் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.

கொ.பெ.பி.அய்யா.

மந்திரமாய் இசைத்துப் பாட குல ஒற்றுமை
நன்மை உண்டாகும்..

கருத்து வரவேற்கப்படுகிற
.(நூற்று எட்டு வரிகள்)

1)இமயம் பிளந்து எழுதீ பிறந்தாய்
உமையாள் மகளே ஒன்னம்மாள்.
அமையும் உலகின் அனுப்பர் புதல்வி
இமையாய்க் காவல் ஒன்னம்மாள்.

2)கங்கை யமுனை கரைகள் ஆண்டு
தங்கம் அறிந்த ஒன்னம்மாள்.
துங்கம் பரவி எங்கும் உலவும்
சிங்கத் தலைவி ஒன்னம்மாள்.

3)வீரம் விதைத்துத் தீரம் வளர்த்து
விந்தியம் தாண்டிய ஒன்னம்மாள்
அரணும் படைத்து அனுப்பனை மணந்து
ஆட்சி அமைத்தாய் ஒன்னம்மாள்.

4)அட்டிய தொட்டன் அய்யன் மனையாள்
அம்மா அரசியே ஒன்னம்மாள்.
பற்றிய பலுத்தன் பகையினை வென்று
பாவையை மீட்டாய் ஒன்னம்மாள்.

5)சோளியோர் வம்சம் சுடற்கொடி ஆண்டாள்
மாலவி அம்சம் ஒன்னம்மாள்.
ஆயர்பாடி அனுப்பரின் கூட்டம்
தாயார் நீயே ஒன்னம்மாள்.

6)முள்ளால் கோட்டை பெல்லார் நாட்டை
சொல்லால் ஏற்றிய ஒன்னம்மாள்.
வல்லான் காட்டிய நல்லார் பாட்டைக்
கொள்ளோர் போற்றிய ஒன்னம்மாள்.

7)கன்னடம் கடந்தும் பன்நிலம் பரந்தும்
தென்நிலம் உறைந்தாய் ஒன்னம்மாள் .
கொண்டிடம் தமிழும் மன்றிடம் நிறைந்தும்
நின்றிடம் நிலைத்தாய் ஒன்னம்மாள்.

8)பகவான் அருளும் இகம்பெற பொருளும்
தகவாய் பெருக்கிய ஒன்னம்மாள்.
அகமும் புறமும் அன்பே உருக்கும்
மகிமைத் திறமும் ஒன்னம்மாள்.

9)செந்நிறக் குருதி தண்ணீராய் ஓடிய
பெண்ணாறு கண்டாய் ஒன்னம்மாள்.
தன்னறம் கொண்டும் பொன்கரம் மொண்டும்
உண்ணீர் செய்தாய் ஒன்னம்மாள்.

10)வியந்தான் மன்னன் விசயபுரத்தான்
நயந்தான் சொல்லில் ஒன்னம்மாள்.
உயர்ந்தான் தோளன் தொட்டன் அவர்க்கு
முயன்றாய் ஆட்சி ஒன்னம்மாள்.

11)ஆநிரை மேய்த்து அட்டிகள் பெருக்கினர்
தானிறை அனுப்பர் ஒன்னம்மாள்.
வானிறை வையம் வல்லமை முறுக்கவும்
மேநிறை கொடுத்தாய் ஒன்னம்மாள்.

12)அடையா மழையால் அணைகள் உடைய
படையாய் அடைத்தாய் ஒன்னம்மாள்.
கொடையாய் நாட்டைக் கொடுத்தான் மன்னன்
விடையாய் விபூதி ஒன்னம்மாள்.

13)நாடெங்கும் நல்ல மழையும் பெய்ய
நல்வரவு கொள்ள ஒன்னம்மாள்.
காடெங்கும் கானம் அலையும் செய்ய
வீடெங்கும் வாழ்வே ஒன்னம்மாள்.

14)நல்லார் நன்மை பேரும் பெற்றாய்
பொல்லார் புகைய ஒன்னம்மாள்.
கொள்ளோர் உண்மை கொற்றம் முன்னே
தில்லார் நிறுவினை  ஒன்னம்மாள்.

15)அதிகாரம் பெற்றார் அனுப்பர் எல்லாம்
கதியாவும் தந்தாய் ஒன்னம்மாள்.
சதிமோசம் செய்தான் சண்டாளன் மல்லன்
விதிதோசம் ஏற்றாய் ஒன்னம்மாள்;

16)சத்திய வழியில் லட்சியப் பணியில்
நித்தியம் வாழ்ந்தாய் ஒன்னம்மாள்
உத்தம நெறியில் நிச்சயத் துணிவில்
பற்றினை நெருப்பை ஒன்னம்மாள்.

17)வேல மரங்கள் நாலா புறங்கள்
வீழவும் முழங்கினை ஒன்னம்மாள்.
சூழத் தீயதில் ஞாலம் அதிரவே
சூளுரை செய்தாய் ஒன்னம்மாள்.

18)மேகம் கூடி ஆகமம் முழங்க
வேகம் சிவந்தாய் ஒன்னம்மாள்.
யாகம் இதுதான் ஆகம் வழங்க
தியாகம் துணிந்தாய் ஒன்னம்மாள்.

19)வானவர் பதைக்க ஏனென விளக்க
கோனவன் துடிக்க ஒன்னம்மாள்.
மானம் பெரிதென வாழ்பவர் அனுப்பர்
வானி ஐக்லை சபதம் ஒன்னம்மாள்.

20)சத்தியம் காக்கும் உத்தமர் அனுப்பர்
நிச்சயம் செய்தாய் ஒன்னம்மாள்.
குற்றங்கள் செய்யா குலமென்று அனுப்பர்
பெற்றினைத் தந்தாய் ஒன்னம்மாள்.

21) புதல்வன் பொட்டியன் பொறுப்பினை பெற்றதும்
முதல்வன் அட்டியனுடன் ஒன்னம்மாள்.
தகதக நெருப்பின் தங்கக் குதிரையில்
சுகமாய் அமர்ந்தாய் ஒன்னம்மாள்.

22)அக்கினிக் கருவில் அவதாரம் ஆகினை
அக்கினிப் பிறவி ஒன்னம்மாள்.
இக்குலம் அனுப்பர் நற்குலம் ஆக்கினை
மற்பலம் உரக்க ஒன்னம்மாள்.

23)உறுமி முழக்கம் பெருகி முழக்க
புரவி பறக்க ஒன்னம்மாள் .
வானம் தொடவும் வளரும் நெருப்பில்
வலம்வரும் தாயே ஒன்னம்மாள்.

24)வானோர் பூமழை வாரியும் இறைக்க
தானுடல் தவிர்த்த ஒன்னம்மாள்.
மாயோன் அவனே மன்னவன் தொட்டன்
நாயகி பறந்தாய் ஒன்னம்மாள்.

25)தொட்டன் இராயன் பட்டம் விளங்க
பெற்றனை ஆணை ஒன்னம்மாள்.
அனுப்பர் என்றால் அடையாளம் உறுமி
தனிப்புகழ் அருளினை ஒன்னம்மாள்.

26)கிளைகள் வகுத்து தழைகள் தொகுத்து
உறவுகள் இணைத்தாய் ஒன்னம்மாள்.
வரங்கள் வழங்கி வாக்கும் விளங்க
அறங்கள் அருளினை ஒன்னம்மாள்.

27)பரந்து வாழ்ந்தும் மரபு நிறைந்தும்
அறியும் தெய்வம் ஒன்னம்மாள்.
அனுப்பர் குலத்தின் ஆதாரம் அறிந்தும்
இணைக்கும் பலமே ஒன்னம்மாள்.
----------'----'''''''-------------'--''''"''"''''----------------
ஸ்ரீ வீர ஒன்னம்மாள் மந்திரம் (பாகம் இரண்டு)

ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!
ஆதி முதலாய் நீதி செய்த
அம்மா அனுப்பாள் ஒன்னம்மாள்.
மேதினில் ஆதியாய் வேதியம் கண்ட
மேலான குலத்தாள் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

வாழும் ஒழுக்கம் ஆளும் வழக்கம்
ஞாலம் பழக்கிய ஒன்னம்மாள்.
குடும்பம் கூட்டம் ஊரும் நாடும்
குலமுறை அமைத்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

சத்திய வாக்கு உத்தமம் ஆக்கும்
பத்தினித் தெய்வம் ஒன்னம்மாள்.
தொட்டது துலக்கும் இட்டது விளங்கும்
உத்தமித் தாயே ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

அனுப்பர் என்றால் அறவோர் என்பார்
மனுகுலம் கண்டாய் ஒன்னம்மாள்.
அறம்பாடி என்பார் ஆக்கினை பெற்றார்
திறம்தேடித் தந்தாய் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய ஒன்னு ஜெய ஜெய ஒன்னு
சுபமே அனுப்பரின் சொந்தமே வாழ்க!

ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
அனுப்பர் வாழும் அவனி எங்கும்
அமைதி நிலைக்க ஒன்னம்மாள்.
வளமும் வளர்ச்சியும் வல்லமை பயிற்சியும்
நலமும் எல்லாம் ஒன்னம்மாள்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.
ஜெய ஜெய மங்களம் ஜெய ஜெய மங்களம்
ஜெயமே அனுப்பர் உன்குலம்.

கொ.பெ.பி.அய்யா.

மந்திரமாய் இசைத்துப் பாட குல ஒற்றுமை
நன்மை உண்டாகும்..

கருத்து வரவேற்கப்படுகிற

Saturday, 15 February 2025

முருகன் கவசம்.

முருகன் கவசம்

புன்னகை கண்டேன்  மின்னொளி என்பேன.
பொன்னிறம் கண்டேன் உன்னிறம் வியந்தேன்.    விண்ணெழில் கண்டேன். 
உன்னெழில் வரைந்தேன்.

சிலையாக் கண்டேன்!
கலையேக் கண்டேன்.
கலையாக் கண்டேன்!
அழகேக் கண்டேன்.
அழகாக் கண்டேன்!
தமிழேக் கண்டேன்.

தமிழாக் கண்டேன்
தத்துவம் கண்டேன்.
வேலாக் கண்டேன் 
வினைதீரக் கண்டேன்.
சமர்தோள் கண்டேன் 
திமிரைக் கொண்டேன். 

மயில் மேற்கண்டேன் 
மனம்மகிழ் வென்றேன்.
கயல்விழி வள்ளியின்
கருணை கண்டேன்.
வயல்வெளி நெல்லாய் 
வாரிக் கொண்டேன்.

சேவல் கூவிடும் 
செருக்குடன் இணைந்தேன்.
ஆவல் கூடிய
முறுக்குடன் முனைந்தேன்.
ஏவல் விடுத்தால்
இமயமும் எடுப்பேன்.

பன்னிரு விழிகளும் ,
பன்னிரு கரங்களும்,
உன்னெழில் காணவும்;
 உன்னடி தொழவும்:
தண்ணருங் கருணை
தயவால் வாழ்வேன்.

மங்களம் பாடி 
வணங்கிட விழைந்தேன்.
நன்கலம் கூடி 
வன் கடல் கடந்தேன்.
உன்னருள் தேடவும் 
உன்புகழ் பாடவும்,
என்னெஞ்சும் நாவும்
உன்னடி கிடக்கும்.

அருட்பா கவசம் 
திருநீர் வாசம்:
கேட்கவும் நுகரவும் செவிமூக்குங் காக்க!
பாடவும் நாடவும்
வாய் கால் காக்க!

எண்ணவும் ஏற்கவும்
இதயம் காக்க!
காணவும் வேண்டும்
கண்கள் கரங்கள் காக்க!
திருநீர் இட்டிட
திரு நெற்றிக் காக்க!

குன்றந் தோறும் குடிகொண்ட முருகா!
கண்டுந் தேறும் கடையிந்த பிறப்போ!
கொண்டு ஏறும் கொடைநல் உறுப்புகள்:
வந்தும் வந்தும் வழிபடக் காக்க!

இயக்கும் சக்தி இயங்கும் முறைகள்,
இயல்பில் மலசலம் கழிக்கும் வழிகள்;
வயிறும் மார்பும் உள்ளாடும் பொறிகள்:
பயக்கும் செயல்கள் நயமுறக் காக்க!

கருணைக் காதல் ஞானம் வீரம்,
துறவுச் சாந்தம் கூறும் விதஙுகள்;
அறுபடை வீடுகள் அறுவருள் முகங்கள்:
உறுவினை அறுக்கும் அருட்கொடைத் தலங்கள்.

ஏவல் நீதான் எதுவரை பெறுவேன்?
காவல் நீதான் அதுவரை தொடர்வேன்.
மேவல் கொண்டேன் ஆவல் துறந்தேன்:
நோவது மறந்தேன் குகனடி நிறைந்தேன்.

பாவம் என்றோர் பழிச்சொல் நீக்கு!
சாபம் தந்தோர் கோபம் போக்கு!
தீபம் உள்ளொளிர் ஆண்மா ஆக்கு!
தூபம் உன்னடி சரணென் காப்பு.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 14 February 2025

அம்மா உன் மூச்சு.

அம்மா உன் மூச்சு.

அம்மா அம்மா உன்னோட மூச்சு.
அது தானம்மா என்னோடப் பேச்சு.
அம்மா உந்தன் சுவாசக் காற்று
அதுதானம்மா என்னுசுர் ஊற்று.
அம்மா உன்பாசம் ஆகாயத்தும் மேலே!


என்னோட உசுரு உன்னோடக் கனவு.
உன்னோட ஆசை என்னோட வாழ்வு.
என்னோடப் பிறப்பு உன்னோட உயிர்ப்பு.
உன்னோடச் சிரிப்பு என்னோடப் பிறப்பு.
.
பெண்ணா நீ பிறந்ததாலும்
பாவம் என்றும் எண்ணலயே!
வாங்கி வந்த வரம் என்றே
தாங்கி என்னை ஈன்றாயே!

புருசஞ் செஞ்ச கொடுமைகள்
பெருசா ஏதுங் கொள்ளாமல்.
வரமா என்னைக் கொடையாக
தவமாப் பயனாய் பெற்றாயோ!

பேறுகால வலியவிட  பெரிய கொடுமை வேறில்லை.
ஆறுதலாய் நான் பிறந்தேன்
தேறுதலாய்  வளர்த்தாயே!
காலைப் பொழுது புலர்ந்த வேளை
புதிய நாள் வரவாக நானுந்தான் மலர்ந்தேனோ!

புதியவன் நானும் என்னாலே 
அம்மா உனக்கு என்ன செய்தேன்?
கண்ணில் என்னைக் கண்டாயோ!
தன்னில் வலியை 
மறந்தாயோ!
உன்னால் ஒருவன்  விருந்தாளி 
உலகில் நானும் பிறந்தேனோ!

தாயே உன்னை நோயாக்கி தரைமேல் விழுந்து
அழுதேனோ!
வேதனைகள் எல்லாம் சாதனையோ!
வென்றது யார்? நீயா நானா?

மார்பில் என்னை அள்ளினாய்.
மனதுள் மகிழ்ந்து துள்ளினாய்.
நேர்ந்த இன்னல் மறந்தாயோ!
தூர்ந்தும் எல்லாம் மறைந்தனவோ!

உதிரத்தை எனக்குப்
பாலாக்கி-என்
சதுரத்தை வளர்த்து ஆளாக்கி
மனிதனாய் என்னை வளமாக்கி
வாழ வைத்தாய் என் தாயே!

சேலையில் வரிந்து துயில் கட்டி
சீமானாய் நினைந்து பாட்டுக் கட்டி
சோலை நிழலில் தாலாட்டி
சொக்க விட்ட அம்மா! அம்மா!

வேலை வெய்யில் 
வேர்த்தூற்றி,
நாளை எனக்காய் நேர்ந்தாற்றி
பாடுப்பட்டுச் சீராட்டிப் பாலூட்டி,
வாலிபனாக்கி வளர்த்து விட்ட: அம்மா!அம்மா!

தாயே தாயே  நீ தானம்மா!
தந்த தமிழ் சொல் நீயே அம்மா!
வாயுள்ள பிள்ளை ஆனேன் 
அம்மா
 வையம் வாழ்த்த வாழ்கிறேன் அம்மா!அம்மா!

அப்பனுக்கு இணையாத் தப்பாமல் நீயும்
சொப்பனத்திலுங் கூட சோராமல் தாயே!
எப்பவுமே எனக்காய் உழைத்தாய்.
ஒப்பிட முடியாத உயரம் வைத்தாய் அம்மா!அம்மா!

நானும் உனக்குப் பிள்ளையாக
ஏனோ பிறந்தேன் பாக்யமே!
என்ன தவந்தான் செய்தேனோ!
உன்னைத் தாயாய்ப் பெற்றேனே!

வேறென்ன தெய்வம் வேண்டுவேன்!
பேரென்ன ஊரென்ன உனை விடவா!
என் குலத்தெய்வம் நீயம்மா!
பின்புலம் எனக்குத் தாயம்மா!

எல்லாம் எனக்கு நீ தானே!நீ
இல்லை என்றால் நான் என்னாவேன்!
நானும் உனக்கு என்ன செய்தேன்?++எனக்குப்
பெண்ணாய் மகளாய் பிறந்து
வா! அம்மா! அம்மா!

பாலூற்றி அனுப்பவா வந்தேன்! !
பாவி நான் பாசமகன்.
அம்மா!அம்மா!
தீயேற்றிக் காலாற்றத் 
தாயே வாரேன் காடு வரை. 
அம்மா!அம்மா!

கொள்ளி கொண்டு பாவி நான்
அள்ளிக் கொஞ்சிய தாயுனக்கு
கொள்ளியிடும் பிள்ளை நான்...
பாலூற்றி அனுப்புகிறேன்.
பாவி நான் பாசமகன்.
போய் வா!அம்மா!அம்மா!

கொ. பெ. பிச்சையா.

Thursday, 13 February 2025

அம்மா என்றால் ஆரம்பம்.

அம்மா என்றால் ஆரம்பம்.

'அம்மா' எந்தன் முதல் பேச்சு,
ஆரம்பம் அதுவே அழைப் பாச்சு.
அன்பின் ஆதாரம் அவதாரமே!
ஆசாரம் இறைவி நீ ஆதாரமே!

உயிரின் இயக்கம் மூச்சு நீ!
உடலின் வடிவச் சிற்பி நீ!
உன்னை உணவு  ஆக்கி நீ!
என்னைப் படைத்த சக்தி நீ!

எண்ணும் எழுத்தும் பழக்கம் நீ!
கண்ணும் கருத்தும் விளக்கம் நீ!ண்
பேசும் பேச்சு  அறிமுகம் நீ!
பாசை அழகுத்  தமிழும் நீ!

ஐயம் தீர்த்த ஆசான் நீ! 
மெய்யாம் கீர்த்தி ஞானி நீ!
ஐந்தில் வளைத்தாய் பயிற்சி நீ!
ஆக்கம் நிமிர்த்தாய் முயற்சி நீ!

அருமருந்தாய் அமிர்தம் ஊட்டினாய்.
வரும் பிணிக்குத் தடைப் பூட்டினாய்!
பசித் தழுத முதல்க் குரலை
இரசித் தணைத்து முத்தம் பதித்தாய்!
 
ஒலியும் மொழியும் அம்மா நீ!
ஒளியும் வழியும் அம்மா நீ!
 வாழ்வும் வாழ்த்தும் அம்மா நீ!
ஆக்கம் ஊக்கம் அம்மா நீ!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

சின்னக் குட்டி சிமிட்டி

சின்னக்குட்டி சிமிட்டி

சின்னக்குட்டி சிமிட்டி
என்னடி சொல்லுற சிரிக்கி.
உம்மேலதான் நெனப்பா
உருகி அலையுறேன் கிருக்கா
நெருங்கி வாடி சுருக்கா

ரோசாப் பூவு வாசமடி,
ராசா என்னோட நேசமடி,
ஆசை மனசுல ஏங்குதடி
அணைத்திடக் கைகள் நோங்குதடி.
இணைந்திட இதயம் துடிக்குதடி

தேருல போகுற தேவியோ!
தெருவுல பாக்குறேன் நேரயோ!
ஊருல யாரடி உன்போலே
பேருல அழகுல நெசத்துல
ஊறுது பெருகுது இதழிலே.

மேலக் காத்து அடிக்குதடி
ஆளப்பாத்து வளைக்குதடி
தூறல் அடைத்து வலுக்குதடி
ஈரப்  பாவாடை துடிக்குதடி
ஊதக் காத்து உசுப்புதடி.

சாரக் காத்து அடிக்குதடி.
சாரல் மழையும் தூருதடி.
ஓரம் ஒதுங்கச் சொல்லுதடி
மறைக்குது மறையுது சூரியன்டி
 நெருங்கி நெருங்கிட
உதவுதடி.

கொ.பெ.பி.அய்யா.