உறங்குமோ தமிழினி!!
இனியெந்தக் கலி வருமோ!
மனிதப்பலி தான் பெறுமோ!
ஏரோதன் ராசபச்சே
போலொரு பாவியெவனோ!
மனித உரிமை செத்ததோ!
இனம் வேட்டை ஆனதோ!
கொத்துக் கொத்தாய் தமிழ்க்குலமோ!
கொல்லப்பட்டு அழிந்ததோ!.
குடும்பங்கள் சிதைந்ததோ!
குழந்தைகளும் அனாதையோ!
விதவையாகிப் பெண்களும்
விலையாகி இழிந்ததோ!
சேரமறுக்கும் பெண்டீரை
சேலை நீக்கி சிதைத்ததோ!.
பச்சிளங் குழந்தைகளை
பாலியிலில் வதைத்ததோ!
வீடிலிழந்த கொடுமையாச்சோ!
காடழிந்து கழனி போச்சோ!
உணவைப் பற்றிப் பறித்ததோ!
துணிகள் கொட்டி எரித்ததோ!
கணவன் முன் கற்பழித்தும்
காட்சிகளும் இரசித்ததோ!
பிணமான பின்னுங்கூட
பிறப்புறுப்பைக் கடைந்ததோ!
பள்ளி செல்லும் வயதிலே
துள்ளி ஆடும் பிஞ்சுகளோ!
கொள்ளி வயிற்றுப் பசியிலே
கிள்ளி மண்ணைத் தின்றதோ!
படிக்கும் பள்ளிக் குச்சுகள்
இடித்துத்தான் நொறுக்கியும்.
மருத்துவம் செய் மனைகள்
நொறுக்கியும் இடித்ததோ! ..
இறந்த மனித உறுப்புக்களை
தெருநாய்க்கு எறிந்ததோ!
பருவநிலை மங்கையரை
சிறு முலைகள் திருகியதோ!.
பாலுக்கழும் குழந்தைகளை
கால் கசக்கி நசுக்கியதோ!
பால் கொடுக்கும் தாயினை
படுக்கையில் புதைத்ததோ!
அங்கங்கு குண்டு மழை
அப்பாவி சாவுகள்.
ஆள் கடத்தல் கொலையென
நாள் தோறும் நிகழ்வுகள்.
கண்ணீரே உண்நீரோ!
செந்நீரே மண்நீரோ!
நிலம் சிவந்தும் உவர்ப்பாச்சோ!
களம் பரந்தும் சவமாச்சோ!
களம் பரந்தும் சவமாச்சோ!
இப்படியும் கொடுமைகளோ!
இன்னும் நாம் அடிமைகளோ!
பிழைப்புக்கு தமிழ் பேசும்
களப்பிரரை நம்பலாமோ!
உரிமைகள் பறிக்கப்பட்டால்
உருவாகிறான் போராளி!!
உயிர் கொடுக்க அஞ்சுவனோ!
தனை விதைக்க மிஞ்சுவனோ!
தீமைகள் தீண்டும்போது
ஊமைகளும் வாய் திறக்கும்!
மானம் கெட்டும் வாழாது
ஊனம் பட்டும் வீழாது.!
ஏரோதை ஒழித்திடத்தான்
ஏசுவே பிறந்து வந்தார்.
கீசகனை அழித்திடத்தான்
கிருட்டிணரே அவதரித்தார்.
பரங்கியரை விரட்டிடத்தான்
பரதேசி காந்தி வந்தார்!
வேலுப்பிள்ளை பிரபாகரன்
ஈழம் கொள்ள பிறப்பெடுத்தான்.
வேலுப்பிள்ளை பிரபாகரன்
ஈழம் கொள்ள பிறப்பெடுத்தான்.
தமிழனென்று பெருமைதானோ!
தரணியின் வரலாறோ!
பிரபாகரன் தீரன்தானோ!
ஒருவீரன் தானவனோ!
தரணியின் வரலாறோ!
பிரபாகரன் தீரன்தானோ!
ஒருவீரன் தானவனோ!
வலிபட்ட காயங்களோ!
பலி தந்த கோபங்களோ!
உறங்குமோ தமிழினி
பெறுவதெங்கள் ஈழம் தனி!
கொ.பெ,பி.அய்யா.
No comments:
Post a Comment