Wednesday, 25 December 2013

மூன்றே மூன்று மட்டும்.

மூன்றே மூன்று மட்டும்!!!

சிந்தனை பட்டு சீர்கெட்டு நிந்தனைக்குட்டும் பெற்று
சிதைந்த பிணமாய் வாழ்வதற்கோ---ஈன்றாள்
உந்தனை! உணர்வாயோ! உணர்ந்தும் திருந்துவாயோ!
கந்தையே! கசடனே! குடிகாரனே!
=================================================
மக்களை மாக்களாக்கி  மதிகெடுத்து விதியிதற்கு
இக்கதியாக்கி ஏவலாக்கி வாழ்கிறீர்----இவர்
வருந்தினாலும் திருந்தினாலும் வாழ்க்கை உமக்கேது!
இருந்திடட்டும் தொண்டர்கள் இப்படியே!
===================================================
வெள்ளையரிடம் பெற்றசுதந்திரம் சிக்கயதோ பாவம் கொள்ளையரிடம்! அள்ளுகிறார் அவரே------மிஞ்சுமோ
கல்லும்மண்ணும் குடிசைவாழும் அப்பாவியற்கும்!
சொல்லுங்கள்  சனநாயக சமுதாயமே!
=====================================================

கொ.பெ.பி.அய்யா



No comments:

Post a Comment